Published:Updated:

விளக்கு பூஜை என்பது பஞ்சபூத வழிபாடு!

144-வது திருவிளக்கு பூஜைவி.ராம்ஜி

''மஞ்சள் என்பது மருத்துவ குணமும் ஆன்மிக மணமும் நிறைந்த பொருள். மங்கலகரமான விஷயங்களுக்கு மஞ்சளையே முதலில் பயன்படுத்துகிறோம். மஞ்சள் விளைச்சலுக்குப் பெயர் பெற்ற ஈரோடு மாநகரில் நடைபெறும் இந்த விளக்கு பூஜையில் பங்கு பெறும் அனைவரின் இல்லங்களிலும் மங்கலகரமான நிகழ்வுகள் அரங்கேறட்டும். அரங்கேறும்!'' என ஆன்மிகப் பேச்சாளரும் பேராசிரியருமான குமரவேள் பேசியதும், ஈரோடு வாசகிகள் பெருமிதத்துடன் கைதட்டினார்கள்.

சக்திவிகடனின் 144-வது திருவிளக்கு பூஜை, கடந்த 29.7.14 அன்று ஈரோடு ஸ்ரீகொங்கலம்மன்

விளக்கு பூஜை என்பது பஞ்சபூத வழிபாடு!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கோயிலில் நடைபெற்றது. ஈரோடு, பவானி, சத்தியமங்கலம், கொடுமுடி, திண்டல் எனப் பல ஊர்களில் இருந்தும் வாசகிகள் ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டனர்.

''பெண்களைச் சக்தி என்கிறோம். உண்மையிலேயே அவர்கள் சக்திமிக்கவர்கள்தான். எக்ஸ், ஒய் என மாறுபட்ட இரு குரோமோசோம் களைக் கொண்டவர்கள் ஆண்கள். அதனால்தான் அவர்களின் மனம் ஒருவிதமாகவும், புத்தி இன்னொரு விதமாகவும் இருக்கிறது. ஆனால், பெண்களின் குரோமோசோம்கள் எக்ஸ், எக்ஸ் என்றே இருக்கின்றன. எனவே அவர்களுக்கு மனமும் புத்தியும் ஒன்றாகவே அமைந்து உள்ளது. அதனால்தான் அவர்கள் சக்தி மிக்கவர்களாக இருக்கிறார்கள்.

அதேபோல், பெண்களை வீட்டுக்கு வந்த குத்துவிளக்கு என்றும், குல விளக்கு என்றும் சொல்லுவோம். இங்கே குத்துவிளக்காகிய நீங்களே குத்துவிளக்கை ஏற்றி பூஜை செய்கிறீர்கள் என்றால், இதனால் கிடைக்கப்படும் சக்தி அளப்பரியது, எல்லையே இல்லாதது என்பதைச் சொல்லவே தேவையில்லை'' என்று குமரவேள் பேசியபோது,  கோயிலுக்கு வந்திருந்த ஆண்களும் சேர்ந்து பலத்த கரவொலி எழுப்பினார்கள்.

''விளக்கு  ஏற்றுகிறீர்கள். அதன் மூலம் தெய்வத்தை வழிபடுகிறீர்கள். அதுமட்டும் அல்லாமல், விளக்கையே தெய்வமாக பாவித்து பூஜை செய்கிறீர்கள். பெண்களே தெய்வத்துக்கு நிகரானவர்கள்தான். தந்தை, கணவர், அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, மகன், மகள் என்று ரத்த சொந்தங்களுக்காகவும், மற்ற உறவினர்களுக்காகவும் பிரார்த்திக்கிற பரந்த மனசு கொண்டவர்கள், பெண்களே! எனவே, இந்த விளக்கு பூஜையின் பலனாக, உங்கள் குடும்பத்தாரும் அக்கம்பக்கத்தாரும் சிறக்கும்படி வாழ்வார்கள் என்பது உறுதி.

விளக்கு பூஜை என்பது பஞ்சபூத வழிபாடு!

பஞ்சபூதங்கள் என்ன என்று கேட்டால், சில பெண்கள் மாமி யார், நாத்தனார் என்றெல்லாம் சொல்வார்கள். மாணவனிடம் கேட் டால் தமிழ் வாத்தியார், கெமிஸ்ட்ரி வாத்தியார், மேத்ஸ் டீச்சர் எனப் பட்டியலிடுவார். ஆனால், உண்மையான பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐம்பூதங்களையும் உள்ளடக்கிய, இந்த விளக்கு பூஜையை நீங்கள் செய்வதால், இனி எல்லா நல்லவை களும் உங்களை வந்தடையப் போகின்றன.

உங்கள் விளக்கு நிற்பது தரையில்; அதாவது பூமியில். நீங்கள் ஏற்றி வைத்த சுடர், நெருப்பு. அந்த தீபமானது, காற்றின் மூலமாக ஆகாயத்தை நோக்கிப் பிரகாசமாக எரிகிறது. இவை அனைத்தும் செவ்வனே நடப்பதற்கு, சுடர் எரிவதற்கு திரவ மாகிய எண்ணெய் பயன்படுகிறது. தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ நீங்கள் செய்யும் இந்தப் பஞ்சபூத வழிபாடு, உங்களை மட்டுமின்றி, உங்கள் சந்ததியையும் காக்கும் என்பது உறுதி!'' என்று குமரவேள் பேசி முடிக்கும் வரையிலும் சிலிர்ப்பும் வியப்புமாக மெய்ம்மறந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள் நம் வாசகிகள்.

விளக்கு பூஜை என்பது பஞ்சபூத வழிபாடு!

பவானியிலிருந்து வந்திருந்த வாசகி ஜெயந்தி, சக்திவிகடன் நடத்தும் விளக்கு பூஜையில், 22-வது முறையாக பங்கேற்கிறார். அவருடன், முதன்முறையாக விளக்குபூஜையில் கலந்துகொள்ளும் கிருத்திகா, ஹரிணி, சபரிக்கரசி, சுகந்தி, பவானி எனும் பெயர் கொண்ட வாசகி, மற்றும் பிரியா, தீபா, ராஜராஜேஸ்வரி என ஒன்பது பேர் சேர்ந்து, சிறப்புப் பேச்சாளருக்கு நினைவுப் பரிசை வழங்கினார்கள்.

சுந்தரேச குருக்களும், அவர் மகன் சிவா குருக்களும் மிகச் சிறப்பாக விளக்கு பூஜை நடத்திக் கொடுத்ததை வியந்து பாராட்டினார்கள் வாசகிகள்.

'மகன் ஆரோக்கியமா இருக்கணும்’, 'மகளின் திருமணம் சிறப்பா நடக்கணும்’ என்றெல்லாம் வேண்டிக்கொண்டாலும், காவிரியும் பவானியும் பாய்ந்தோடவேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதை முன்னிறுத்தியே நம் வாசகிகள் பிரார்த்தனை செய்தது மனதை நெகிழ்த்தியது.

மஞ்சள் நகரம் எனப்படும் ஈரோடு வாழ் மக்களின் வேண்டுதலால், பரவலாக மழை பெய்யட்டும்! மாநிலம் தழைக்கட்டும்!

படங்கள்: ம.சு.செழியன்