Published:Updated:

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

ஹலோ சக்தி

Published:Updated:
ஹலோ சக்தி

? சாதுர்மாஸ்ய விரதம் எப்போது துவங்கும்? அந்த மாதங்களில் துறவிகள் ஒரே இடத்தில் தங்கிவிடுவதற்கான காரணம் என்ன?

- கே. ராமநாதன், கோவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடி மாதம் வியாச பூர்ணிமா அன்று துவங்கி நான்கு மாதங்களுக்கு சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கப்படும். துறவிகள் நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கமாட்டார்கள்; சஞ்சரித்துக் கொண்டே இருப்பார்கள். மழைக் காலங்களில் நடைப் பயணம் மேற்கொள்வது கடினம். தவிர, திடீர் மழையால், உயிரினங்கள் பலவும்

இடம்பெயர்ந்து ஒய்யாரமாக உலவியபடி இருக்கும். இவற்றுக்கு எந்த இடையூறும் விளைவிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே சாதுர் மாதத்தில் ஓரிடத்தில் தங்கிவிடுவார்கள், துறவிகள்!  

? ஆனி மாதம் பிறந்துவிட்டது. சிதம்பரம் ஸ்ரீநடராஜருக்கு ஆனித் திருமஞ்சனம் விசேஷம். இதேபோன்று வருடத்துக்கு 6 அபிஷேகங்கள் அவருக்கு கோலாகலமாக நடைபெறும் என்பார்கள். அவை எந்தெந்த மாதங்களில் நிகழும்? அதேபோன்று, அவருக்கு தினமும் 7 கால பூஜை நிகழும் என்கிறார்களே, உண்மையா? அத்துடன், கோயில்களில் நிகழும் நித்ய பூஜா கால விவரங்களையும் நியதிகளையும் அறிய விரும்புகிறேன்.

- என். சீதாலட்சுமி, சென்னை-40

ஹலோ சக்தி

இந்தக் கேள்விக்கு சிதம்பரம் வேங்கடேச தீட்சிதரிடம் விளக்கம் கேட்டோம்.

''சிதம்பரம் கோயிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறும். முன்னதாக தினமும் காலையில் பால் நைவேத்தியத்துடன் சிறப்பு பூஜை ஒன்றும் நடைபெறுகிறது.  காலையில் சிவனார் பசியுடன் இருப்பார் என்பதால், பால், வாழைப் பழம், பொரி, வெல்லச் சர்க்கரை, வெற்றிலைப் பாக்கு என வைத்து பூஜை செய்வது வேறெங்கும் காணப்படாத ஒன்று. ஆக, மொத்தம் 7 பூஜைகள்!

அதேபோன்று, சிதம்பரம் கோயிலில் தினமும் இரவு 10  மணிக்குதான் அர்த்தஜாம பூஜை நடைபெறும். அதாவது சிவனாரின் ஆனந்த நடனத்தைத் தரிசிக்க, எல்லா கோயில்களில் இருந்தும் கடவுளர்கள் இங்கு வந்துவிடுவதாக ஐதீகம். இதுவும் சிதம்பரம் கோயிலின் தனிச் சிறப்பு!

அதேபோல், சிதம்பரம் கோயிலில், வருடத்துக்கு 6 அபிஷேகங்கள்... சித்திரை - திருவோணம், ஆனி- உத்திரம், ஆவணி-வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி - வளர்பிறை சதுர்த்தசி, மார்கழி- திருவாதிரை, மாசி - வளர்பிறை சதுர்த்தசி ஆகிய மாதங்களில் நிகழும்'' என்கிறார் வேங்கடேச தீட்சிதர்.

வாசகி சீதாலட்சுமி கோயில்களில் நிகழும் நித்ய கால பூஜை விவரங்கள் குறித்தும் கேட்டிருக்கிறார். இதே போன்றதொரு கேள்விக்கு, சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் சக்தி விகடனில் ஏற்கெனவே பதில் அளித்துள்ளார். அந்தத் தகவல் இங்கே...

கோயில்களில் காலை, உச்சி, அந்தி, அர்த்தஜாமம் என்று நான்கு கால பூஜைகள் நடைபெறும். காலை பூஜையுடன் நிறுத்திக்கொள்ளும் (ஒரு வேளை  மட்டும்) கோயில்களும் உண்டு!

ஹலோ சக்தி

ஒரு நாளைக்கு... பகலில் நான்கு; இரவில் நான்கு என எட்டு யாமங்கள் (ஒரு யாமம்= மூன்று மணி நேரம்). பகல் நான்கு யாமங்களை வைத்து உதயாஸ்தமன பூஜை வழிபாடுகள் செய்வர். சிவராத்திரி போன்ற சிறப்பு நாளில், இரவு நான்கு யாமங்களில் நான்கு கால பூஜைகள் நடைபெறும். ரிஷிபஞ்சமி, பிரதோஷம் முதலான விரத நாட்களில் நான்கு கால பூஜைகள் நிகழும். ஆகமம் மற்றும் சம்பிரதாயத்தை இணைத்து கோயில் வழிபாட்டுக் காலங்கள் நிர்ணயிக்கப் படுகின்றன. இவற்றில் பூஜா கால எண்ணிக்கையில் மாறுபாடுகள் கொண்ட கோயில்களும் சில உண்டு. அவற்றில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் திருக்கோயிலும் ஒன்று.

சில கோயில்கள் பொது விதிக்கு மாறுபட்டு, தனிச் சம்பிரதாயத்துடன் திகழ்ந்தாலும் அவற்றையும் ஏற்கலாம். சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை யிலான காலத்தை... ப்ராத: காலம் (காலை), ஸங்கவம் (முற்பகல்), மத்தியானம் (மதியம்), அபரான்னம் (பிற்பகல்), சாயம் (சாயங்காலம்) என்று ஐந்தாகப் பிரித்து வைத்தும் வழிபாடுகள் செய்வர். மார்கழி மாதங்களில் அதிகாலையில் விசேஷ பூஜைகள் நிகழும். அன்னாபிஷேகம், ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி உள்ளிட்ட நாட்களில் இரவு வழிபாடுகளுக்கு சிறப்பு உண்டு.  ராம நவமி நாளில் உச்சி கால வழிபாடு நிகழும். பண்டிகையின் வேளை, ஆகமத்தின் பரிந்துரை- இவற்றையொட்டியே பூஜைக்கான காலங்கள் வரையறுக்கப்படுகின்றன.

? பூஜையின்போது வெற்றிலை மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றின் காம்பு எந்தத் திசையில் இருக்குமாறு வைக்க வேண்டும்?

- எம். சீதாலட்சுமி, முசிறி

நம்மைப் (பூஜை செய்பவரைப்) பார்த்து... இருக்க வேண்டும். இரண்டிலும், உபயோக மற்ற- கிள்ளி எறியப்படும் பாகம் காம்பு. இது நம்மை நோக்கியும், உட்கொள்ளப்படும் பாகம் ஸ்வாமியை நோக்கியும் இருக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism