Published:Updated:

புதிர் புதிது! - 8

தெய்வா, ஓவியம்: தமிழ்

புதிர் புதிது! - 8

தெய்வா, ஓவியம்: தமிழ்

Published:Updated:

ருள் மணக்கும் ஆடி மாதம் அம்பிகைக்கு உரியது அல்லவா?! இந்த இதழ் புதிர் பகுதியும் அம்மனுக்காகவே!

 அருகில் உள்ள படத்தைக் கவனியுங்கள். 30 கட்டங்களுடன் திகழும் முக்கோணமும், அதன் மையத்தில் 30 வேப்பிலைகளும் உள்ளன. வேப்பிலைகள் ஒவ்வொன்றிலும் ஓர் எழுத்து உள்ளது.

அம்பிகையின் ஆறு பெயர்களுக்குரிய எழுத்துக்களே இப்படி வேப்பிலைகளில் கலைந்துகிடக்கின்றன. கீழ்க்காணும் குறிப்புகளின் உதவியோடு, அந்த ஆறு அம்பாள் பெயர்களையும் கண்டுபிடித்து, முக்கோணத்தின் கட்டங்களில் உரிய எண் வரிசைப்படி நிரப்புங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்பு, சிவப்பு வண்ணக் கட்டங்களில் இருக்கும் எழுத்துக்களை     மட்டும் தனியே எடுத்து ஒழுங்குபடுத்தினால், புகழ்பெற்ற அம்மன் திருத்தலம் ஒன்றின் பெயர் கிடைக்கும். அதை கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தை அப்படியே கத்தரித்து அனுப்பிவையுங்கள்.

புதிர் புதிது! - 8

குறிப்புகள்:

1. சங்கரனின் மனைவி;

2. சரஸ்வதி - கலைமகள்; லட்சுமி - அலைமகள்; பார்வதி..?

3. இமவான் மகள்

4. புதுக்கோட்டை நாயகி மட்டுமல்ல; புவனத்துக்கே நாயகி இவள்!

5. அகில உலகத்துக்கும் அன்னம் அளிக்கும் அம்பிகை!

6 'சம்பு’ என்றால் சிவம்; எனில், சக்திக்கு என்ன பெயர்?

புதிர் புதிது! - 8

சிறப்புக் கேள்வி: விடையாகக் கிடைக்கும் அம்மன் திருத்தலம் குறித்த சிறப்புத் தகவல்களை ஓரிரு வரிகளில் எழுதி அனுப்புங்கள்.

புதிர் புதிது! - 8

போட்டிக்கான விதிமுறைகள்:

இந்தப் பக்கத்தை பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

  சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமாக பதில் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

  உங்கள் விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 15.7.14.

  விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்பவேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி:

சக்தி விகடன்,
புதிர் புதிது - 8,
757, அண்ணா சாலை,
சென்னை-600 002.

புதிர் புதிது! - 8
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism