Published:Updated:

வெயில் நகரில் வெளுத்து வாங்கியது மழை!

145-வது திருவிளக்கு பூஜைவேலூர் பூஜையில் வாசகிகள் மகிழ்ச்சிவி.ராம்ஜி

வெயில் நகரில் வெளுத்து வாங்கியது மழை!

145-வது திருவிளக்கு பூஜைவேலூர் பூஜையில் வாசகிகள் மகிழ்ச்சிவி.ராம்ஜி

Published:Updated:

''சக்தி என்றால் எனர்ஜி! தீபம் என்றாலும் எனர்ஜிதான். சக்தியாகிய பெண்கள், தீபத்தையே இறையுருவாக பாவித்து பூஜை செய்கிறபோது, மிகப் பெரிய எனர்ஜியும் புத்துணர்ச்சியும் கிடைக்கும் என்பது உறுதி!'' - ஆன்மிகப் பேச்சாளர் சண்முகானந்தம் பேசப் பேச, கூட்டம் மொத்தமும் மிகுந்த அமைதியுடனும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் கேட்டுக்கொண்டிருந்தது.

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 12.8.14 அன்று வேலூரில், கோட்டைக் கோயில் என்று சொல்லப்படும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்பாள் சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. சக்திவிகடனின் 145-வது விளக்கு பூஜை இது.

வெயில் நகரில் வெளுத்து வாங்கியது மழை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தர்மத்துக்குக் கட்டுப்பட்டே இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எதையும் ஒரு கட்டுப்பாட்டுடனும் நியமத்துடனும் செய்யவேண்டும் என வகுத்துத் தந்திருக்கிறார்கள், நம் முன்னோர்கள். இந்த விளக்கு பூஜையில், உங்களுக்கு என்னவெல்லாம் வேண்டும் என்பதை பிரார்த்திக்கிற அதே வேளையில், உங்களைச் சுற்றியிருக்கிற உறவுக்காரர்களுக்காகவும் நண்பர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். அப்போது, உங்களின் வேண்டுதல் யாவும் நிறைவேறியே தீரும்.

வெயில் நகரில் வெளுத்து வாங்கியது மழை!

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்... ஏன், ஒவ்வொரு நாளும் அங்கம் வகிக்கிறது அக்கினி. அதுமட்டுமா? பாடல் பெற்ற ஸ்தலங்களில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்களில், ஸ்ரீஅக்னீஸ்வரர், ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர் என்றெல்லாம் திருநாமம் கொண்டு அருள்பாலிக்கிறார் சிவபெருமான்!'' என்று அவர் சொல்லச் சொல்ல, வாசகிகள் வியந்தும் ரசித்தும் கேட்டார்கள்.

''பெண்களைச் சக்தி என்கிறோம். அந்தச் சக்தி தனித்தனியே இருந்தாலும் சிறப்புதான். ஆனாலும் இதோ, இங்கே அனைவரும் ஒன்றாகக் கூடி, திருவிளக்கு பூஜையில் ஈடுபட்டிருக்கிறீர்கள். தனியே செய்யும் வழிபாட்டைவிட, இப்படியான கூட்டு வழிபாடு, ஆயிரம் மடங்கு வலிமையானது; அதிக புண்ணியங்களையும் பலன்களையும் தரக்கூடியது!'' என்று சண்முகானந்தம் சொல்ல, மொத்த வாசகிகளும் உற்சாகத்துடன் கைதட்டி ஆமோதித்தார்கள்.

பாஸ்கர் சிவாச்சார்யர், கணேஷ் சிவாச்சார்யர், ரவி சிவாச்சார்யர், பாலாஜி சிவாச்சார்யர், பாலசுப்ரமணியம் சிவாச்சார்யர் ஆகியோர் விளக்குபூஜையை சிறப்புற நடத்திக் கொடுத்தார்கள். ஈஸ்வரி, ராஜேஸ்வரி, மகேஸ்வரி, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி, லட்சுமி ஆகிய வாசகிகள் இணைந்து, சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

வெயில் நகரில் வெளுத்து வாங்கியது மழை!

கால் நடக்க முடியாத வலியில் ஒரு வாசகியும், கை ஆபரேஷன் செய்திருந்த நிலையில் ஒரு வாசகியும் வந்திருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. ஆஸ்பத்திரியில் நர்ஸாகப் பணிபுரியும் ஜெயலட்சுமி, கழுத்தில் அடையாள அட்டையுடன் அவசரம் அவசரமாக வந்து கலந்துகொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்தும் சென்னையில் இருந்தும் ஆறேழு வாசகிகள் குழுவாக வந்திருந்தார்கள்.

நெல்லை, காசி விஸ்வநாதன் வழங்கிய விபூதி, குங்குமப் பாக்கெட்டுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. கோமாவில் இருந்து மீண்டு உயிர் பிழைத்த தன் மகன் அன்பழகனுக்குப் பேச்சு வரவேண்டும் என்பதற்காக, தாட்சாயினி எனும் வாசகி, பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு மஞ்சள் சரடு, மஞ்சள், குங்குமம் கொண்ட பாக்கெட்டுகளை வழங்கினார்.

''திருச்சி, பெரம்பலூர், கூடலூர், திருநெல்வேலியில பூஜை முடிஞ்சதும் மழை பெஞ்சுதாமே..! இதோ, எங்க வெயில் நகரம் வேலூர்ல பூஜை ஆரம்பிக்கும்போதே மழை வந்திருச்சு, பார்த்தீங்களா? ஏன்னா... கோட்டை கோயில் ஸ்வாமி பேரு ஸ்ரீஜலகண்டேஸ்வரராச்சே!'' என்று 'பஞ்ச்’ வைத்துப் பேசி கூட்டத்தை கலகலப்பாக்கினார் வாசகி சரண்யா.

'அட... ஆமா!’ என்று மொத்தக் கூட்டமும் கைதட்டி ஆர்ப்பரித்தபடி, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகக் கலையத் தொடங்கியது!

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism