Published:Updated:

முருக விரதங்கள்!

முருக விரதங்கள்!

முருக விரதங்கள்!

முருகக்கடவுளைக் குறித்து நோற்கப்படும் விரதங்கள் மாத விரதம், வார விரதம், நட்சத்திர விரதம், பட்ச விரதம் என பல வகைப்படும். மாத விரதம் என்பது கார்த்திகை மாதம் முழுவதும் விரதம் இருந்து முருகனை வழிபடுவதாகும்.

வார விரதம் என்பது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் விரதம் இருப்பதாகும். நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திர நாளில் விரதம் இருப்பது. வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி நாட்களில் விரதம் இருப்பது பட்ச விரதம் ஆகும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சஷ்டி விரதம் என்பது முருகனுக்கு மட்டுமின்றி, அவரது தேவியான தெய்வானைக்கும் உரியதாகும். தெய்வயானை குழந்தைகளின் தெய்வமாவாள். குழந்தைகளைப் பல்வேறு இன்னல்களில் இருந்து காப்பாற்றுகிறாள். கருவில் குழந்தைகளை வளர்ப்பவளும் அவளே. அவளுக்கு சஷ்டி தேவி என்பது ஆதிப் பெயர். ஆக, சஷ்டியில் விரதமிருந்து தெய்வானை உடனாய முருகப்பெருமானை வழிபட்டால், புத்திரப்பேறு விரைவில் உண்டாகும். சட்டியில் (சஷ்டியில் விரதம்) இருந்தால் அகப்பையில்  (கருப்பையுள் குழந்தை) வரும் என்பது பழமொழியாகும். பகைவர்களால் துன்பம் அடைபவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்தால், பகைவர்களை வென்று சுகமாக வாழ்வார்கள். அவர் களுக்கு நிலம், வாகனம் போன்ற சம்பத்துகள் உண்டாகும்.

ஆடி மாதம் கிருத்திகை தினத்திலும் முருகனை வழிபட்டு பலன் பெறலாம். முசுகுந்தன் முதலான அநேகர் முருகப் பெருமானுக்கு உரிய விரதங்களை அனுஷ்டித்து, வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

- அருண வசந்தன், சென்னை-4