அருகில் உள்ள புதிர்ப் படத்தைப் பாருங்கள்.
ஆறு சதுரங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஓர் எழுத்து அதிக அளவில் இடம்பெற்றிருக்கிறது. அந்த எழுத்து தவிர, வேறு சில எழுத்துக்களும் சதுரங்களில் ஒளிந்துகிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்து சரியாக ஒழுங்குபடுத்தினால், ஒரு பெயர் கிடைக்கும்.
இப்படியே ஆறு சதுரங்களிலும் ஒளிந்து கிடக்கும் பெயர்களைக் கண்டுபிடியுங்கள். இதற்கு, கீழ்க்காணும் குறிப்புகளும் உங்களுக்கு உதவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பு:
1. நாபியில் தாமரையைக் கொண்டுள்ளதால் பெருமாளுக்கு இப்படியொரு பெயர் உண்டு. (முதலெழுத்து)
2. ஸ்ரீவிஷ்ணுவின் அம்சமான மருத்துவக் கடவுள். (முதலெழுத்து)
3. கங்கை நதியின் உற்பத்தி ஸ்தானம். (முதலெழுத்து)
4. பத்தாவது திதி (முதலெழுத்து)
5. விஸ்வாமித்ர முனிவர் கண்டுசொன்ன மந்திரம்.
(3வது எழுத்து)
6. 'வில்லுக்கு ’ என்பார்கள்.
(கடைசி எழுத்து)
ஆறு பெயர்களையும் கண்டுபிடித்துவிட்டீர்களா?
அடுத்ததாக, ஒவ்வொரு பெயரிலும் அடைப்புக்குள் சொல்லப்பட்ட எழுத்துக்களை மட்டும் தனியே எடுத்து ஒழுங்குபடுத்தினால், ஓர் அசுரனின் மைந்தன் பெயர் கிடைக்கும். அந்த பெயரை கீழ்க்காணும் கட்டத்தில் நிரப்பி அனுப்புங்கள்.

சிறப்புக் கேள்வி: விடையாகக் கிடைக்கும் அசுர மைந்தன் குறித்து, உங்களுக்குத் தெரிந்த தகவலை ஓரிரு வரிகளில் எழுதி அனுப்புங்கள்.

போட்டிக்கான விதிமுறைகள்:
இந்த பக்கத்தை பூர்த்தி செய்து, அப்படியே கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பலாம். தனித்தாளில் எழுதி அனுப்பக்கூடாது.
சரியான விடையோடு, சிறப்புக் கேள்விக்கும் கச்சிதமாக பதில் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.
உங்கள் விடைகள் எங்களுக்கு வந்து சேரவேண்டிய கடைசி தேதி 21.10.14.
விடைகளை சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இமெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.
ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!
அனுப்ப வேண்டிய முகவரி: சக்தி விகடன், புதிர் புதிது - 15, 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.
