Published:Updated:

கீரனூர் செல்வநாயகி அம்மன்: ஆடி மாதக் கோயில்கள் - மாங்கல்ய பலம் அளிக்கும் அம்மனின் மகத்துவங்கள்!

செல்வநாயகி அம்மன்

சிறிய கோயிலாக இருந்ததை 1413 - ம் ஆண்டு விஜய நகர மன்னன் அச்சுத தேவராயன் காலத்தில் பெரிதாக எழுப்பி சிறப்பாகக் கட்டினார் என்றும் தலவரலாறு கூறுகிறது.

கீரனூர் செல்வநாயகி அம்மன்: ஆடி மாதக் கோயில்கள் - மாங்கல்ய பலம் அளிக்கும் அம்மனின் மகத்துவங்கள்!

சிறிய கோயிலாக இருந்ததை 1413 - ம் ஆண்டு விஜய நகர மன்னன் அச்சுத தேவராயன் காலத்தில் பெரிதாக எழுப்பி சிறப்பாகக் கட்டினார் என்றும் தலவரலாறு கூறுகிறது.

Published:Updated:
செல்வநாயகி அம்மன்

பெண்கள் தங்கள் கணவனின் உடல்நிலை குணமாக தங்களது தாலியை உண்டியலில் போடுவதாக வேண்டி கொள்கின்றனர். அவ்வாறு வேண்டினால் நிச்சயம் இந்த அம்மன் அவர்களை குணமாக்கி நலம் அருள்கிறாள்!

செல்வநாயகி அம்மன்
செல்வநாயகி அம்மன்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் - சென்னிமலை தேசிய நெடுஞ்சாலையில் மேற்கே 4 கி.மீ தொலைவில் உள்ளது கீரனூர் செல்வநாயகி அம்மன் கோயில். கீரனூரின் தெற்கே சிவன்மலையும், வடக்கே சென்னிமலையும் அமைந்து இருக்கிறது. இவற்றின் நடுவே வரம் அருளும் தாயாக தயாபரியாக வீற்றிருந்து பக்தர்களின் குறை தீர்க்கிறாள் செல்வநாயகி.

கீரனூர் செல்வநாயகி அம்மனின் வரலாறு ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள் ஊர் மக்கள். இந்தக் கோயில் கற்கோயிலாகக் காட்சியளிக்கிறது. மூவேந்தர்கள் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இந்த அம்மன், இன்றும் புகழ்பெற்று விளங்குகிறாள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிய ஒரு பசு மாடு மட்டும் பால் தருவதில்லை என்று அறிந்த அதன் உரிமையாளர், இதற்கான காரணத்தை அறிய வேண்டி ஒரு நாள் அந்தப் பசுமாட்டைப் பின்தொடர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீரனூர் செல்வநாயகி அம்மன் கோயில்
கீரனூர் செல்வநாயகி அம்மன் கோயில்

மேய்ச்சலை முடித்துக் கொண்ட அந்தப் படு மாடு நேராக ஒரு புதருக்குச் சென்று, அங்கே குறிப்பிட்ட ஓரிடத்தில் தானாகப் பால் கறந்தது. இதை கண்ட மாட்டின் உரிமையாளர், மாடு பால் கறந்ததன் காரணத்தை அறிய விரும்பி, அங்கிருந்த புதரைக் களைந்து பார்த்தபோது அங்கே குழவிக்கல் வடிவில் சுயம்பாக அம்மன் வீற்றிருந்தாள். தகதகக்கும் பொன்னிற ஒளியோடு விளங்கிய இந்த அம்மனைக் கண்டதும் ஊர் மக்கள் கூடி கோயில் எழுப்பத் தீர்மானித்தனர். அப்போது ஒரு பெண்ணுக்கு அருள் வந்து ஆடி 'செல்வவளமும் மாங்கல்ய பலமும் அளிக்கக் கூடிய ஆதிசக்தியே அங்கு சுயம்புவாகத் தோன்றி இருப்பதாக அறிவித்தாள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செல்வநாயகி அம்மன் இப்படித்தான் இங்கு எழுந்தருளினாள் என்று ஊர் மக்கள் கூறுகிறார்கள். சிறிய கோயிலாக இருந்ததை 1413 - ம் ஆண்டு விஜய நகர மன்னன் அச்சுத தேவராயன் காலத்தில் பெரிதாக எழுப்பி சிறப்பாகக் கட்டினார் என்றும் தலவரலாறு கூறுகிறது. கி.பி. 1529-ம் ஆண்டு கீரனூர் ஆறுகுல காணியாளர்கள் இணைந்து இந்தக் கோயிலுக்கு நன்கொடை அளித்த விபரம் இந்தக் கோயிலுக்கு எதிரே உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 1589-ம் ஆண்டு கீரனூர் ஆறுகுல காணியாளர்கள் செய்த கோயில் திருப்பணிகள் கோயில் ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுகள் செல்லச் செல்ல இந்தக் கோயில் புதிய தோற்றமும் பெரும் புகழும் பெற்று விளங்குகிறது.

செல்வநாயகி அம்மன் கோயில்
செல்வநாயகி அம்மன் கோயில்

பொதுவாக அம்மன் கோயில் வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு என்பார்கள். செல்வநாயகி அம்மனின் பழைய கோயில் வடக்கு நோக்கி இருந்துள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலையுடன், 71 அடி உயரத்தில் கம்பீரமாக உள்ளது. மேலும் இந்த கோயிலில் மணி மண்டபம் மற்றும் ஆறுகுல காணியாளர்களை குறிக்கும் விதமாக ஆறு குதிரைகளும் அமைந்துள்ளது. வேண்டி வரும் பக்தர்களின் உள்ளக்குறைகளை எல்லாம் தீர்க்கும் தேவியாக இவள் இருந்து வருகிறாள். ஆண்டின் எல்லா நாள்களும் இங்கு அம்மனுக்கு சிறப்பு என்றாலும், ஆடி மாதம் இன்னும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆறுகுல காணியாளர் ஆறு குதிரைகள்
ஆறுகுல காணியாளர் ஆறு குதிரைகள்

பொங்கல் வைப்பது, விளக்கு ஏற்றுவது உள்ளிட்ட பல நேர்த்திக்கடன்கள் இங்கு நடைபெறுகின்றன. மேலும் சில பெண்கள் தங்களது கணவனின் உடல்நிலை குணமாகத் தங்களது தாலியை உண்டியலில் போடுவதாக வேண்டி கொள்கின்றனர். அவ்வாறு வேண்டினால் நிச்சயம் இந்த அம்மன் அவர்களை குணமாக்கி நலம் அருள்கிறாள் என்றும் இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.அதுமட்டும் இல்லாமல் கடன், தொழில் மந்தம், வியாபார முடக்கம் போன்ற பிரச்னைகளையும் தீர்த்து செல்வவளம் அளிக்கும் அன்னையாக இவள் விளங்கி வருகிறாள்.

நிச்சயம் வாய்ப்பு இருப்பவர்கள் ஒருமுறை இந்த அம்மனை தரிசித்து வாருங்கள். கட்டாயம் நல்ல பலன்களை நீங்கள் அடைவீர்கள் என்று இங்குள்ள பெரியோர்கள் கூறுகின்றனர்.