Published:Updated:

பெயர் பெற்ற பழநி!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று பழநி. 'அடியார்களுக்கு அருள் வழங்கும் ஞானப் பழம் நீ’ என்று சிவனார் அருளியபடி முருகன் கோயில்கொண்டிருக்கும் தலமாதலால் 'பழம் நீ’ என்றழைக்கப்பட்டு, அதுவே பழநி என்று மருவியதாகச் சொல்வார்கள். பழனங்கள் (வயல்கள்) சூழ்ந்த பகுதியாதலால் 'பழநி’ என்றானது என்றும் சொல்வார்கள். சித்தன் வாழ்வு, வையாபுரி ஆகிய பெயர்களிலும் இவ்வூர் அழைக்கப் பட்டிருக்கிறது.

பெயர் பெற்ற பழநி!

பழநியம்பதியை திருப்புகழ் பாடல்களால் போற்றும் அருணகிரி நாதர் 'ஆவினன்குடி’ என்றே சிறப்பிக்கிறார். திருமகள் (ஆ), சூரியன் (இனன்), பூமகள் (கு), அக்னி பகவான் (டி) ஆகியோர் வழிபட்டதால் ஆவினன்குடி எனும் திருப்பெயர் வந்ததாகச் சொல்கின்றன  ஞானநூல்கள்.

- இ.ராமு, மதுரை-3