Published:Updated:

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

Published:Updated:
சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

விளையாட்டு விநாயகருக்கு சதுர்த்தி திருவிழா!

சென்னை-தேனாம்பேட்டை, நாட்டு முத்து தெருவில் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு விளையாட்டு விநாயகர். திருப்பெயரில் மட்டுமல்ல, பக்தர்களுக்கு வேண்டியதை வேண்டியபடி அருள்வதிலும் விசேஷம் வாய்ந்தவர் இந்த கணநாதர். இந்தப் பகுதி மக்களின் செல்லப் பிள்ளையாரான இவரது திருக்கோயிலில் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் கடந்த 14.7.14 திங்கட்கிழமை அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அனுதினமும் மண்டலாபிஷேகமும் நடைபெற்று வருகிறது (28.8.14 வரையிலும்).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கும்பாபிஷேகத்தைத் தரிசிக்க இயலாத அன்பர்கள், இந்த மண்டலாபிஷேக காலத்தில் ஏதேனும் ஒருநாளிலாவது விநாயகரைத் தரிசித்து வழிபட்டால், விசேஷ பலன்கள் கைகூடும். அத்துடன் இந்த விநாயகர் ஆலயத்தில், சதுர்த்தி திருவிழாவும் ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்கள் சிறப்புற நடைபெற  உள்ளது. பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீவிளையாட்டு விநாயகரின் பேரருளைப் பெற்று பயனடையலாம்.

- பாலன், சென்னை-18

கல்யாண வரம் அருளும் மாதிரிமங்களம்!

யிலாடுதுறை- கும்பகோணம் மார்க்கத்தில் குத்தாலத்துக்கு அடுத்துள்ள சிற்றூர்- மாதிரிமங்களம். மால் திரு மங்களம் என்பதே மாதிரிமங்களம் ஆனது என்பர். ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் கோயில் கொண்டருளும் அற்புதமான தலம் இது.

ஒருமுறை சிவனாரும் திருமாலும் சொக்கட்டான் ஆடினார்கள். நடுவரான உமையவள், தன்னுடைய அண்ணன் திருமாலுக்கு சாதகமாக தீர்ப்பு தந்தாள் என்று கருதிய சிவனார், பசுவாகப் பிறக்கும்படி அவளை சபித்தார். இதனால் வருந்திய திருமால், ஆமருவி அப்பனாக - பசுவைப் பராமரிக்கும் கோசகன் ஆனார். ஆக, சாபத்தின் காரணமாக சிவனாரைப் பிரிந்தாள் பார்வதி; கோசகன் ஆனதால் திருமாலும் அலைமகளைப் பிரிய நேரிட்டது. பின்னர் பார்வதியாளின் சாபம் தீர்த்து அவளை பரமேஸ்வரன் திருமணஞ்சேரியில் மணம் புரிந்த கதை நாமறிந்ததே.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

திருமணக்கோலத்தில் தேவர்கள் பலருக்கும் வரம்பல தந்தார் சிவனார். அப்போது, தான் திருமாலை அடைவது எப்போது எனக் கேட்டாள் அலைமகள். அவளிடம், 'திருமணஞ்சேரிக்கு நிருதி பாகத்தில் அமைந்துள்ள வில்வாரண்யமாம் கானூர் கயிலாய க்ஷேத்திரத்தில் தாமே முன்னின்று திருமணம் நடத்தி வைப்பதாக அருளினார் சிவனார். அதன்படி கானூர் கயிலாய க்ஷேத்திரத்தில் அருள்மிகு காமாக்ஷி அம்பிகை சமேத கைலாசநாதராக எழுந்தருளி, திருமாலுக்கும் திருமகளுக்கும் திருக்கல்யாணம் நடத்திவைத்து அருளினார். இவ்வளவு பெருமைகள் மிகு க்ஷேத்திரமே மாதிரிமங்களம் ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் ஆலயம் ஆகும். இங்கு வந்து பெருமாளை வழிபட, தடைகள் நீங்கி கல்யாண வரம் ஸித்திக்கும் என்பது ஐதீகம்.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

இந்த ஆலயத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஆவணி மாதம், ஸ்வாதி நட்சத்திரத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் கும்பாபிஷேக நடந்த அந்தத் திருநாளையொட்டி சம்வத்சராபிஷேக வைபவம் சிறப்புற நடைபெறுகிறது. இந்த வருடம், வரும் ஆகஸ்ட் -31 அன்று இந்த விழா நடைபெறவுள்ளது. விசேஷ ஹோமங்கள், திருக்கல்யாணம், திருவீதியுலா மற்றும் செப்டம்பர் 1 முதல் 4 வரையிலும் ரிக்வேத பாராயணமும் ஸ்ரீவித்யா குலபதி பிரம்மஸ்ரீ தினகர சர்மா தலைமையில் நடைபெறவுள்ளது. பக்தர்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம்.

- விஜயசர்மா, சென்னை-91

ஸ்ரீகோதண்டராமருக்கு மஹா ஸம்ப்ரோக்ஷணம்!

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகாவில் (கல்லணை - பூம்புகார் சாலையில்) அமைந்துள்ளது பாஸ்கரராஜபுரம். அம்பாளின் ஆணைக்கு இணங்க ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் வழங்கிய ஸ்ரீபாஸ்கரராயர் வாழ்ந்த ஊர் இது. இங்குள்ள  ஸ்ரீசீதா லக்ஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயிலில், வரும் 4.9.14 வியாழக்கிழமை அன்று ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. இந்த புண்ணிய வைபவத்தில் பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீராமனின் திருவருளைப் பெற்றுச் சிறக்கலாம்.

- ஆர்.கிருஷ்ணஸ்வாமி, திருவாலங்காடு

தத்துவ கணபதி!

ருள் தத்துவங்கள் பலவற்றையும் தனது உருவத்தாலேயே போதிப்பவர் பிள்ளையார். ஆனைமுகன் உணர்த்தும் அந்த தத்துவ விளக்கங்கள் பின்வருமாறு:

அமர்ந்த திருக்கோலம்: பகவானை  தியானி; சிந்தனையைச்  சிதறவிடாதே.

மூஷிக வாகனம்: சம்சார  சாகரத்தில், ஆசை எண்ணங்களை அடக்கு; அதனைப் பின்தொடராதே.

ஒற்றைத் தந்தம்: உன் தேவைக்கு மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை தானம் செய்.

சிறுத்த கண்கள்: கூரிய பார்வைகொண்டு மனதை ஒரு நிலைப் படுத்து.

முறம் போன்ற செவிகள்: நல்ல விஷயங்களை நிறையக் கேள்.

சிறிய வாய்: குறைவாகப் பேசு.

அங்குசம்: துஷ்ட விஷயங்களை அகற்றி, எண்ணங்களை தூய்மையானதாக அடக்கியாள வேண்டும்.

பெரிய வயிறு: உலக மாயைகளில் நல்லது-கெட்டது அனைத்தையும் விருப்பு வெறுப்பின்றி ஜீரணிக்கப் பழகு.

அருகம் புல்: இயற்கையின் அழகை, எளிமையை நேசி.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

மோதகம்:  மேலே சொன்ன எல்லாவற்றையும் பின்பற்றினால், இனிய வெகுமதியாக இறைவனின் கருணைக் கடாட்சம் கிடைக்கும்.

- மாலதி சந்திரசேகரன், சென்னை-42

கேட்கிறார்கள்...

சமீபத்தில், அருகில் உள்ள விநாயகர் கோயிலில் சொற்பொழிவு செய்த பெரியவர் ஒருவர், ஸ்ரீமஹா கணபதி மங்களமாலிகா ஸ்தோத் திரத்தின் மகிமையை விளக்கினார். வெள்ளிக்கிழமைகளில்  இந்த ஸ்தோத்திரத்தைக் கூறி விநாயகரை வழிபட்டால், கேது தோஷம் முதலான பல தோஷங்கள் விலகும். தடைகள் யாவும் நீங்கும் என்றும் விவரித்தார். அந்த ஸ்தோத்திரத்தைப் பாடியும் காட்டினார். ஆனால், அதை அப்படியே மனதில் ஏற்றிக்கொள்ள இயலவில்லை.

வாசகர்கள் எவரிடமேனும் இந்த ஸ்தோத்திரப் பாடல் பொருள் விளக்கங்களோடு இருந்தால் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.

- சி.பாக்கியலட்சுமி, சேலம்

வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்ளும் பகுதி. 'உங்களுடன்... நீங்கள்.’ அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி சபா', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism