? சென்ற இதழ் சக்தி விகடனில் 'பாடல் சொல்லும் பாடம்’ பகுதியில் 'பூநிலாய ஐந்துமாய்...’ எனத் துவங்கும் மிக அருமையான பாடலையும் விளக்கத்தையும் படித்து மகிழ்ந்தோம். ஆனால், அந்த பாடல் திருமழிசை ஆழ்வார் அருளியது என்கிறாரே எனது நண்பர்!

- கே. பத்பநாபன், திருவனந்தபுரம்

! வாசகரின் இந்த கேள்வியை எழுத்தாளர் பி.என்.பரசுராமன் முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த விளக்கம்:

சித்தர்களின் பாடல் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட அந்தப் பாடல்:

பூ நிலாய ஐந்துமாய் புனற்கண்நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீகிலாய ஒன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யாவர் காண வல்லரே!

- இப்படி ஐந்தில் துவங்கி ஒன்றில் முடியும் இந்த அபூர்வ பாடலில், பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றிலும் வேறுபட்ட குணங்கள் கொண்டவராகத் திகழும் இறைவனின் மேன்மையையும், பஞ்ச பூதங்களின் தன்மையையும் விவரிப்பதுடன், இயற்கையைப் போற்றிப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும் மறைமுகமாக சிவவாக்கியர் போதிப்பதாக பெரியோர்கள் விளக்கம் தருவார்கள். இதேபோன்று திருமழிசை ஆழ்வாரின் பாடல் ஒன்றும் உண்டு. ஆனால் அதன் கடைசி வரி மட்டும்...

நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே.

- என்று இடம்பெற்றிருக்கும். சிவவாக்கியரே திருமழிசை ஆழ்வார் என்பதும் ஒருசாராரது கருத்தாக உள்ளது.

? ஆலயங்களில் வயதில் மூத்த பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கலாமா?

- சி. லோகாம்பிகை, திருவாரூர்

! இதேபோன்றதொரு கேள்விக்கு, சக்தி விகடனில் ஏற்கெனவே பதில் அளித்திருக்கிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்.

கோயிலுக்குள் எவரது காலிலும் விழக்கூடாது. கோயிலுக்குள் இருக்கும் வரையிலும் சிறியவர்- பெரியவர் என வித்தியாசங்கள் இல்லை; இறைவனே மிகப்பெரியவன். வெளியே வந்ததும் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கலாம்! ஆகமங்களும் புராணங்களும் சொல்லும் தெய்வத் திருவடிவங்களை பின்னுக்கு தள்ளி, 'நரஸ்துதி’யில் கவனம் செலுத்தக் கூடாது!

? சிவாலயங்களில் பிரதோஷத்தின்போது உளுந்து பிரசாதம் தருகிறார்கள். உப்பில்லாத அந்த நைவேத்தியம் எதற்காக?

- கே. பரமசிவம், தூத்துக்குடி

! இறைவனின் பார்வை பட்டதுமே உணவு பரிசுத்தமாகிவிடுகிறது. எனவே, அந்த உணவை உட்கொள்ள பரிந்துரைக்கிறது சாஸ்திரம். தெய்வத்துக்கு படையலிட சமைக்கிறோம். இறைவனுக்கும் உணவுக்கும் அங்கே தொடர்பு வேண்டும்; உணவால் நமக்கு ஆரோக்கியம் தேவை; ஆன்மிகமும் அவசியம். ஆரோக்கியத்துடன் ஆன்மிகத்தையும் வளர்க்கும் உணவு வகைகளை பட்டியலிட்டுள்ளது தர்மசாஸ்திரம். இதனை ஆயுர்வேதமும் ஆமோதிக்கிறது. தவிர, தர்மசாஸ்திரம் உளுந்தையும் பரிந்துரைக்கிறது.

இதேபோல் உப்பில்லாத நைவேத்தியத்தில் தவறு ஏதும் இல்லை. மாறாக, இப்படியான நைவேத்தியமே சிறப்பு எனப் போற்றுகிறது சாஸ்திரம். இதனால்தான் உப்பு கலக்காத அன்னம், உளுந்து, சர்க்கரைப் பொங்கல், பாயசம், பால், பழம் ஆகியவற்றை மகாநைவேத்தியம் என்கின்றனர்.