Published:Updated:

எதிர்மறை எண்ணங்களைக் கடக்க உதவும் 2 விஷயங்கள்! சுமதிஶ்ரீ - தினம்தோறும் திருவருள் #Video

எதிர்மறைச் சிந்தனை
எதிர்மறைச் சிந்தனை

ஒரு சிலர் குறைகளையே பெரிதாக நினைத்து வருந்தியபடி இருப்பார்கள். சிலரோ அடுத்தவர்களின் குறையைப் பெரிதுபடுத்திக் கொண்டும் அதை பரப்பிக் கொண்டும் இருப்பார்கள்.

மனித வாழ்வில் எல்லோருக்கும் ஏதேனும் ஒரு குறையிருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதை அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது வாழ்க்கை. குறை ஒன்றும் இல்லை என்று இருப்பதைக் கொண்டு வாழும்போதுதான் வாழ்க்கை நம் வசமாகிறது என்கிறார்கள் ஞானிகள். இந்தக் குறை ஒன்றும் இல்லை என்னும் வார்த்தையே இரண்டு எதிர்மறையான வார்த்தைகளால் உருவாகியிருக்கிறது. ஆனால் அது தரும் பொருள் எவ்வளவு நேர்மறையானது

குழப்பம்
குழப்பம்

ஒரு சிலர் குறைகளையே பெரிதாக நினைத்து வருந்தியபடி இருப்பார்கள். சிலரோ அடுத்தவர்களின் குறையைப் பெரிதுபடுத்திக் கொண்டும் அதை பரப்பிக் கொண்டும் இருப்பார்கள். முதல் வகையானவர்களைவிட இரண்டாம் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்கள் தாங்களும் எதிர்மறைச் சிந்தனைகளுக்கு ஆளாகி மற்றவர்களையும் அதே சிக்கலில் தள்ளிவிடுபவர்கள்.

அப்படிப்பட்ட சிலர் குறித்து இன்றைய தினம்தோறும் திருவருள் பகுதியில் பேசும் சுமதி ஶ்ரீ, "எவ்வளவு பேர் பாராட்டுகிறார்கள் என்பதைக் கொண்டாட மறுக்கும் மனம் குறை சொல்லும் ஒருவரின் கருத்தைக் கண்டு வருந்துகிறது" என்று சொல்கிறார். அதுவும் இன்றைய சமூக ஊடகங்கள் வளர்ந்துவிட்ட சூழலில் அதன் தாக்கம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதைச் சொல்லி அதிலிருந்து விடுபட்டு 'குறை ஒன்றும் இல்லை' என்னும் நிறைந்த மனத்தோடு வாழும் வழியை எளிமையாக அறிமுகம் செய்கிறார். அதைக் கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்.

அடுத்த கட்டுரைக்கு