Published:Updated:

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

Published:Updated:
ஹலோ சக்தி

? 'ஆய கலைகள் 64’ என்பார்கள். அவை என்னென்ன?

- கே.ரமேஷ், கூடுவாஞ்சேரி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

64 கலைகள் குறித்து பல்வேறு ஞானநூல்களிலும் தகவல்கள் உண்டு. அபிதான சிந்தாமணியில் 'கலைஞானம் - 64’ என்கிற தலைப்பில் கீழ்க்காணும் பட்டியல் தரப்பட்டுள்ளது. அவை... அக்கர இலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதி சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், யோக சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், சகுன சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், உருவ சாஸ்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், மதுரபாடனம், நாடகம், நிருத்தம், சத்த பிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அத்திர பரீ¬க்ஷ, கனக பரீ¬க்ஷ, இரத பரீ¬க்ஷ, கஜ பரீ¬க்ஷ, அஸ்வ பரீ¬க்ஷ, இரத்தின பரீ¬க்ஷ, பூ பரீ¬க்ஷ, சங்கிராம இலக்கணம், மல்ல யுத்தம், ஆகருஷணம், உச்சாடனம், வித்துவேஷணம், மதன சாஸ்திரம்,  மோகனம், வசீகரணம், இரசவாதம், காந்தர்வ வாதம், பைபீல வாதம், கௌத்துக வாதம், தாது வாதம், காருடம், நட்டம், முட்டி, ஆகாய ப்ரவேசம், ஆகாயகமனம், பரகாய ப்ரவேசம், அதிரிச்யம், இந்திரஜாலம், மகேந்திரஜாலம், அக்னிதம்பம், ஜலஸ்தம்பம், வாயுத்தம்பம், திட்டித்தம்பம், வாக்குத்தம்பம், சுக்கிலத்தம்பம், கன்னத்தம்பம், கட்கத்தம்பம், அவத்தைப் பிரயோகம்.

? சென்ற இதழ் சக்தி விகடன் அட்டைப்படத்தில் அருள்பொழியும் முருகன் கண்ணையும் கருத்தையும் கொள்ளை கொண்டு விட்டார். அட்டைப்படக் குறிப்பில் 'ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமி, சென்னை குமரன் குன்றம்’ என்று இருந்தது. அந்தக் கோயில் குறித்த விரிவான தகவலை தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- கே.கண்ணன், தென்காசி

சென்னை, தாம்பரம்- கிண்டி மார்க்கத்தில், தாம்பரத்தை அடுத்து குரோம்பேட்டைக்கு முன்னதாக ஜி.எஸ்.டி சாலையில் இருந்து (எம்.ஐ.டி பாலத்தில் ஏறி) வலப்புறமாகப் பிரிந்து சென்றால், குமரன் குன்றம் கோயிலை அடையலாம்.

'இங்கு புகழ்பெற்ற ஓர் ஆலயம் அமையப்போகிறது’ என்று காஞ்சி மகாபெரியவர் தீர்க்கதரிசனமாக அருள்செய்த பெருமைக்குச் சொந்தமானது இந்தக் கோயில். சிறு மலையின் மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் விநாயகரும், மலையின் நடுவே சிவனாரும், உச்சியில் முருகப்பெருமானும் கோயில் கொண்டிருக்கிறார்கள். திருத்தணி போன்று இங்கும் படித்திருவிழா பிரசித்தம்! கந்தசஷ்டி முதலான, முருகப் பெருமானுக்கு உரிய அனைத்து விழா வைபவங்களும் வெகுவிமரிசையாக நடைபெறும். சென்னைக்குச் செல்லும் அன்பர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம் இது.

ஹலோ சக்தி

? திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க மலையேறும் பக்தர்கள் அவசியம் சொல்ல வேண்டிய ஸ்லோகம் ஒன்று உண்டு என்று நண்பர் ஒருவர் முன்னெப்போதோ கூறினார். அதுகுறித்து மேலும் விவரம் அறிய ஆசைப்படுகிறேன்.

- தி. கல்பனா, திருச்சி-2

நீங்கள் கேட்டிருக்கும் ஸ்லோகம் ஸ்காந்தபுராணத்தில், வேங்கடாசல மஹாத்மியத்தில் உள்ளது. அந்த ஸ்லோகம் இதுதான்...

ஸ்வர்ணாசல மஹாபுண்ய ஸர்வதேவ நிஷேவித
ப்ரம்மாதயோபி யம்தேவா: ஸேவந்தே ஸ்ரத்தயாஸஹ
தம் பவந்தம் அஹம் பதத்ப்யாம் ஆக்ரமேயம் நகோத்தம
க்ஷமஸ்வ ததகம் மேசத்ய தயயா பாபசேதஸ:
த்வன்மூர்த்தநி க்ருதாவாஸம் மாதவம் தர்ஸயஸ்வமே

கருத்து: பிரம்மதேவன் முதலான தேவர்கள், எந்த வேங்கட மலையை வணக்கத்துடன் வந்தடைந்து சேவிக்கின்றனரோ, அப்படிப்பட்ட தங்கமயமான, அளவுகடந்த புண்ணியம் உள்ளதும், ஸர்வ தேவர்களாலும் வணங்கப்பட்டதுமான, ஸ்ரீநிவாஸனுக்கு இருப்பிடமான பர்வதமே... என் கால்களால் தங்கள் மீது ஏறுகிறேன். ஓ பர்வதமே, அதனால் உண்டாகும் பாவங்களை கருணையினால் தாங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.  தங்களின் சிகரத்தில் வசிக்கும் லட்சுமிபதியான ஸ்ரீவேங்கடவனை தாங்கள் எனக்குத் தரிசனம் செய்துவைக்கவேண்டும்.

இந்த ஸ்லோகத்தைப் படித்தபடி திருமலையின் மீது ஏறுவதும், திருவேங்கடவனைத் தரிசிப்பதும் பெரும் புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism