ஆதி சங்கரர் ஏக ஸ்லோகப் ப்ரகரணம் என்ற ஒரு ஸ்லோகத்தை எழுதியிருக்கிறார். கேள்வி பதிலின் மூலம் அறிவு புகட்டுவதைப்போல இந்த ஸ்லோகம் எழுதப்பட்டிருக்கிறது

"கிம் ஜ்யோதிஸ்தவ பானுமானஹனிமே ராத்ரௌ ப்ரதீபாதிகம்

ஸ்யாதேவம் ரவித்பதர்சனவிதௌ கிம் ஜ்யோதி ராக்யாஹிமே I

சக்ஷூ ஸ்தஸ்ய நிமீலநாதி ஸமயே கிம் தீ: தியோதர்சணே

கிம் தத்ராஹம்: அதோ பவான்பரமகம் ஜ்யோதிஸ்ததஸ் I ப்ரபோ II"

இதை ஒரு ஸ்வாரஸ்யமான உரையாடலைப் போல அமைக்கலாம்.

குரு : சீடனே இந்த உலகத்தை எதைக்கொண்டு பார்க்கிறோம்?

சீடன் : குருவே, நாம் ஒளியின் துணைகொண்டு பார்க்கிறோம்.

குரு : சரிதான். அப்படி உனக்குத் துணை செய்யும் ஒளி எது என்று சொல்லமுடியுமா?

சீடன் : நிச்சயமாக... பகலில் சூரியன் ஒளிதந்து உதவுகிறான். இரவிலோ சந்திரன். அதுவும் இல்லாதபோது தீபங்கள்

குரு : சூரியன், சந்திரன், தீபம் ஆகிய மூன்றிலிருந்து ஒளி புறப்படுகிறது சரி. ஆனால் இந்த ஒளியை எந்த ஒளியைக் கொண்டு காண்கிறாய்?

சீடன் : குருநாதா, சூரியன், சந்திரன் தீபம் என ஒளி புறப்படும் பொருள் எதுவானாலும் நான் என் கண்ணாலேயே காண்கிறேன். என் கண்ணின் ஒளிதான் அவற்றை எனக்குக் காட்டுகிறது.

குரு : சபாஷ் ... இப்போது உன் கண்ணை மூடிக்கொள்... உனக்கு எதன் மூலமாகவாவது ஒளி தெரிகிறதா?

சீடன் : குரு நாதா நான் கண்களை மூடிக்கொண்ட உடன் எதுவும் எனக்குத் தெரியவில்லை. எவ்வளவு பெரிய ஒளியையும் என்னால் காணமுடியவில்லை. ஆனால்...

குரு : என்ன ஆனால்?

சீடன் : மனம் எதை எதையோ சிந்தனைகளை மூடிய கண் திரைகளில் ஓட்டுகிறது. எண்ணங்களால் நிறைகிறது.

குரு : அப்படியா... அப்படி என்றால் அந்த எண்ணங்களை எந்த ஒளிகொண்டு காண்கிறாய்?

சீடன் : என் புத்தியினால். ஒருவகையில் நான்தான் அந்த புத்தி.

குரு : சரியாகச் சொன்னாய். நீதான் எப்போதும் இருக்கும் ஒளி. நீ என்றால் உன் ஆன்மா. அந்த ஆன்மா பரப்பிரம்மத்தின் சிறு சொரூபம். அதுவே சகலத்தையும் காண்கிறது. காணவைக்கிறது. காண்பவையாகவும் இருக்கிறது. ஆத்மாதான் அழியாத ஒளி.

அத்வைதத்தின் சாரமல்லவா இந்த ஸ்லோகம். அனுதினமும் இதைப் பாராயணம் செய்து உள்ளொளி பெருக்குவோம்.