? சென்ற இதழ் அட்டைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஓவியர் பத்மவாசன் அவர்கள் வரைந்த பிள்ளையார் படம் கொள்ளை அழகு! கண்களில் ஒற்றிக்கொண்டோம். பார்ப்பதற்கு திருச்சி மலைக்கோட்டை பிள்ளையார் போல் இருக்கிறார். இவர் எந்த திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் பிள்ளையார் என்ற தகவலை அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

சரஸ்வதி, காரைக்குடி

வாசகியின் கேள்வியை ஓவியர் பத்மவாசனிடம் தெரிவித்தோம். அவர் தந்த தகவல்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கோயில் கொண்டிருக்கும் பிள்ளையார் இவர். 'தி ஹிந்து டெம்பிள் சொஸைட்டி ஆஃப் நார்த் அமெரிக்கா’ அமைப்பினர் நிறுவிய கோயிலில் குடியிருக்கும் இவரது நாமகரணம் மகா வல்லப கணபதி.

? சக்தி விகடனின் 'புதிர் புதிது’ பகுதி மிக அற்புதமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. வெறும் போட்டியாக மட்டுமே இல்லாமல், புராணத் தகவல்களை எல்லோரும் அறிந்துகொள்ளும் வகையில் புதிர் அமைப்பது சிறப்புக்கு உரியது. கடந்த இதழில், 'விநாயக சதுர்த்தியில் மட்டும் பிள்ளையாருக்கு சமர்ப்பிக்கப்படும் பெருமை பெற்ற ஒரு பொருளைக் கண்டு பிடிக்கும்படி புதிர் அளித்திருந்தீர்கள். விடை 'துளசி’ என்பதை அறிந்தோம். புதன் கிழமைகளிலும் பிள்ளையாருக்கு துளசி சார்த்தலாம் என்கிறார்கள், சிலர். இதுகுறித்த நியதிகள் என்ன?

ஜி.பிருந்தா, பாட்னா

பெயருக்குப் பொருத்தமாக கேள்வி கேட்டுள்ளீர்கள். துளசிக்கு 'பிருந்தா’ என்றும் ஒரு பெயர் உண்டு!

துளசி குறித்து இதேபோன்றதொரு கேள்விக்கு ஏற்கெனவே சக்தி விகடனில் பதில் வந்துள்ளது. அந்த விளக்கம்:

பக்தி மேலீட்டால் பழத்துக்குப் பதிலாக தோலை கடவுளுக்கு அளித்ததாக கதை உண்டு. 'தோலை அளிக்கலாமா?’ எனும் சந்தேகம் பக்தனிடம் தோன்றாது. பகவானும் அந்த பழத்தோலை உண்டு மகிழ்வான் என்று புராணம் சொல்லும். இலை, புஷ்பம், பழம், நீர் ஏதாவது ஒன்றை பக்தியுடன் எனக்கு அளித்துவிடு என்பான் கண்ணன். இன்ன இலை, இன்ன பூ என்று அவன் வரையறுக்க வில்லை. எந்த தெய்வத்தை வணங்கினாலும் என்னை வணங்கியதாக ஆகிவிடும் என்பான்.

அவன் படைத்த பொருளையே தனக்கு அளிக்கச் சொல்கிறான்.

அவனது பொருளில் அவனுக்கு பாகுபாடு இல்லை. அப்படியிருக்க, விசேஷ தினங்களில் துளசி ஆகலாம்; சாதாரண நாட்களில் ஆகாது, அவருக்கு துளசி பிடிக்காது, மற்றவருக்கு வில்வம் பிடிக்காது, அவருக்கு தாழம்பூ பிடிக்காது, இவருக்கு தாமரை பிடிக்காது என்ற விளக்கங்கள் ஏற்புடையவை அல்ல.

பூஜை செய்பவன், வழிபடுபவன் இறைவனிடம் மனதை நிலைநிறுத்தப் பழக வேண்டும்.

பணிவிடையில் தென்படும் உருப்படிகளில் கவனம் செலுத்தி புலன் விசாரணையில் சிந்தனை திரும்பினால், பக்தி நழுவிவிடும். ஒரு நாளும் பக்தனாக மாற இயலாது. நமது தேவைகளைப் பூர்த்தி செய்யவே வழிபாடு என்று நினைக்கக்கூடாது. அப்படி எண்ணினால், தேவைக்கு ஏற்ப பொருளை அளிக்கும் எண்ணம் உருவாகும். அது பக்தி இல்லை; வியாபாரம்.

? வீட்டில் தெய்வ விக்கிரகங்கள் வைத்து வழிபடும் நிலையில், வேலை நிமித்தமாகவும், வெளியூர் பயணங்களாலும் சில நாட்கள் பூஜை தடைப்பட்டால், தெய்வ குற்றம் நேருமா?

வ. கார்த்திகேயன், கடலூர்

எங்கும் வியாபாரம்; எதிலும் வியாபாரம் என்று ஆகிவிட்ட இன்றைய சூழலில், நாள் முழுவதும் அலுவலகப் பணி எனும் நிலை வந்துவிட்டது. உடல் ஆரோக்கியத்தை கவனிக்கக்கூட நேரமின்றி, இரவிலும் வேலை செய்யும் கட்டாயம் இப்போது!

உணவைத் தள்ளிப் போட்டுவிட்டு வேலைக்கு முன்னுரிமை தருகிறோம். அப்படியிருக்க... தினமும் தெய்வ பணிவிடை என்பது பலருக்கும் இயலாத காரியம்!

ஆசாபாசங்களையும் வளர்த்து, ஆன்மிகத்தையும் ஏற்பது அறியாமை. அபிஷேக ஆராதனைகள் விட்டுப்போனால் தவறேதும் இல்லை. தெரிந்து செய்த

தவறல்ல என்பதால், இதை கடவுள் மன்னிப்பார்!

? அஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் பஞ்சாங்க நமஸ்காரம் குறித்து விளக்குங்களேன்.

பெ. பத்மா, ஏர்வாடி

'அஷ்டாங்கம்’ என்றால், எட்டு உடல் உறுப்புகள் என்று பொருள். மார்பு, மனம், கண்கள், சிரம், வாக்கு, கைகள், கால்கள், காதுகள் ஆகிய அத்தனையும் வணக்கத்தில் இணையவேண்டும் என்பர். இந்த எட்டில் மார்பு, காதுகள், கால்கள் இந்த மூன்றையும் சேர்க்காத வணக்கம், பஞ்சாங்க நமஸ்காரமாக மாறும். பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய வணக்கத்தில், இந்த மூன்றையும் தவிர்க்கவேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்யலாம்; பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்தால் போதும்.