Published:Updated:

பௌர்ணமி தரிசனம்!

பௌர்ணமி தரிசனம்!

பௌர்ணமி தரிசனம்!

பௌர்ணமி தரிசனம்!

Published:Updated:

சென்னை மீஞ்சூர் அருகில் மேலூரில் அருளும் திருவுடை நாயகி, திருவொற்றியூரில் அருளும் வடிவுடை நாயகி, திருமுல்லைவாயிலில் அருளும் கொடியிடை நாயகி ஆகிய மூவரையும் முறையே இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தியாக ஞான நூல்கள் போற்றுகின்றன. பௌர்ணமி நாள்களில் இந்த மூவரையும் முறைப்படி வழிபட சகல ஐஸ்வரியங்களும்  வந்து சேரும்.

பௌர்ணமி தரிசனம்!

பௌர்ணமி அன்று காலையில் (6 முதல் 12 மணி வரை) மேலூர் திருவுடைஅம்மனைத் தரிசிக்க வேண்டும். மஞ்சள் வஸ்திரம் சாற்றி, நெய் தீபம் ஏற்றி, வெற்றிலைப் பாக்கு, புஷ்பம், தேங்காய்- பழம் சமர்ப்பித்து இந்த அம்மனை வழிபட வேண்டும். இது முதல் தரிசனம். நண்பகலில் (12 முதல் மாலை 6 மணி வரை) திருவொற்றியூர் வடிவுடை அம்மனைத் தரிசிக்க வேண்டும். இந்த அம்பாளுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி வழிபடலாம். அடுத்து திருமுல்லைவாயில் கொடியிடை அம்மனைத் தரிசிக்க வேண்டும். இந்த அம்பாளுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி வழிபடலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கே. புவனா, சென்னை-58

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism