Published:Updated:

கண்ணனே அரங்கேற்றினான்!

கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன்

சுவாமி. அடியேனே ஜயதேவன். பண்டிதன் அல்ல. என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கண்ணனின் திருவிளையாடல்களைப் பாடி இருக்கிறேன்

கண்ணனே அரங்கேற்றினான்!

சுவாமி. அடியேனே ஜயதேவன். பண்டிதன் அல்ல. என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கண்ணனின் திருவிளையாடல்களைப் பாடி இருக்கிறேன்

Published:Updated:
கண்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கண்ணன்

பூரிக்கு அருகே துந்துபில்வம் எனும் ஊரில் நாராயண சாஸ்திரி- கமலாபாய் தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் ஜயதேவ சுவாமிகள். இவரை வேத வியாசரின் அம்சமாகத் தோன்றிய அவதார புருஷர் என்பார்கள்.

ஒரு முறை இவர் மகாவிஷ்ணுவின் அவதார வைபவங்களை நூலாக இயற்றி, அரங்கேற்ற விரும்பினார். அந்தப் பகுதியை ஆண்ட மன்னன் கிரவுஞ்சன் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். ஒரு சுபமுகூர்த்த நாளில் அரங்கேற்ற வைபவம் ஏற்பாடானது. அரசவையில் பண்டி தர்களும் அந்தணர்களும் கூடியிருந்தனர்.

அப்போது கம்பீரமான அந்தணர் ஒருவர் அங்கு வந்து மன்னனை வணங்கி, ‘‘மன்னா... அடியேன் வேத விற்பன்னன். எனது ஊர் கோகுலம். பல ஊர்ப் பண்டிதர்களையும் வாதில் வென்றவன். இங்குள்ள ஜயதேவர் எனும் பண்டிதருடன் தர்க்கம் புரியவே நான் வந்துள்ளேன்!’’ என்றார்.

உடனே ஜயதேவர் அவரை வணங்கி, ‘‘சுவாமி. அடியேனே ஜயதேவன். பண்டிதன் அல்ல. என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கண்ணனின் திருவிளையாடல்களைப் பாடி இருக்கிறேன். இதோ, அந்த கிரந்தம். தயை கூர்ந்து தாங்கள் அதைப் பரிசோதித்து என்னைப் பெருமைப்படுத்தவும்.’’ என்றார்.

உடனே அந்தணர், ‘‘என்ன தைரியம் உமக்கு? பாகவதத்தை நீ புதுப்பித்திருக்கிறாயா? சரி சரி... அதை நீயே வைத்துக் கொள். பாகவத சுலோகங்களை நான் சொல்கிறேன். அவற்றை நீ எழுதிய சுலோகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பிறகு நீயே உனது அறியாமையை உணர்ந்து கொள்வாய்’’ என்ற அந்தணர், தொடர்ந்து சுலோகங்களைச் சொன்னார்.

கண்ணனே அரங்கேற்றினான்!

என்ன ஆச்சரியம்! ஜயதேவர் எழுதியதையே ஓர் எழுத்து மாறாமல் அவர் சொல்லி வந்தார். திகைப்படைந்த ஜயதேவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அவரின் மனதில் பளிச்சென்று ஒரு மின்னல். ‘அந்தணராக வந்திருப்பவர், லோக நாயகனே!’ என்று நொடிப்பொழுதில் அடை யாளம் தெரிந்து கொண்டார்.

பரவசத்துடன் கரங்களை சிரத்துக்கு மேல் உயர்த்தி, ‘‘மாதவா, மதுசூதனா, ஜனார்த்தனா, உன் மாயையை யாரறிவர்!’’ என்று பலவாறு புகழ்ந்து வணங்கினார். ஜயதேவர் கண்ணிமைத்துப் பார்ப்பதற்குள் அந்தணராக வந்தவர் மாயமாக மறைந்தார்.

அசரீரிக் குரல் ஒன்று, ‘‘ஜயதேவா, நீ பாடிய இந்த பாகவத கிரந்தத்தை உலகறிய, யாமே அரங்கேற்றத் திருவுளம் கொண்டோம். சுக முனிவர் இயற்றிய பாகவதத்தைப் படித்த பலனை, உனது பஜ கோவிந்தத்தின் ஓர் அத்தியாயத்தைப் படித்தாலே அடைவார்கள்!’’ என்று அருளியது.

- வி.மாலா, வள்ளியூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism