Published:Updated:

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

Published:Updated:
சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

கோமூத்திரி அந்தாதி!

சக்தி விகடன் 13.5.14 தேதியிட்ட இதழில் 'சம்ஸ்கிருதத்தில் ஓரெழுத்துப் பாடல்’ எனும் தலைப்பில் வெளியான கட்டுரையைப் படித்து மகிழ்ந்தோம். இதுபோன்ற இலக்கியச் சுவை மிகுந்த பாடல்கள் நம் தமிழ் மொழியிலும் ஏராளம் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாங்கள், கோவையில் ஆனைக்கட்டி ஆசிரமம் மூலம் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி நடத்தும் தேவார வகுப்புகளில் கலந்துகொண்டு, தேவாரப் பாடல்களைக் கற்று வருகிறோம். பன்னிரு திருமுறை ஆய்வு மையம், கற்பகம் கல்லூரி (கோவை- ஈச்சனாரி) நடத்தும் வழிபாட்டுக் கருத்தரங்குகளிலும் கலந்துகொள்கிறோம். கோவை, அழகேசன் சாலையில் உள்ள ஸ்வாமி நாராயண் கோயிலில், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் (மாலை 4 மணி முதல் 5 மணி வரை), ஆசிரியர் கண்ணப்ப ஓதுவார் பாடல் வகுப்புகள் நடத்துகிறார். விருப்பமுள்ளவர்கள் கலந்துகொண்டு பயனடையலாம்.

திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் பலவும் வழிபடுவதற் கும், பாடி மகிழ்வதற்கும் மட்டுமின்றி, தமிழ்ச்சொல்லணி இயலுக்கும் மூலமாகத் திகழ்கின்றன. திருமொழிமாற்று, திருமாலைமாற்று... என இதில் பலவகை உண்டு. அதில் ஒரு வகை 'கோமூத்திரி அந்தாதி’!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

தண்டியலங்காரத்தில், சித்திரக்கவி வகைகளில் இதுவும் ஒன்று. ஒரு செய்யுளை இரண்டு வரிகளாக எழுதி, மேலும் கீழும் ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்து எனச் சேர்த்து வாசித்தாலும், அதே செய்யுளே வரும். பசுவானது நடந்துகொண்டே கோமியம் கழிக்கும்போது, அந்த நீர் விழுந்த தாரையானது மேலும் கீழுமாக நெளிந்த வடிவமாகத் தோன்றுமல்லவா... எனவேதான், இதற்கு 'கோமூத்திரி அந்தாதி’ எனப் பெயர் உண்டானது.

கீழுள்ள பாடலைக் கவனியுங்கள்

பருவ மாகவி தோகன மாலையே
பொருவி லாவுழை மேவன கானமே
மருவு மாசைவி டாகன  மாலையே
வெருவ லாயிழை பூவணி காலமே

இந்தப் பாடல், இரு வரிசையாக 'கோமூத்திரி’ வடிவில் எப்படி இருக்கிறது என்று எதிர்ப் பக்கத்தில் பாருங்கள்!

- விமலா ராமமூர்த்தி, கே.கே.புதூர்

* இந்தப் பாடல் மட்டுமின்றி, திருமொழிமாற்று, திருமாலைமாற்று, வழிமொழித் திருவிராகம், இயமகமாகிய ஏகபாதம்... இப்படித் திருஞான சம்பந்தர் அருளிய பலவகைப் பாடல்களை உதாரணங்களுடன் தந்து விளக்கியிருக்கிறார், வாசகி விமலா ராமமூர்த்தி. அந்தப் பாடல்களையும் விளக்கங்களையும் முழுமையாகப் படித்து ரசிக்க, பார்க்க இங்கே கிளிக்குக http://news.vikatan.com/article.php?module=news&aid=28799&r_frm=search

குருப்பெயர்ச்சி ஆராதனை!

ங்கள் ஊர் கொண்டாபுரம். வேலூர் மாவட்டம், காவேரிப் பாக்கம் அருகில் உள்ளது. இங்கே அழகுறக் கோயில் கொண்டிருக் கிறார், பஞ்சலிங்கேஸ்வரர். காஞ்சி மகாபெரியவாளின் அபிமான திருக்கோயில் இது. பஞ்ச பூதங்களுக்குமாக ஐந்து லிங்கங்கள் காட்சி தருவது இக்கோயிலின் சிறப்பம்சம். இங்கு வந்து வழிபட, பஞ்சபூதத் தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும்.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

மேலும், இங்கு கோஷ்டத்திலும் தனியாகவும் இரண்டு தட்சிணா மூர்த்திகள் சந்நிதி கொண்டிருப்பது விசேஷம்! வரும் குருப்பெயர்ச் சியை ஒட்டி இந்தக் கோயிலில் தட்சிணாமூர்த்தியர் இருவருக்கும் கனகாபிஷேகத்துடன் விசேஷ வழிபாடுகள் நடைபெறவுள்ளன. பக்தர்கள் கலந்துகொண்டு குருவருள் பெற்றுச் செல்லலாம்.

- நிவேதிதா, கொண்டாபுரம்

அஷ்டபந்தனம்!

