Published:Updated:

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

Published:Updated:
சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

திருப்புகழில் மோடி!

இந்தியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கிறார் நரேந்திர மோடி. மோடி என்ற சொல்லுக்கு பிணக்கு, மேட்டினம், மௌடி, வேடிக்கை, வனத்தில் வாழும் காளி, செருக்கு, ஆடம்பரம், கம்பீரம், திப்பிலி மூலம் (நாட்டு மருந்து) என்று பல அர்த்தங்கள் தமிழ் அகராதிகளில் காணப்படுகின்றன. பொதுவாக 'காடுகாள்’ அதாவது, 'வனத்தில் வாழும் காளி’ என்ற பொருளில்தான் மோடி என்ற வார்த்தை இலக்கியங்களில் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அருணகிரிநாத சுவாமிகள் திருப்புகழில் அம்பிகையைப் போற்றும்போது 'பங்கமிலா நீலி மோடி; சூலி வயிரவி நீலி மோடி, மகேசுவரி கவுரி மோடி; வாதாடி மோடி; பயிரவிமோடி; ஆலசுந்தரி மோடா மோடி’ என்று ஆறு பாடல்களில் மோடியைக் குறிப்பிடுகிறார் என்பது சுவாரஸ்யமான செய்தி. அதுசரி! அது என்ன 'மோடா மோடி?’ இதற்கு ''ஆடம்பரமுள்ள துர்கை'' என்று அர்த்தமாம். சுவாரஸ்யமான தகவல்தான் இல்லையா?!

- திருப்புகழ் அமுதன்

பூஜையறை டிப்ஸ்!

* கற்பூரத்துடன் மிளகு சேர்த்துவைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும்.

* தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தி மயிலிறகுக்கு உண்டு என்கின்றன ஞானநூல்கள். அதனால், பூஜையறையில் மயிலிறகை வைத்து வழிபடுவது சிறந்தது.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

* மழை நாட்களில்,  தீப்பெட்டி- தீக்குச்சிகள் நமத்துப் போகும். நான்கு - ஐந்து அரிசி மணிகளை உள்ளே போட்டுவைத்தால் தீக்குச்சிகள் நமத்துப் போகாது.

* காலையிலும் மாலையிலும் 'கோதூளி லக்னம்’ எனப்படும் 5 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றுவது மிக நல்லது.

* அப்போது வீட்டின் வாசலுக்கு வெளியேயும் விளக்கேற்றி வைத்தால் தேவதைகளின் ஆசி கிட்டும். விளக்கெண்ணெயும் நெய்யும் கலந்து தீபம் ஏற்றி குலதெய்வத்தை வழிபடுவதால், வீட்டில் சர்வ சுபிட்சங்களும் பெருகும்.

சுந்தரி இளங்கோவன், நீடாமங்கலம்

தெய்விக ராகங்கள்!

வீட்டில் அனுதினமும் பூஜை வேளையில், அஷ்ட லட்சுமிகளையும், உரிய துதிப்பாடல்களை ராகத்துடன் பாடி வழிபடுவது விசேஷம். இதனால் சகல சம்பத்துக்களும் ஸித்திக்கும். அஷ்ட லட்சுமிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு ராகம் உகந்தது.

மகாலட்சுமி- பைரவி

ஆதிலட்சுமி- கரகரப்ரியா

தான்யலட்சுமி - பிலஹரி வித்யாலட்சுமி - புன்னாகவராளி

சந்தானலட்சுமி - கல்யாணி

வீரலட்சுமி - நாட்டை

கஜலட்சுமி - மோகனம்

விஜயலட்சுமி - சண்முகப்ரியா

ஆர்.கண்ணன், சென்னை-33

வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும் பகுதி. 'உங்களுடன்... நீங்கள்.’ அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி சபா', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism