Published:Updated:

புதிர் புதிது! - 9

தெய்வா, ஓவியம்: தமிழ்

ந்த இதழ் புதிர்ப் பகுதி- முருகன் ஸ்பெஷல்! முருகப் பெருமானின் திவ்விய சரிதத்துடன் இணைந்த, மிக உத்தமமான ஒரு கதாபாத்திரத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

புதிர் புதிது! - 9

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

எதிர்ப்பக்கத்தில் இருக்கும் படத்தில் ஆறு நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திலும் மையத்தில் இருப்பது முத்திரை எழுத்து. அதைத் தவிர, கோணங்களை ஒட்டி சில எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திலும் கோணங்களில் இருக்கும் எழுத்துக்களை மட்டும் எடுத்து ஒழுங்குபடுத்தினால் ஒரு வார்த்தை கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் ஆறு வார்த்தைகளையும் சரியான விதத்தில் வரிசைப்படுத்தினால், புராணக் கதாபாத்திரத்தை நீங்கள் கண்டுபிடித்துவிட முடியும்.

எப்படி வரிசைப்படுத்துவது?

பதிலாகக் கிடைக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஓர் எண்ணுடன் தொடர்புடையதாக இருக்கும். அந்த எண்களின் ஏறு வரிசையில் (அதாவது சிறிய எண்ணுக்கான வார்த்தையே முதலாவது எனும்படி), வார்த்தைகளை வரிசைப்படுத்துங்கள். பின்பு, அதே வரிசைப்படி அந்தந்த நட்சத்திரத்துக்கான முத்திரை எழுத்துக்களைத் தனியே எடுத்து ஒழுங்குபடுத்தினால், புராணக் கதாபாத்திரத்தின் பெயர் கிடைக்கும்.

அதைக் கீழ்க்காணும் கட்டங்களில் நிரப்பி அனுப்பிவையுங்கள்.

புதிர் புதிது! - 9

சிறப்புக் கேள்வி: விடையாகக் கிடைக்கும் புராணக் கதாபாத்திரம் குறித்த சிறப்புத் தகவல்களை ஓரிரு வரிகளில் எழுதி அனுப்புங்கள்.

புதிர் புதிது! - 9

போட்டிக்கான விதிமுறைகள்:

இந்தப் பக்கங்களைப் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமாக பதில் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

உங்கள் விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 29.7.14.

விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்பவேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

  ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி: சக்தி விகடன், புதிர் புதிது - 9, 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

புதிர் புதிது! - 9