Published:Updated:

அட்சய திருதியை - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

அட்சய திருதியை

பெரும்பாலானோர் இந்த நாளை தங்கம் வாங்க உகந்த நாள் என்று புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால் அதைத் தாண்டி இந்த நாள் புண்ணியங்கள் அருளும் திருநாள் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் பல நன்மைகளை நாம் அடைய முயலலாம்.

அட்சய திருதியை - வளம் பெருக 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானம்... வாங்க வேண்டிய பொருள்கள் எவை?

பெரும்பாலானோர் இந்த நாளை தங்கம் வாங்க உகந்த நாள் என்று புரிந்துகொண்டிருக்கிறோம். ஆனால் அதைத் தாண்டி இந்த நாள் புண்ணியங்கள் அருளும் திருநாள் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் பல நன்மைகளை நாம் அடைய முயலலாம்.

Published:Updated:
அட்சய திருதியை
`அட்சயம்’ என்றால் `வளர்தல்’ என்று பொருள். திருதியை என்றால் மூன்றாம் நாள். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை அட்சயத் திருதியை. இந்த நாளில் தொடங்கும் யாவும் வளரும். வாங்கும் யாவும் பெருகும். செய்யும் தானங்கள் பல கோடி மடங்கு புண்ணியங்களை அருளும். அதனால்தான் ஓராண்டில் வரும் 24 திருதியை திதிகளில் அட்சயத் திருதியை மிக சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
குபேரன்
குபேரன்

குபேரனுக்கு சம்பத்து கிடைத்து செல்வங்களின் அதிபதியாகியது இந்த அட்சய திருதியை நன்னாளில்தான். கணபதி மகாபாரதம் எழுதத் தொடங்கியதும் இந்த நாளில்தான் என்கிறார்கள். பாருங்கள்... இந்த நாளில் கிடைத்த செல்வமும் ஞானமும் எப்படி யுகங்கள் கடந்து நிலைத்து நிற்கின்றன என்று. அப்படி நம் வாழ்விலும் இந்த நாளில் செய்யும் அனைத்தும் மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. பெரும்பாலானோர் இந்த நாளை தங்கம் வாங்க உகந்த நாள் என்று புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அதைத் தாண்டி இந்த நாள் புண்ணியங்கள் அருளும் திருநாள் என்பதை நினைவில் கொண்டு செயல்பட்டால் பல நன்மைகளை நாம் அடைய முயலலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வீட்டில் செய்ய வேண்டிய பூஜை

இந்த நாளில் நாம் கட்டாயம் செய்ய வேண்டியது - இறைவழிபாடு அவசியம். அட்சய திருதியை நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, கலசம் வைத்துப் பூஜை செய்யும் வழக்கம் உடையவர்கள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

பூஜை அறையை அலங்கரித்து, ஒரு மனைப்பலகையில் வாழையிலை இட்டு, அதில் பச்சரிசியைப் பரப்பி, கலசம் வைக்க வேண்டும். அருகே ஒரு பாத்திரத்தில் நெல் இருந்தால் நிறைத்து வையுங்கள். ஶ்ரீலட்சுமி நாராயணர் படம் அல்லது திருப்பதி ஏழுமலையானின் படம் இருந்தால், அதையும் பிரதானமாக வைத்து மலர் சாத்தி சந்தனம் குங்குமம் இட்டு வையுங்கள். பிறகு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து, நீங்கள் அன்று சிறிதளவேனும் அரிசி, உப்பு, பருப்பு முதலியவற்றை் வாங்கிக் கலசத்தின் முன்பாக வைத்து வணங்க வேண்டும்.

மகாவிஷ்ணு மகாலட்சுமி
மகாவிஷ்ணு மகாலட்சுமி

பிறகு கையில் அட்சதை எடுத்துக்கொண்டு ஒரு மலரையும் அதோடு சேர்த்துக் கைகூப்பி அன்னை மகாலட்சுமி அந்தக் கலசத்தில் எழுந்தருள வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு அட்சதையையும் மலரையும் கலசத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு இஷ்டதெய்வம், குல தெய்வம் ஆகியோரையும் வணங்கி தூப தீப ஆராதனை செய்யவேண்டும். அன்னை மகாலட்சுமியைப் போற்றும் 108 போற்றிகளையோ அஷ்டோத்திரமோ சொல்லி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இன்று பால் பாயாசம் செய்து நிவேதனம் செய்வது சிறப்பு. நிவேதனத்துக்குப் பின் கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்யலாம்.

கலச பூஜை செய்யும் வழக்கம் இல்லாதவர்கள் வெண்ணிற மலர்களையும் மஞ்சள் நிற மலர்களையும் வாங்கி சுவாமி படத்துக்குச் சாத்தி வழிபடலாம். அர்ச்சனை, போற்றிகளைச் சொல்லி வழிபடுவதும் சிறப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அட்சயத் திருதியையில், குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்யலாம், கலைகள் பயிலத் தொடங்கலாம். சுபகாரியங்கள் அனைத்தையும் செய்யலாம். மேலும் உபநயனம் செய்ய, விவசாயப் பணிகளில் ஈடுபட, நிலங்களில் எரு இட, விதை விதைக்க, கதிர் அறுக்க, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க, தானியம் உபயோகிக்க, கால்நடைகள் வாங்க, வாகனம் வாங்க, புதிய ஆடை அணிய, கிரகப்பிரவேசம் செய்ய, மருந்து உட்கொள்ள, பயணம் மேற்கொள்ள ஆகிய அனைத்து சுப காரியங்களையும் திருதியையில் செய்யலாம். இந்த நாளில் எந்த சுபகாரியங்களில் ஈடுபட்டால், இரட்டிப்பு சுபபலன்கள் உண்டாகும். அதே போன்று இன்று செய்யும் தானங்களும் பல்கிப் பெருகும்.

தங்கம்
தங்கம்

அட்சய திருதியையில் என்னென்ன வாங்கலாம்?

மகாலட்சுமித் தாயார பாற்கடலில் வாசம் செய்பவள். எனவே வெள்ளை நிறப்பொருள்களை வாங்குவது சிறப்பு. உப்பு, பால், அரிசி போன்றவை வெள்ளை நிறம் என்பதால் இவற்றை வாங்குவது விசேஷம். அதேவேளை இந்த நாளில் வாங்கும் பொருள்கள் பல்கிப் பெருகும் என்பதால் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற உலோகங்கள் வாங்குவதும் நல்லது.

தங்கம் வாங்க உகந்த நேரம்:

இந்த வருடம் 03.5.22 செவ்வாய்க்கிழமை அட்சய திருதியை. இந்த நாள் முழுவதுமே தங்கம் வாங்குவது சிறப்பு என்றாலும் சில நேரங்கள் மிகுந்த பலன் தரும்.

இந்த நாளில் காலை 11 முதல் 12 வரை சனி ஹோரையில் தங்கம் வாங்க, அது நிலைத்து இருக்கும். பகல் 12 முதல் 1.30 மணி வரை குருஹோரை, இந்த நேரத்தில் வாங்கினாலும் தங்கம் மென்மேலும் பெருகும்.

மாலை 5 முதல் 6 மணி வரை சுக்கிர ஹோரையிலும் மாலை 7 முதல் 8 மணி வரை குரு ஹோரையிலும் வாங்கினால் நம்மிடம் தங்கம் நம்மோடு தங்கியும் இருக்கும்.

ஆம்பூர் வேல்முருகன்
ஆம்பூர் வேல்முருகன்

12 ராசிக்காரகளும் வாங்க வேண்டிய பொருள்கள்... செய்ய வேண்டிய தானங்கள்

மேஷம்: சாம்பார் சாதத்தை தானம் செய்வது நற்பலன்களை ஏற்படுத்தும். செம்பு பாத்திரம், வீட்டிற்குச் சமையலுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை தரும்.

ரிஷபம்: பால் பொருள்களை, அதாவது பால்கோவா தானம் செய்வது நற்பலன்களைத் தரும். வீட்டிற்கு நெய் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும்.

மிதுனம்: கீரை சாதம், பச்சைக் கீரைகள் தானம் செய்வது நன்மை தரும். புதிய புத்தாடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித்தரும்.

கடகம்: நீர்மோர் தானம் செய்வது நன்மை தரும். வீட்டிற்கு வெண்ணை மற்றும் வெண்ணைப் பொருள்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.

சிம்மம்: மிளகுப் பொங்கல் தானம் செய்வது நன்மை தரும். கோதுமை மற்றும் கோதுமை பலகாரங்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.

கன்னி: தக்காளி சாதம் தானம் செய்வது நன்மை தரும். பெண்களுக்குத் தேவையான அணிகலன்கள், ஆடைகள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தி தரும்.

துலாம்: பேரிச்சை பழம் தானம் செய்வது நன்மை தரும். முந்திரி, திராட்சை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தி தரும்.

விருச்சிகம்: பழரசம் தானம் செய்வது நன்மை தரும். வெள்ளரி மற்றும் தர்பூசணி பழங்களை வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.

தனுசு: பானகம் தானம் செய்வது நன்மை தரும். வெல்லம் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.

மகரம்: நிலக்கடலை மற்றும் கிழங்குகள் தானம் செய்வது நன்மை தரும். உப்பு வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.

கும்பம்: இளநீர் மற்றும் கனிகள் தானம் செய்வது நன்மை தரும். அரிசி வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.

மீனம்: இனிப்புகள் தானம் செய்வது நன்மை தரும். மோர் மற்றும் பால் பொருள்கள் வாங்குவது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தித் தரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism