Published:Updated:

ஆடிச் செவ்வாய் அம்மன் விரதம்

அம்மன் விரதம்
பிரீமியம் ஸ்டோரி
அம்மன் விரதம்

ஆன்மிகத் துளிகள்

ஆடிச் செவ்வாய் அம்மன் விரதம்

ஆன்மிகத் துளிகள்

Published:Updated:
அம்மன் விரதம்
பிரீமியம் ஸ்டோரி
அம்மன் விரதம்

ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளில் மங்கள கௌரி விரதம் கொண் டாடப்படுகிறது. மணமான பெண்கள் புகுந்த வீட்டிலும், மணமாகாத பெண்கள் பிறந்த வீட்டிலும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். விரதத்தன்று அதிகாலையில் நீராடி, நெற்றிக்குத் திலகமிட்டு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். அம்மன் படத்தின் முன் சந்தனம்- குங்குமம் இட்ட எலுமிச்சம் கனியைப் படைத்து, சக்தி கவசம், துர்கா சகஸ்ர நாம பாராயணம் செய்து நைவேத்திய பிரசாதம் படைத்து வழிபட வேண்டும். ஆடி மாத செவ்வாய்க் கிழமைகளில் தவறாமல் இதைக் கடைப்பிடிப்பதன் மூலம் திருமண பாக்கியம், மாங்கல்ய பலம் ஆகியவை கிடைப்பதுடன், வாழ்வில் வளம் கொழிக்கும்.

தாயமங்கலம் முத்துமாரி!

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் ஆலயம் பிரசித்திபெற்ற சக்தித் தலம். கன்னித்தெய்வமாக வழிபடப்படும் அன்னை இந்த முத்துமாரி. ஆகவே இந்த அம்மனுக்குத் தாலி அணிவிக்காமல் காலடியிலேயே வைத்து பூஜிக்கிறார்கள்.

கல்யாண காமாட்சி

கல்யாண வரம் தரும் தலமாகத் திகழ்கிறது, தருமபுரி கல்யாண காமாட்சி ஆலயம். தருமராஜரால் வழிபடப்பட்ட இந்த தேவி 18 படிகளின்மீது நின்று அருள்பாலிப்பவள். ஆடிப்பூர நாளில் நடைபெறும் வளைகாப்பு விழாவில் காமாட்சி அன்னையின் மடியில் முளைப்பயிறு கட்டி வணங்குவார்கள். அந்த முளைப்பயிறைப் பிரசாதமாகப் பெற்று சாப்பிட்டால், குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை!

நத்தம் மாரியம்மன்

மதுரையில் இருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம். இங்குள்ள மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பிரசித்திபெற்றது. இந்த விழாவுக்கு நாள் குறித்த உடன், நத்தம் பகுதியிலுள்ள கரந்தை மலையில் இருந்து குறிப்பிட்ட பிரிவினர் ‘கழுமரம்’ எடுத்து வந்து கோயிலின் முன் நட்டுவிடுவர். கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறுவது மிக முக்கியமான ஒன்று. யாராவது ஒருவர் கழுமரத்தின் உச்சியைத் தொட்ட பிறகுதான் பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள். இந்த நடைமுறை இங்கு காலம்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

- கே.சபாபதி, சென்னை-44

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism