Published:Updated:

'தீய சக்தியை விரட்டும் நல்லெண்ணெய்!’

141வது திருவிளக்கு பூஜைகூடலூர் விளக்கு பூஜையில் கவிஞர் விளக்கம்வி.ராம்ஜி

'தீய சக்தியை விரட்டும் நல்லெண்ணெய்!’

141வது திருவிளக்கு பூஜைகூடலூர் விளக்கு பூஜையில் கவிஞர் விளக்கம்வி.ராம்ஜி

Published:Updated:

''இறை வழிபாடு என்பதுதான் முக்கியம். இறைவனை எப்படி வேண்டுமானாலும் எந்த ரூபத்தில் வைத்து வேண்டுமானாலும் வைத்து வழிபடலாம். உருவ வழிபாடு கூடாது என்று சொல்பவர்கள்கூட, பெரிதும் ஏற்றுக் கொண்டு சிலாகிப்பது தீப வழிபாட்டைத்தான்! எனவே வழிபாடுகளில் தீப வழிபாட்டுக்கு அளப்பரிய மகத்துவம் இருக்கிறது'' என்று கவிஞர் சோ.பரதன் பேசியதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள் வாசகிகள்.

தேனி - கூடலூர் ஸ்ரீசுந்தரவேலவர் கோயிலில், கடந்த 17.6.14 அன்று சக்திவிகடன் வழங்கும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சக்திவிகடனின் 141-வது விளக்கு பூஜை இது.

'தீய சக்தியை விரட்டும் நல்லெண்ணெய்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வல்லநாடு சாது சிதம்பரம் சுவாமிகள் ஒருமுறை, பிரமாண்டமான திருவிளக்கு பூஜையை, நெல்லைக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் நடத்தினார். யானைக்கு பூஜை செய்துவிட்டு, விளக்கு பூஜை நடத்த எண்ணினார் அவர். பொட்டல்புதூரில் யானை வளர்ப்பவரிடம் கேட்டதற்கு, அதேநாளில் நெல்லையப்பர் கோயில் விழாவுக்கு யானையை அனுப்பச் சம்மதித்துவிட்டதாகத் தெரிவித்தார் யானை உரிமையாளர்.

அந்த நாளும் வந்தது. பொட்டல்புதூரில் இருந்து நெல்லைக்குச் செல்லும் வழியில், உள்ளார்ந்து இருக்கிறது விளக்குபூஜை நடக்கிற கிராமம். நெல்லையை நோக்கிச் சென்று கொண்டிருந்த யானை, தடக்கென்று அந்த கிராமம் செல்லும் சாலை வழியே விறுவிறுவென ஓடத் துவங்கியது. யானை உரிமையாளர் குழம்பிப் போனார். மதம் பிடித்துவிட்டதோ என்று கலங்கிப் பதறினார். ஏதோ... ஏற்கெனவே அந்த இடம் நன்கு பழக்கமானதுபோல, நேராக கிராமத்துக்குச் சென்று, விளக்கு பூஜை நடக்கும் இடத்துக்கு வந்து சாதுவாக நின்றது யானை. ''கணபதி வந்துட்டியா, உனக்காகதான் பூஜையை ஆரம்பிக்காம இருந்தோம்பா'' என்று யானையைத் தடவிக் கொடுத்தார் சாது சிதம்பர சுவாமிகள்.

'தீய சக்தியை விரட்டும் நல்லெண்ணெய்!’

அத்தோடு, 'பார்த்தீர்களா... விளக்கு பூஜையின் மகத்துவம் இதுதான். ஆத்மார்த்தமாக பூஜையில் ஈடுபட்டால், நினைத்தது நடந்தே தீரும். பூஜைக்கு யானை வரவேண்டும் என நினைத்தேன். வந்து விட்டது. சக்தி வாய்ந்த விளக்குபூஜையில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள்’ என்று சுவாமிகள் சொன்னார்'' என்று கவிஞர் பேசப் பேச, மொத்தக் கூட்டமும் மெய்ம்மறந்து கேட்டது.

''கூடுமானவரை நல்லெண்ணெய் ஊற்றி, தீபமேற்றுங்கள். மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்துக்கும் குறைவிருக்காது. தவிர, நல்லெண்ணெய் தீபமேற்றினால், விஷப் பூச்சிகள் ஏதும் அண்டாது. தீய சக்திகள் ஓடி விடும். எனவே நல்லெண்ணெய் தீபம் கொண்டு விளக்கேற்றுங்கள். நல்லதே நடக்கும்'' என்று கவிஞர் விளக்கினார்.

பூஜையில் கலந்துகொண்ட வாசகிகள் முகத்தில், அப்படியொரு மலர்ச்சி.

''கல்யாணமாகி 4 வருஷமாச்சு. சில காரணங்களால, கணவர் பிரிஞ்சு போயிட்டார். அவரோடு திரும்பவும் சேர்ந்து வாழணும்னு வேண்டிக்கிட்டேன்'' என்று நா தழுதழுக்கச் சொன்னார் கார்த்திகா எனும் வாசகி.

''மலைல எங்களுக்கு ஏலக்காய் எஸ்டேட் இருக்கு. வியாபாரம் செழிப்பா நடக்கணும்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டேன்'' என்றார் வாசகி கவிதா. ''பொண்ணுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கணும்'' என்று ஆர்த்தியும், ''விவசாயம் சீரும் சிறப்புமா நடக்கணும்'' என்று லதாவும், 'ஒரு பேரக் குழந்தை இல்லியேனுதான் பெருங்கவலை'' என்று நாகரத்தினமும் வேண்டினர்.

பேச்சின் நிறைவாக, ''விளக்கின் அடி பாகம், பிரம்மா. நடு பாகம், மகாவிஷ்ணு. மேல் பாகம் சிவபெருமான். விளக்கேற்றும் இடம் - அம்பிகை.  மனம் ஒருமித்து வழிபடுங்கள்.... இவர்கள் அனைவரும் உங்களுக்கு அருளுவார்கள்'' என்று கவிஞர் சோ.பரதன் பேசினார்.

அப்படியே ஆகட்டும்!

படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism