Published:Updated:

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

Published:Updated:
சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

எத்தனை முறை கேட்கலாம்?

மாணவன் ஒருவன், பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் முதலிடம் கிடைக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினான். வேண்டுதல் நிறைவேறியது. மாநிலத்தில் முதலாவது இடம் கிடைக்கப் பெற்றான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கல்லூரியில் இறுதி ஆண்டுத் தேர்வு. கடவுளிடம் மண்டியிட்டான். 'நான் முதல் வகுப்பில் பாஸாக வேண்டும்’ என வேண்டினான். அப்படியே நடந்தது. அடுத்து, நல்ல வேலைக்காகப் பிரார்த்தித்தான். அதுவும் நிறைவேறியது. தொடர்ந்து, கல்யாணம் நல்லவிதமாக முடியவேண்டும், நல்ல மனைவி, அழகான குழந்தைகள் வாய்க்க வேண்டும் என்று அவன் செய்த அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறின.

கையில் பணம் தாராளமாகப் புரண்டது. தானம் செய்ய விரும்பினான். பத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றி வைத்துக்கொண்டு கோயில்களுக்குச் சென்றான். கையேந்தியவர்களுக்கு தலா பத்து ரூபாய் கொடுத்தான். வரிசை நகர்ந்தது. வரிசையில் வந்து கை நீட்டிய ஒருவரைக் கண்டதும், அவனுக்குக் கடுங்கோபம் வந்தது. காரணம், முன்பே இந்த வரிசையில் நின்று ஒருமுறை பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு சென்றவர் அவர். அவரே மறுபடியும் வரிசையில் வந்து கை நீட்டியது அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவரைக் கடுமையாகத் திட்டிப் புறக்கணித்துவிட்டு, வீடு திரும்பினான்.

இரவில், அவனது கனவில் கடவுள் தோன்றினார். ''ஏனப்பா... ஒருவர் வெறும் பத்து ரூபாய்க்காக இரண்டாவது தடவை கை நீட்டியதற்கே உனக்கு இத்தனைக் கோபம் வந்துவிட்டதே... நன்றாக யோசித்துப் பார்... பள்ளி நாட்களில் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி பாஸாக வேண்டும் என்பதில் தொடங்கி, நல்ல வேலை, மனைவி, மக்கள் வேண்டும் என்பதற்காக நீ மீண்டும் மீண்டும் என்னிடம் கையேந்தவில்லையா?'' எனக் கேட்டார்.அந்த ஆசாமிக்கு புத்தியில் உறைத்தது. புது மனிதனாக மாறினான்!

நொச்சூர் வெங்கடராமனின் சொற்பொழிவில் கேட்டவர்:

  வே.சீனிவாசன்

கோகுலாஷ்டமி ஆராதனை!

சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் ஸ்ரீஸ்வபாவானந்த குரு மண்டலி அமைப்பினர், குறிப்பிட்ட பண்டிகை தினங்களிலும், விழாக்காலங்களிலும் உலக நன்மைக்காக விசேஷ வழிபாட்டு வைபவங்களை ஆராதனைகளை நடத்தி வருகிறார்கள்.

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

வஸந்த நவராத்திரியை ஒட்டி ஸ்ரீசண்டி ஹோமம், மஹா சிவராத்திரியில் விரஜா ஹோமம் (விபூதி தயாரித்தல்), வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாம ஹோமம், மாசி கிருத்திகை தினத்தில் ஸ்ரீசுப்ரமணிய ஹோமம், ஸ்ரீநரசிம்ம ஜயந்தி மற்றும் மத்யாஷ்டமியில் சிறப்பு பஜனை வழிபாடுகள் என்று குறிப்பிட்ட விசேஷ தினங்களை சிறப்பாக அனுஷ்டித்து வருகிறார்கள். இந்த வரிசையில், கடந்த 17.8.14 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னை, பூந்தமல்லி ருக்மிணி நகர், 4வது தெருவில் உள்ள மண்டலியின் உறுப்பினர் சுப்ரமண்யன் என்பவரது இல்லத்தில்  ஸ்ரீகோகுலாஷ்டமி வைபவம் சிறப்புறக் கொண்டாடப்பட்டது.

பிரம்மஸ்ரீ கே.ஆதிசங்கர சாஸ்திரிகள் தலைமையில்... ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீகிருஷ்ண ஆவரண பூஜை, புருஷ சூக்தம், ஸ்ரீசூக்தம், ஸ்ரீவிஷ்ணு சூக்தம் மற்றும் ஸ்ரீதுர்கா சூக்த ஹோமம் மற்றும் பாராயணத்துடன் நடைபெற்ற ஆராதனைகளில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றார்கள்.

இதுபோன்ற வைபவங்களில் கலந்துகொள்வதால் நம் மனமும் சிந்தையும் ஆன்மபலம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

எம்.கார்த்திகேயன், ஆவடி

கேட்கிறார்கள்...

சென்ற இதழ் சக்தி ஜோதிடம் இணைப் பிதழில் திருவம்பலச் சக்கரத்தின் மகிமையைப் படித்து மகிழ்ந்தோம். எங்கள் இல்லத்திலும் அந்த சக்கரத்தை வைத்து வழிபட விரும்புகிறோம். அது எங்கு கிடைக்கும், எப்படிப் பெறுவது என்பது குறித்து தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.

எம். சுயம்புலிங்கம், ஆத்தூர்

அஷ்டமங்கலப் பொருட்கள் லட்சுமி கடாட்சம் நிறைந்தவை என்பார்கள். அவை என்னென்ன? அவற்றை வீட்டில் வைத்து வழிபடலாமா?

குணவதி, திருவண்ணாமலை

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

ஸ்ரீ கண்டப்ரேம புத்ராய கௌரீவாமாங்க வாஸிநே

த்வாத்ரிம் ஸத்ருபயுக்தாய ஸ்ரீகணேசாய மங்களம்.

ஆதி பூஜ்யாய தேவாய தந்தமோதக தாரிணே!

வல்லபா ப்ராணகாந்தாய ஸ்ரீகணேசாய

                               மங்களம்.

லம்போதராய ராந்தாய சந்திரகர்வாபஹாரிணே

கஜாநநாய ப்ரபவே ஸ்ரீ கணேசாய மங்களம்!!

பஞ்சஹஸ்தாய வந்திதாய பாராங்குபர தராயச

ஸ்ரீமதே கஜகர்ணாய ஸ்ரீகணேசாய மங்களம்!!

த்வை மாதுராய பாலாய ஹேரம்பாய மஹாத்மனே

விகடாயா குவாஹாய ஸ்ரீகணேசாய மங்களம்

ப்ருபர்னியர்ருங்காயாஜிதாய க்ஷிப்ராபீஷ்டார்த்த தாயினே

ஸித்தி புத்தி ப்ரமோதாய ஸ்ரீகணேசாய மங்களம்.

விலம்பியக்ஞஸுத்ராய ஸர்வ விக்னநிவாரிணே

தூர்வாதள ஸுபூஜ்யாய ஸ்ரீகணேசாய மங்களம்

மஹாகாயாய பீமாய மஹாஸேநாக்ரஜன்மனே

த்ரிபுராரிவோத் தர்த்ரே ஸ்ரீகணேசாய மங்களம்

ஸிந்தூர ரம்ய வர்ணாய நாகபத்தோ தராயச

சக்தி சபா - உங்களுடன் நீங்கள்!

ஆமோதாய ப்ரமோதாய ஸ்ரீகணேசாய மங்களம்

விக்னகர்த்ரே துர்முகாய விக்னஹர்த்ரே பரிவாத்மனே

ஸுமுகாயைகதந்தாய ஸ்ரீகணேசாய மங்களம்

ஸமஸ்த கணநாதாய விஷ்ணவே தூமகேதவே

த்ரியக்ஷாய பாலசந்த்ராய ஸ்ரீ கணேசாய மங்களம்

சதூர்திபராய மான்யாய ஸர்வவித்யாப்ரதாயினே

வக்ரதுண்டாய குப்ஜாய ஸ்ரீகணேசாய மங்களம்

துண்டினே கபிலாக்யாய ஸ்ரேஷ்டாய

                    ருணஹரிணே

உத்தண்டோத்தண்டரூபாய ஸ்ரீகணேசாய

                                மங்களம்

கஷ்ட ஹர்த்ரே த்விதேஹாய பக்தேஷ்ட

                              ஜயதாயினே

விநாயகாய விபவே ஸ்ரீகணேசாய மங்களம்

ஸச்சிதா நந்த ரூபாய நிர்குணாய குணாத்மனே

வடவே லோக குரவே ஸ்ரீகணேசாய மங்களம்

ஸ்ரீ சாமுண்டா ஸுபுத்ராய ப்ரஸன்னவதனாயச

ஸ்ரீராஜ ராஜ ஸேவ்யாய ஸ்ரீகணேசாய

                                மங்களம்

ஸ்ரீ சாமுண்டாக்ருபா பாத்ர ஸ்ரீக்ருஷ்ணேந்தர

                              விநிர்மிதாம்

விபூதி மாத்ருகாரம்யாம் கல்யாணைஸ்வர்ய தாயி நீம்

ஸ்ரீமஹா கணநாதஸ்ய ஸ்ரீபாம் மங்கள

                               மாலிகாம்

ய: படேக் ஸததம் வாணீம் லக்ஷ்மீம்.

ஸித்தி மவாப்நுயாத்

'நீலகண்டரின் பிரியத்துக்கு உரிய புத்திரனும், அம்பாளின் இடது மடியில் வசிப்பவரும், முப்பத்திரண்டு ரூபங்கள் உள்ளவருமான மகாகணபதிக்கு மங்களம் உண்டாகட்டும்’ எனத் துவங்கும் இந்த ஸ்லோகத்தின் முழுமையான பொருள் விளக்கத்தை www.vikatan.com ல் காணலாம்

 வாசகர்களே...

ஆன்மிகம் சம்பந்தமான உங்கள் அனுபவங்கள், சந்தேகங்கள், உங்களுக்குத் தெரிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் பகுதி. ‘உங்களுடன்... நீங்கள்.’

அனுப்பவேண்டிய முகவரி

‘சக்தி சபா’ சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism