? சென்ற இதழில் ஆங்காங்கே இடம் பெற்றிருந்த முருகன் துணுக்குகள் அத்தனையும் அருமை! அதில் ஒன்றில் திருச்செந்தூரில் வீரபாகுவுக்கே முதல் வழிபாடு என்ற தகவலைப் படித்தேன். முருகப்பெருமானுக்கு உறுதுணையாக இருந்த நவவீரர்களில் முதன்மையானவர் வீரபாகு என்பது தெரியும். அவருடைய மற்ற சகோதரர்கள் யார் யார்? அவர்கள் அவதாரக் கதை என்ன?

- கே. விஜயலட்சுமி, சாத்தூர்

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய தீப்பொறிகளில் உருவானவர் முருகன் என்பது

நமக்குத் தெரியும். அங்ஙனம் சிவனார் தம் நெற்றிக்கண்ணைத் திறந்தபோது வெம்மை தாளாமல் விலகி ஓடினாள் பார்வதியாள். அப்போது அவளுடைய கால் சிலம்பில் இருந்து நவமணிகள் சிதறின. பின்னர் அவை ஒன்பது பெண்களாக உருக்கொண்டன. சிவனாரின் திருவருளால் அந்தப் பெண்கள் பெற்ற மைந்தர்களே வீரபாகு முதலான நவ வீரர்கள்.

நவ வீரர்களின் திருப்பெயர்கள்:

1. வீரவாகு, 2. வீரகேசரி, 3. வீரமகேந்திரன்,

4. வீரமகேசன் 5. வீரபுரந்தரன்,

6. வீரராக்ஷசன், 7. வீரமார்த்தாண்டன்,

8. வீரராந்தகன் 9. வீரதீரன்.

? சென்னைக்கு அருகில் முன்று நரசிம்மர் தலங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பதாக அறிந்தேன். அவை என்னென்ன திருத்தலங்கள்?

- ஜி. கல்யாண பெருமாள், லால்குடி

சிங்கர்கோயில், பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய தலங்கள்தான் நீங்கள் குறிப்பிட்டுக் கேட்கும் மூன்று தலங்கள். மூன்று ஊர்களிலும் உள்ள கோயில்கள் விஜயநகர ஆட்சியின்போது ஒரே அரசனால் கட்டப்பட்டவை. மூன்றையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷம்.

சிங்கர்கோயில்: கடலூரில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் தவளக் குப்பம். இங்கிருந்து மேற்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது சிங்கர்கோயில். இதை சிங்கர்குடி என்றும் சொல்வர். கல்வெட்டில் திருமலாபுரம் எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்த பிரகலாதனுக்காக ஸ்ரீநரசிம்மர் தாமே வந்தமர்ந்து குடிகொண்ட கோயில் இது என்கிறார்கள்.

பூவரசங்குப்பம்: விழுப்புரம்- பண்ருட்டி சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது கள்ளிப்பட்டி. இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் பூவரசங்குப்பம் உள்ளது. இங்கு ஸ்ரீலட்சுமி நரசிம்மர் அருள்பாலிக்கிறார். உடற்பிணி, தோஷங்கள் போக்கும் தலம் இது.

பரிக்கல்: விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை செல்லும் வழியில் விழுப்புரத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது பரிக்கல். இங்கும் ஸ்ரீலட்சுமி நரசிம்மரே அருள்கிறார்.

? ஸ்ரீசத்ய நாராயண விரதத்தை எப்போது கடைப்பிடிக்க வேண்டும்?

- எம். பாலாஜி, கோவை-2

மாதம்தோறும் பௌர்ணமி அன்று மாலையில் சந்திரோதய காலத்தில் சத்யநாராயண விரதம் இருந்து வழிபடலாம் என்கிறது ஸ்காந்த புராணம். இயலாதவர்கள் ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகள், மற்றும் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி, தீபாவளி நாட்களிலும் புரட்டாசி மாத சனிக் கிழமைகளிலும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்.