அஷ்டபந்தன கும்பாபிஷேகம்- இந்த வார்த்தை பக்தர்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், அஷ்டபந்தனத்தில் வரும் எட்டு மருந்துகள் குறித்த தகவல்கள் தெரியுமா?

கொம்பரக்கு: மரப்பட்டையுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் கொம்பரக்கு தூய்மையானது; கலப்படமற்றது.

சுக்கான் தூள்: இது பல நிறங்களைக் கொண்டது. எனினும், வெள்ளை மற்றும் கபில நிறம் கொண்டவை ஏற்கத்தக்கது. கருமை நிறம் கூடாது. இரும்புச் சட்டியில் இட்டு வறுத்தால், வெடிக்கக் கூடாது; அதுவே சிறந்தது.

குங்கிலியம்: தூசு, தும்பு இல்லாத குங்கிலியம் உகந்தது.

கற்காவி: அழுக்குச் சிவப்பு நிறத்துடன் கட்டியாக இருக்கும். அப்படிக் கட்டிப்பட்டி ருப்பதே சிறப்பானது.

செம்பஞ்சு: வாதாங்கொட்டை நிறம் வாய்ந்தது. பீகார் பக்கத்தில் இருந்து வருவது. இதை 'கோக்தி’ என்றும் சொல்வர்.

சாதி லிங்கம்: அஷ்டபந்தனத்தில் முக்கியமான மருந்து இது.

தேன் மெழுகு: இதில் மஞ்சள் மெழுகு, வெண் மெழுகு என இருவகை உண்டு. வெண் மெழுகு விசேஷமானது!

எருமை வெண்ணெய்: புதிய மண் பானையில் போட்டுவைக்க, ஈரப்பதத்தை பானை உறிஞ்சிவிடும். அதன்பிறகே பயன்படுத்துவர்.  மேலும் படித்து ரசிக்க இங்கே கிளிக்குக http://news.vikatan.com/article.php?module=news&aid=28797&r_frm=search

- அவினாசி முருகேசன்

* அஷ்டபந்தனம் தயாரிக்கும் முறை, கலவையின் அளவு, முக்கூட்டுப் பொருள், அஷ்டபந்தன வெண்பா உட்பட இன்னும் பல சுவாரஸ்ய தகவல்களை விகடன் இணையதளத்தில் (www.vikatan.com) காண்க.

வெற்றி தரும் வெற்றிலை வழிபாடு!

சுபநிகழ்ச்சிகள் என்றால் முதலிடம் பிடிப்பது வெற்றிலை. மங்கலம் நிறைந்த வெற்றிலையில் ஸ்ரீராமநாமம் எழுதி அனுமனுக்குச் சமர்ப்பித்து வழிபட, தடைகள் நீங்கும், காரிய ஸித்தி உண்டாகும் என்பார்கள்.

சந்தனம் அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.  பிறகு, ஒரு வெற்றிலைக் காம்பை சந்தனத்தில் தோய்த்து, மற்றொரு வெற்றிலையின் பின்புறம் 'ராமா’ என்று எழுத வேண்டும். 5, 7, 9, 11 என்ற எண்ணிக்கைப்படி இயன்ற அளவு ராம நாமம் எழுதலாம். பின்னர், ஸ்ரீராம நாமம் எழுதப்பட்ட அந்த வெற்றிலைகளை மாலையாகக் கோத்து அனுமனுக்குச் சார்த்தி, தயிர் சாதம் நிவேதனம் செய்து வழிபடவேண்டும். இதனால் தடைகள் யாவும் நீங்கி, எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.

- எஸ்.ராமச்சந்திரன், சென்னை-4

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

கேட்கிறார்கள்...

பல வருடங்களுக்கு முன், மகாபெரியவாளின் அருளுரைகளை சிறு சிறு தொகுப்புப் புத்தகமாக பல வாரங்கள் தொடர்ந்து வெளியிட்டது ஆனந்தவிகடன். அதன் முழுத் தொகுப்பும் ஒரே புத்தகமாக வெளியாகியுள்ளதா? அல்லது, எவரிடமேனும் இருந்தால் கொடுத்து உதவுங்களேன்.

- ரேவதிப்ரியன், ஈரோடு

ஆம்! 'அருள் உரை’ என்னும் தலைப்பில், ஒவ்வொரு புத்தகத்தின் முகப்பிலும் மகா பெரியவாளின் திருவுருவைத் தாங்கி 101 சிறு புத்தகங்களை 1993-ல் ஆனந்த விகடன் வெளியிட்டது. அவை ரா.கணபதி எழுதிய 'தெய்வத்தின் குரல்’ எனும் புத்தகத்திலிருந்து, அனுமதி பெற்று வெளியிடப்பட்டன.  

- ஆசிரியர்

சக்தி விகடன்- சக்தி ஜோதிடத்தில் (21.1.14 தேதியிட்ட இதழில்) வெளியான கார்த்தவீர்ய வழிபாடு குறித்துப் படித்தறிந்தேன். நானும் தொடர்ந்து வழிபட விரும்புகிறேன். கார்த்தவீரியன் திருவுருவம், படங்கள் குறித்த தகவல் அறிந்தவர்கள் தந்து உதவினால், பயனுள்ளதாக இருக்கும்.

- காயத்ரி ராஜகோபாலன், மைசூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism