Published:Updated:

`மகர சங்கராந்தி' கொண்டாடப்படுவதன் பின்புலம் என்ன?

மகர சங்கராந்தி
மகர சங்கராந்தி

நமக்கு அனுதினமும் ஆற்றலைத் தந்து காத்தருளும் சூரிய பகவான் வடக்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் மாதமானதால், தை மாதம் மிகுந்த ஆற்றல் உடையது.

? சூரியனின் மகர ராசி பிரவேசத்துக்கு மட்டும் என்ன முக்கியத்துவம்? அன்றைய தினத்தை மட்டும் மகர சங்கராந்தி தினமாகக் கொண்டாடுவது ஏன்?

- ஆர்.ரமணி, சென்னை - 34

சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர்: "தேவர்களின் பகல் உத்தராயனம் என்றும் இரவு தட்சிணாயனம் என்றும் அறியவும். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயனம்; ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயனம். தை மாதப் பிறப்பு அதாவது தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரியனின் பிரவேசமாகும் நாள், நமக்கு மிகுந்த அருளை அளிப்பதால், அன்றைய தினம் மகர சங்கராந்தி என்று போற்றப்படுகிறது.

ஆலயங்களில் நடைபெறும் சிறப்பு யாகங்களுக்கும், திருமணம் போன்ற வைபவங்களுக்கும் உத்தராயன புண்ணிய காலம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. நம்முடைய முன்னோர்களான ரிஷிகள் தற்கால விஞ்ஞானிகளைக் காட்டிலும் ஆழ்ந்த ஞானம் உடையவர்கள். இதை ஏதோ வெறும் வார்த்தைகளாக எண்ண வேண்டாம். இந்த நாளில் கிரகணம் ஏற்படும் என்று பஞ்சாங்கங்களில் கணக்கிட்டுக் கொடுத்திருப்பது முதல் ஆண்டு பலன்கள் வரையிலும் அவர்களின் வார்த்தைகளின்படியே நடந்து வருகின்றன.

மெய்ஞ்ஞானம் என்பது கடவுளிடமிருந்து நேரடியாகப் பெறக்கூடியது. நம் புத்தி சக்திகளினால் சோதித்துப் பெறமுடியாது. அவ்வகையில் உத்தராயன புண்ணிய காலம் முக்கியமானது என்று நம் ரிஷிகள் கூறியிருப்பதால், அதுபோன்ற விஷயங்களை நாம் ஏற்றுக் கடைப் பிடிக்கவேண்டும். அவற்றின் மகிமையை அனுபவங்களால்தான் உணர முடியும். முழுமையாக வாசிக்க > கேள்வி - பதில் பகுதி க்ளிக் செய்க...

நமக்கு அனுதினமும் ஆற்றலைத் தந்து காத்தருளும் சூரிய பகவான் வடக்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் மாதமானதால், தை மாதம் மிகுந்த ஆற்றல் உடையது.

நமக்கு அனுதினமும் ஆற்றலைத் தந்து காத்தருளும் சூரிய பகவான் வடக்கு நோக்கித் தனது பயணத்தைத் தொடங்கும் மாதமானதால், தை மாதம் மிகுந்த ஆற்றல் உடையது. சூரியனை வழிபட்டு, நமக்கு உணவை அளித்திடும் உழவர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களுக்கு உறுதுணையாக விளங்கும் மாடுகளையும் வழிபட்டு, நம் நன்றிக் கடன்களைச் செலுத்துவதும் இந்த மாதத்தில்தான்.

இப்படி, பல சிறப்புகளை தன்னுள்கொண்டு நமக்கு வழிகாட்டி வரும் தை மாதத்தை வரவேற்று, வழிபட்டு வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைவோம்.

- தரிசனம் என்பது இறைவனை தரிசிப்பது மட்டும்தானே... அப்படியிருக்க கோபுரம், துவஜ ஸ்தம்பம், மலை போன்றவற்றை தரிசிப்பது எப்படி தரிசனமாகும்? | நான் உறங்கும்போது திருமாங்கல்யம் கழுத்திலிருந்து கழன்று படுக்கையில் விழுந்து விட்டது. இது ஏதேனும் அபசகுனத்துக்கு அறிகுறியா? பரிகாரம் ஏதேனும் செய்ய வேண்டுமா? : வீட்டில் முருகன் விக்கிரகம் வைத்து பூஜை செய்ய விரும்புகிறேன். அதற்கான நியதிகள் பற்றி விளக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்...

இந்தக் கேள்விகளுக்கு சென்னை `காளிகாம்பாள் கோயில்' சிவஸ்ரீ சண்முக சிவாசார்யர் அளித்த ஆன்மிக பதில்களை சக்தி விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > கேள்வி - பதில் பகுதி https://www.vikatan.com/spiritual/gods/spiritual-questions-and-answers-jan-14

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு