

காளமேகப் புலவரின் முழு சரிதத்தையும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். மேலும் அவர் எழுதிய பாடல்கள் அனைத்தையும் படித்துப் பாராயணம் செய்ய வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. இதுகுறித்த புத்தகம் எங்கு கிடைக்கும்? விவரம் தெரிந்த அன்பர்கள் தகவல் தந்து உதவுங்களேன்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- ஏ.எஸ்.தீட்சிதர், திருச்சி-5
'ஜெங்கார ஸ்ருதி செய்குவாய், கருணாலய நிதியே! காணக் கண் கோடி வேண்டும்’ என்று துவங்குகிற பாடல், 1950-களில் மிகப் பிரபலமான பாடல். இந்தப் பாடலின் வரிகள் எனக்கு மறந்துவிட்டன. இந்தப் பாடல், எந்த நூலில் உள்ளது? அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்? அன்பர்கள் எவரேனும் பிரதி எடுத்து அனுப்பினாலும் நன்று. உதவுங்களேன்.
- ஹெச்.பத்மாவதி, திருச்செங்கோடு
நீலோத்பல தள ஸ்யாமாம் ப்ரலாம்பித கரான்விதாம்’ எனத் துவங்கும் ஸ்லோகம் மறந்துவிட்டது. மேலும் இதன் அர்த்தத்தையும் ஸ்லோகத்தைச் சொல்வதால் உண்டாகும் பலனையும் அறிய விரும்புகிறேன். இதேபோல், ஸ்ரீபச்சைவாழியம்மன் சரிதத்தையும் அறிய விரும்புகிறேன். வாசக அன்பர்கள் எவரேனும் தகவல் தந்து உதவினால் நன்றி உடையவனாக இருப்பேன்.
- ம.ஜீவானந்தம், கரூர்
தமிழகத்தைச் சேர்ந்த நான், தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறேன். உறவுக்காரர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் செல்லும் போது, அந்தந்த ஊரில் உள்ள ஆலயங்களைத் தரிசித்து வழிபட வேண்டும் என்று திட்டமிட்டுச் செல்பவன். எனவே, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள ஆலய விவரங்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன். இதுதொடர்பாக புத்தகம் ஏதும் உள்ளதா? எங்கு கிடைக்கும்?
- சுகவனம், பெங்களூரு
##~## |
- கே.மூர்த்தி, புளியம்பேடு
ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார் ஸ்லோகத்தை சிறுவயதில் மனப்பாடமாக ஜபித்து வந்தவள்தான் நான். ஆனால் தற்போது, இந்த ஸ்லோகம் மறந்துவிட்டது. ஸ்ரீபுஷ்பவல்லித் தாயார் ஸ்லோகம் என்பது எந்த நூலில் உள்ளது என்பதும் தெரியவில்லை. இந்த ஸ்லோகம், எந்த நூலில் உள்ளது? எங்கு கிடைக்கும்? அல்லது வாசக அன்பர்கள் எவரேனும் தந்து உதவினால், நன்றி உடையவளாக இருப்பேன்.
- வித்யா, காஞ்சிபுரம்


'சத்குரு வாணி’ எனும், ஸ்ரீசாயி பகவான் குறித்த புத்தகம் தமிழில் வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்? இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும் என ஆவலில், பல கடைகளில் தேடியும் கிடைக்கவில்லை. எங்கு கிடைக்கும்? வாசக அன்பர்கள் தகவல் தந்து உதவினால் மகிழ்வேன் என்று சென்னை வாசகர் ஆர்.பாலசுப்ரமணியன் கேட்டிருந்தார்.
சிட்டா வெங்கடேஸ்வரலு சாயி என்ப வர் தெலுங்கில் இந்த நூலை எழுதி, பின்னாளில் தமிழில் ராஜசேகரன் என்பவரால் மொழிபெயர்த்து புத்தக மாக வெளியிடப்பட்டது. ஸ்ரீஷீர்டி சாயி
சாரிடபிள் டிரஸ்ட், 25, நியூ பைபாஸ் ரோடு, கரூர் - 639 006 (04324 - 221536, 221 530) எனும் முகவரியில் இந்தப் புத்தகம் கிடைக்கும். அத்துடன் ராஜசேகரன் (094403 58244) அவர்களையும் தொடர்பு கொள்ளலாம் என்று பெங்களூரு வாசகர் சுகவனம், கோவை வாசகி குமுதினி வேணுகோபால், திருப்பூர் மண்ணரை வாசகர் வி.எல்.குருசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீஷீர்டி சாயிபாபா கோயிலில், 'சத்குரு வாணி’ புத்தகம் கிடைக்கிறது. நான் அங்குதான் இந்தப் புத்தகத்தை வாங்கினேன். மேலும் தற்போது இந்தப் புத்தகம் கிடைக்கும் விவரத்தை ஸ்ரீசாயி பூஜை கைங்கர்யத்தில் ஈடுபட்டு வரும் அன்பர்களிடம் (94440 24685) கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று சென்னை வாசகி கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
'ஸ்ரீஅங்காரகன் திருவுருவப் படம் வைத்து வழிபட வேண்டும் என்று ஆசை. எனவே, அவரின் திருவுருவப் படத்தை வைத்துள்ள வாசக அன்பர்கள் தந்து உதவுங்கள். அதேபோல், ஸ்ரீஅங்காரக வழிபாடு குறித்த தகவல்களையும் அனுப்பினால் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்று மதுரை வாசகர் சாந்தா ராஜாராமன் கேட்டிருந்தார்.
ஸ்ரீஅங்காரகனின் திருவுருவப் படம் மற்றும் அங்காரகனை வழிபட்டுப் பலன் பெறக் கூடிய ஆலயங்கள் குறித்த விவரங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை கோவை பெரிய வதம்பச்சேரி வாசகர் சி.கதிர்வேல் அனுப்பியுள்ளார். திருவுருவப்படமும் விவரங்களும் வாசகி சாந்தா ராஜாராமுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.