Published:Updated:

146வது திருவிளக்கு பூஜை

வீ.ராம்ஜி படங்கள்: தே.சிலம்பரசன்

146வது திருவிளக்கு பூஜை

வீ.ராம்ஜி படங்கள்: தே.சிலம்பரசன்

Published:Updated:

''விளக்கு பூஜைல கலந்துக்கிட்டா, நல்லதெல்லாம் நமக்கு நடக்கும்; கேட்டதெல்லாம் கிடைக்கும்னு சொல்லுவாங்க. விளக்குபூஜைல பேசுவதற்கு ஒத்துக்கிட்ட எனக்கே அப்படி நல்லது நடந்திருக்கு. எம்.பி.பி.எஸ். படிச்ச என் பையனுக்கு, சிறப்பு மருத்துவப் படிப்பு படிக்கறதுக்கு, நாங்க விரும்பினபடியே, விரும்பிய இடத்துலயே சீட் கிடைச்சிருச்சு. அந்த சந்தோஷத்தோடயே இந்த பூஜைல பேசுறதை பெரும் பாக்கியமா நினைக்கிறேன்' என்று கண்ணீரும் சந்தோஷமும் பொங்க, தலைமை ஆசிரியை கலாதேவி பேச்சைத் துவக்கியதுமே, பூஜைக்கு வந்த பெண்கள் பேச்சைக் கேட்க ஆர்வமாகிவிட்டார்கள்.

சக்திவிகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து வழங்கும் திருவிளக்கு பூஜை, 26.8.14 அன்று திண்டிவனம் திரெளபதி அம்மன் கோயிலில் நடைபெற்றது. சக்திவிகடனின் 146வது விளக்கு பூஜை இது.

''தப்பா எடுத்துக்காதீங்க. இதே ஊர்ல, ரெண்டு மூணு தெரு தள்ளி இருந்தாலும் நிறையப் பேர் என்னைப் பாத்திருக்க வாய்ப்பு குறைவுதான். ஸ்கூல் வீட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்னு வாழ்ந்துகிட்டிருக்கறவ நான். கடைகண்ணிக்கு, கோயிலுக்குன்னு கூட பெருசா வரமாட்டேன். ஆனா அதையெல்லாம் கடந்து,  பையன் சிறப்பு மருத்துவத்துல கண் பத்தி படிக்க சீட் கிடைச்சிருக் குன்னா... அதுக்குக் காரணம், தினமும் காலைலயும் சாயந்திரமும் தவறாம வீட்ல விளக்கேத்தி ஒரு பத்துநிமிஷம் வேண்டிக்குவேன். அப்படி பத்து நிமிஷம் நின்னதுக்கே, நான் நினைச்சதை நிறைவேத்திக் கொடுத்திருக்கிற கடவுள், இதோ... இதுமாதிரி விளக்கு பூஜைல கலந்துக்கிட்டு பூஜை பண்ற உங்களுக்கு, நீங்க நினைச்சது  நினைக்காதது, கேட்டது  கேட்காததுன்னு எல்லா நல்லதுகளையும் தந்து உங்களை சந்தோஷமா வாழவைப்பார், பாருங்களேன்' என்று உணர்ச்சி ததும்ப கலாதேவி பேசியபோது, மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரித்து கரவொலி எழுப்பியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

146வது திருவிளக்கு பூஜை

''மகளுக்காக விளக்கு பூஜைக்கு வந்தேன். ஒருத்தர்தான் போன்ல பதிவு பண்ணணும்னு நினைச்சுக்கிட்டேன். அடடா....'' என்று தவித்த இந்திரா எனும் வாசகிக்கும், ''பஸ்ல வரும்போது பார்த்தேன். டக்குனு இறங்கிட்டேன். பூஜையைப் பாக்கறதே புண்ணியம்'' என்று சொன்ன சத்தியவேடு வாசகி சத்யாவுக்கும் விளக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம். நெகிழ்ச்சியுடன் பூஜையில் பங்கேற்றார்கள்.

தலைமை ஆசிரியை கலாதேவிக்கு, முதன்முதலில் விளக்கு பூஜையில் கலந்துகொண்ட பெண்களைக் கொண்டு நினைவுப் பரிசு வழங்கச் செய்தோம். பொன்னுமணி எனும் ஆசிரியை, சிறப்புப் பேச்சாளருக்கு

146வது திருவிளக்கு பூஜை

சால்வை அணிவித்து, வாழ்த்தினார்.

பட்டரசி எனும் வாசகி, ''மனுஷாள்கிட்ட உண்மையா இருந்தாத்தான், கடவுளோட அருளுக்குப் பாத்திரமாக முடியும். யாருக்கும் கெடுதல் பண்ணாம, திட்டமிட்டு, பக்தியோடு வாழ்ந்தா... அம்மனோட அருள் நிச்சயம் கிடைக் கும்' என்றார். சம்பூரணம், மஞ்சுளா ஆகியோர் ''இப்படி மைக்ல பேசிப் பழக்கமில்லீங்க. மனசுக்கு நிறைவா இருந்துச்சு பூஜை' என்று ஆரம்பித்து, மடை திறந்த வெள்ளமென மனதில் இருப்பதை யெல்லாம் வெள்ளந்தியாகப் பேசினார்கள்.

''மனோரஞ்சிதம் என்பவர், கல்யாணமாகி ஏழு வருஷம் கழிச்சு, திரெளபதியம்மன் அருளால குழந்தை பாக்கியம் கிடைச்சிச்சுன்னார். எனக்குக் கல்யாணமாகி ஆறு வருஷமாச்சு. அவங்க சொன்னதையும் ஆத்மார்த்தமா நடந்த விளக்குபூஜையையும் பாக்கறப்ப, சீக்கிரமே எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைச்சிரும்னு நம்பிக்கை வந்துருச்சு' என்று உற்சாகம் பொங்கப் பேசினார் அம்பிகாதேவி.

''12 வருஷத்துக்கு முன்னாடி ஒரு விளக்குபூஜைல கலந்துகிட்டப்ப, தாலிச்சரடைக் காணோம். புருஷனுக்கு கேன்சர் வேற. என்னடா இது அபசகுனம் மாதிரினு கலங்கிட்டேன். தாலிச்சரடு கிடைச்சதும்தான் நிம்மதியானேன். இதோ... இன்னிக்கி, என் புருஷன் ஆரோக்கியமா, ஒரு குறைவும் இல்லாம இருக்கார்' என்று சொல்லும்போதே அழுதுவிட்டார் சத்யா.

பூஜை ஏற்பாடுகளை, கோயில் டிரஸ்டியும் காங்கிரஸ் தலைவராக இருந்த திண்டிவனம் ராமமூர்த்தியின் சகோதரருமான சம்பத்குமார் மற்றும் பாலு பூசாரி முதலானோர் செய்திருந்தனர். உற்்ஸவரை ஊஞ்சலில் அலங்காரத்துடன் அமரச் செய்தது அழகு. செல்லப்பா குருக்கள் விளக்கு பூஜை செய்த விதமும் அருமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism