Published:Updated:

திட்டையில் குருப்பெயர்ச்சி விழா!

திட்டையில் குருப்பெயர்ச்சி விழா!

திட்டையில் குருப்பெயர்ச்சி விழா!

திட்டையில் குருப்பெயர்ச்சி விழா!

Published:Updated:
திட்டையில் குருப்பெயர்ச்சி விழா!

நிகழும் ஜய வருடம், வைகாசி-30 வெள்ளிக்கிழமை (ஜூன் - 13) அன்று, மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் ஸ்ரீகுருபகவான். இதையொட்டி, தஞ்சையில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள திட்டையில், ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் அருளும் ஸ்ரீராஜ குருபகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.

ஜூன்- 12 வியாழக்கிழமை அன்று உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடைபெறவுள்ளது. ஜூன் 13 வெள்ளி அன்று காலையில் இருந்து சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. அதேபோன்று ஜூன்- 19 அன்று ஏகதின லட்சார்ச்சனையும், ஜூன் 20 முதல் 23 வரையிலும் தினமும் காலையில் பரிகார ஹோமமும் நடைபெறும். பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை வழிபட்டு திருவருள் பெறலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோவையில் சாஸ்தா பூஜை!

லியுக தெய்வமாய் ஸ்வாமி ஐயப்பன் கோயில் கொண்டிருக்கும் சபரி மலையில் அவன் சந்நிதானத்தில், ஜூன் 16 அன்று மாபெரும் புஷ்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதற்கு மறுநாள் ஜூன் 17 அன்று ஐயன் ஐயப்பனுக்கு லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது.

திட்டையில் குருப்பெயர்ச்சி விழா!

ஸ்ரீமகா சாஸ்த்ரு ஸேவா சங்கத்தின் சார்பில் நடைபெறவுள்ள இந்த வைபவத்தைத் தொடர்ந்து, உலக நன்மையை வேண்டி ஸ்வாமி ஐயப்பனுக்கு ஸகஸ்ர கலசாபிஷேகமும் நடைபெறவுள்ளது, குறிப்பிடத்தக்கது. ''சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னால் கல்பாத்தி ஸ்ரீ சி.வி.ஸ்ரீநிவாஸய்யர் துவக்கி வைத்த இந்த லட்சார்ச்சனை, அவரது மறைவுக்குப் பிறகு, பல வருடங்கள் கழித்து தற்போது கடந்த ஐந்து வருடங்களாக நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது'' என்கிறார்கள் ஸ்ரீமஹாசாஸ்த்ரு ஸேவா சங்கத்தினர்.

இதற்காக ஸ்வாமி ஐயப்பனுக்கு விசேஷமாக புஷ்ப கிரீடங்களும், நீலக்கல் பதிக்கப்பட்ட தங்கக் கிரீடமும், தங்க வில்வ இலைகளால் செய்யப்பட்ட வில்வ மாலையும் சார்த்தப்படுவது, குறிப்பிடத்தக்கது.

முன்னதாக... இதே அமைப்பினர் கோவை ராம் நகர், ஸ்ரீஐயப்பன் பூஜா சங்க கட்டடத்தில், ஜூன் 14 மற்றும் 15 ஆகிய நாட்களில், ஸ்ரீசாஸ்தா ப்ரீதி மற்றும் ஸ்ரீகிராத மகா ருத்ரம் வைபவத்தையும் ஏற்பாடு செய்துள்ளார்கள். ஸ்வாமி ஐயப்பனுக்கு மிக உரித்தானது ஸ்ரீசாஸ்தா ப்ரீதி வழிபாடு. அதேபோன்று ஸ்ரீகிராத மஹாருத்ர வழிபாடும் மிக உன்னதமானது. பக்தர்கள் கலந்துகொண்டு அருள்பெற்று வரலாம்.

- வி.அரவிந்த் ஸுப்ரமணியம், கோவை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism