சனிப்பெயர்ச்சிப் பலன்கள்
திருத்தலங்கள்
Published:Updated:

ஆறெழுத்து மந்திரத்தை எப்படி ஜபிக்க வேண்டும் தெரியுமா?

ஆதிசங்கரர்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆதிசங்கரர்

ஆதிசங்கரர்

முருகப்பெருமானைப் போற்றி ஆதிசங்கரர் ஓர் அற்புதமான நூலைப் பாடியிருக்கிறார். அதன் பெயர்- சுப்ரமண்ய புஜங்கம். 33 பாடல்கள் கொண்ட அந்த நூலுக்கு அபூர்வமான உரையை எழுதியிருக்கிறார், தேதியூர் பெரியவா!

ஆதிசங்கரர்
ஆதிசங்கரர்


காஞ்சி காமகோடி பீடத்திலும், சிருங்கேரி சாரதா பீடத்திலும் ஆஸ்தான வித்வானாக இருந்தவர்; ‘சாஸ்த்ர ரத்னாகரம்’ என்னும் உயரிய விருது பெற்றவர் தேதியூர் பெரியவா.

`பன்னீர் மரத்தின் இலையில் விபூதியை வைத்துக்கொண்டு, முருகப்பெருமானை தியானித்து, இந்த புஜங்கத்தை ஒரு தடவை பாராயணம் செய்து, அந்த விபூதியை அணிந்து கொள்வதால், சகலவிதமான பீடைகளும் அடியோடு தொலைந்துவிடும். இந்த ஸ்துதியானது ஒரே ஆவர்த்தி பாராயணம் செய்தாலே, தீராத வியாதிகளும் நீங்கும்; தீய சக்திகள் விலகும்’ என்பது தேதியூர் பெரியவா தரும் வழிகாட்டல்.

இவரின் உரை நூலில் ‘இஹாயாஹி’ எனத் தொடங்கும், 18-ஆம் பாடலுக்கான உரையில், ஷடக்ஷரீ மஹாமந்திரத்தை ஜபம் செய்யவேண்டிய முறை அற்புதமாக விளக்கப்படுகிறது.

அம்பிகையின் மடியில் அமர்ந்திருக்கும் அழகு முருகனை சிவபெருமான் அழைத்துக் கட்டித் தழுவி ஆனந்தம் அடைந்ததாக அமைந்துள்ள பாடல் இது. இதை நினைவில் வைத்துக்கொண்டு, ஷடக்ஷரீ மஹாமந்திரத்தை ஜபம் செய்யும் முறையைப் பற்றி விவரிக்கும் உரையைப் பார்க்க வேண்டும்.

சண்முகருடைய ஷடக்ஷரீ மஹாமந்திரத்தை மூன்று பாகமாகப் பிரித்துக்கொண்டு, முதல் இரண்டு அக்ஷரங்களை (எழுத்துக்களை) சக்தி கண்டம் என்றும், நடுவில் உள்ள இரண்டு அக்ஷரங்களை, குமர கண்டம் என்றும், கடைசி இரண்டு அக்ஷரங்களை சிவ கண்டம் என்றும் பிரிக்க வேண்டும். இவ்விதம் பிரித்துக்கொண்டு, சிவனோடும் சக்தியோடும் முருகப்பெருமானை இணைத்துத் தியானம் செய்து, ஷடக்ஷரீ மஹாமந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்பவர்களுக்கு ஸகலவிதமான சௌபாக்கியங்களும் ஸித்திப்பதோடு, குமார ஸ்வாமியுடன் சேர்ந்து பார்வதி- பரமேஸ்வரனும், (ஸோமாஸ்கந்தர்) ஒரே காலத்தில் தரிசனமும் அளிப்பார்களாம்!