ஆகஸ்டு -17 கோகுலாஷ்டமி. கண்ணனைக் கொண்டாட வேண்டாமா?! இப்போதிருந்தே கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் பாட்டியும் பேத்தியும்! ஒவ்வொரு நாளும் பேத்திக்கு கண்ணனின் கதைகளையும் பாடல்களையும் எடுத்துச் சொல்லும் பாட்டி, நிறைவாக ஒரு புதிரும் போடுவார். இன்றைக்கு பாடலில் இருந்து புதிர்!

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்

கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்

தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து

எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே

''பெருமை உடையவன்; ஆச்சர்யமான குணங்கள் கொண்டவன்; அழகான செந்தாமரையைப் போன்ற கண்களையும், சிவந்த பழம் போன்ற உதடுகளை யும், கரிய மாணிக்கம் போன்ற வடிவமும் கொண்டவன்... என்றெல்லாம் கண்ணனைப் புகழும் இந்தப் பாட்டு, அவன் அருளும் ஒரு தலத்தையும் சிறப்பிக்கிறது!'' என்று விளக்கிய பாட்டி, ''இந்தப் பாசுரத்தை பாடிய ஆழ்வார் யார் என்று கண்டுபிடி, பார்க்கலாம்'' என்று புதிர் போட்டிருக்கிறார். விடையைக் கண்டுபிடிக்க நீங்களும் பேத்திக்கு உதவி செய்யுங்களேன்.

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

அருகில் உள்ள படத்தில் 6 ஓலை நறுக்குகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஆழ்வார் ஒருவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. அவர்களில் ஒருவரே மேற்காணும் பாசுரத்தை அருளியவர். ஓலை நறுக்கு ஒவ்வொன்றுக்கும் வரிசை எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று, படத்தில் கீழே ஆறு ஊர்களின் பட்டியலும் வரிசை எண்களோடு இடம்பெற்றுள்ளன. அவற்றில், பாட்டு சிறப்பிக்கும் ஊர் எது என்று கண்டுபிடித்துவிட்டால், ஆழ்வாரின் பெயரையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம். ஏனெனில், எந்த வரிசை எண்ணில் அந்த ஊர்ப் பெயர் இடம் பெற்றுள்ளதோ, அதே வரிசை எண்ணில் தான் ஆழ்வாரின் திருப்பெயரும் அமைந்துள்ளது.

சரி! ஊரை எப்படி கண்டுபிடிப்பது? மீண்டும் ஒருமுறை கவனமுடன் பாடலைப் படித்துப் பாருங்கள். பாட்டிலேயே ஒளிந்திருக்கிறது ஊர்.

ஊர் மற்றும் ஆழ்வாரின் பெயர்களைக் கண்டுபிடித்து, கீழே உள்ள கட்டத்தில் எழுதி எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.

சிறப்புக் கேள்வி: விடையாகக் கிடைக்கும் ஆழ்வார் குறித்த சிறப்புத் தகவல்களை ஓரிரு வரிகளில் எழுதி அனுப்புங்கள்.

போட்டிக்கான விதிமுறைகள்:

இந்தப் பக்கத்தைப் பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.

சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமாக பதில் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

உங்கள் விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 12.8.14.

விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்பவேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

அனுப்ப வேண்டிய முகவரி: சக்தி விகடன், புதிர் புதிது - 10, 757, அண்ணா சாலை, சென்னை-600 002.