திருமாலைப் போற்றும் பாடல்களைச் சிந்தித்தால், சட்டென்று நம் நினைவுக்கு வருவன ஆழ்வார்களின் பாசுரங்களே. ஆழ்வார்களின் காலத்துக்கும் முன்பாக அந்த மாலவனைப் போற்றிப் பாடிய பைந்தமிழ் பாக்கள் சில உண்டு. அவற்றை இன்னதென்று சொல்லாமல் பிறர் பாடக் கேட்டால், `திவ்யப் பிரபந்தப் பாடல்' என்றே எண்ணத் தோன்றும். அத்தகைய மொழிச் சிறப்பினையும் பொருள் சிறப்பினையும் பெற்றவை அவை. அவற்றில் குறிப்பிடத் தக்கது சிலப்பதிகாரத்தில் காணப்படும் `ஆய்ச்சியர் குரவை' பகுதி.

கோவலனும் கண்ணகியும் மறுவாழ்வுதேடி மதுரையை நோக்கிவருகிறார்கள். மதுரைக்கு வெளியே இடையர்கள் வாழும் இடம். மாலவனின் பக்தர்களான அவர்கள் எப்போதும் அந்த மாயக் கண்ணனின் மீதே தங்களின் கவனத்தை வைத்ததனால் மாமதுரை அவர்களை ஈர்க்கவேயில்லை போலும். அவர்களிடத்தில் - ஆய்ச்சியரிடம்தான் கண்ணகியை ஒப்படைத்துவிட்டு மதுரை விரித்திருந்த மீளவியலாத மாயவலைக்குள் புகுந்தான், கோவலன் என்கிறது சிலப்பதிகாரம்.

கோவலன் சென்று வெகுநேரமாயிற்று. துர்ச் சகுனங்கள் தோன்றின. ஆய்ச்சியர்களின் மனமோ நிலைகொள்ளவில்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வம்தானே துணை. ஆகவே, ஆய்ச்சியர் அனைவரும் ஒன்றுகூடி திருமாலின் திருநாமத்தையும் அவனின் திருவிளையாடல்களையும் சொல்லித் துதிக்க ஆரம்பிக்கின்றனர். அதுவே ஆய்ச்சியர் குரவை. கண்ணனின் பெருமைகளைப் பாடும் அற்புதமான ஆய்ச்சியர் குரவையின் பாடல்கள் சில இங்கே உங்களுக்காக!

வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக்

கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே

கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை

மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே

கருத்து : தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைய விரும்பினர். மலையை மத்தாக்கலாம்; பாம்பைக் கயிறாக்கிவிடலாம். ஆனால், எல்லா உயிர்களின் முயற்சிக்கும் ஆதாரம் அந்த நாரணன் அல்லவா. அவனைப் பணிந்து வேண்டிக்கொண்டால் அவனே அனைத்தையும் தாங்கி நின்று, நம் முயற்சிகளை சாரதி போல் நின்று நடத்தி வைப்பான். தேவ அசுரரும் அவனைப் பணிந்து வேண்ட, பாற்கடலின் திருவயிற்றைக் கலக்கினான் அந்த மாயவன். அவனே, அன்னை யசோதை கயிற்றால் கட்டிப்போட்ட போது, அதற்குக் கட்டுப்பட்டுக் கிடந்தான்.

இதென்ன விந்தை!

அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த

உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே

உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய்

வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே

கருத்து : இந்தப் பிரபஞ்சத்தில் அடைவதற்கு அரிய அருமையான பொருள் அந்த நாராயணன். தேவர்களும் அவனைக் கண்ணார தரிசித்து உயிரின் நித்தியப் பிணியான பசிப்பிணியைத் தீர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் ஆதார சக்தியாய் விளங்குகிற நீயே, வெண்ணெய் திருடி உண்டாய். துளசி மாலைகள் அணிந்த மாயவனே இது என்ன மாயம்?

இல்லையில்லை இது மாயம் இல்லை. தனக்குள் சகல உலகங்களும் அடங்கும் என்பதை அன்னை யசோதைக்கு உணர்த்தியவன் அவன். அவன் அள்ளித் தின்ற வெண்ணெய் எல்லாம் கோபியர்க்கு ஆசீர்வாதங்களாக மாறின. ஆகவே, இது மாயம் அல்ல; அவன் மகிமையே!

திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல

இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே

நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி

மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே

கருத்து: அடியார் பற்றுவதற்கு உகந்த மாலவனின் சிவந்த திருவடி களில் அமரர்கள் எல்லாம் தொழுகின்றன. அந்தத் திருவடிகளால் மூவுலகையும் அளந்தான் அவன். அதே திருவடிகளால்... பாண்டவர்களின் பங்கைப் பெற்றுத்தரும் நோக்கில் தூதுவனாய் நடந்தான்.

இது விந்தை இல்லையா!

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே

திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே

கருத்து : `வாமன அவதாரத்தில் மூவுலகையும் தன் சிறு பாதங்களின் இரண்டடியால் அளந்தது முறையன்று என்று கருதினான் போலும். அந்தக் குறையினைத் தீர்ப்பதற்காக, ராமாவதாரத்தில் தன் தம்பியோடு காட்டு வழியே பலகாதம் நடந்தான். அவ்வாறு நடந்தே சென்று இலங்கையை அழித்த அந்த இறைவனின் புகழைக் கேளாமல் இருக்கும் செவி என்ன செவி... திருமாலே, உன் பெருமைகளைக் கேட்காது இருக்கும் செவி என்ன செவி...' என்று பாடுகிறார்கள் ஆய்ச்சியர்.

பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்

விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்

திருவடியும் கையும் திருவாயும் செய்ய

கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே

கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே ( 5 )

கருத்து : `இந்த உலகில் பெரியவன் என்று போற்றத்தக்கவன் அந்தத் திருமால். உலகம் முழுதும் பார்க்க... திருமாலே உன் திருவடியும், உன் திருக்கையையும் திருவாயையும் காண்பதோடு நின்றுவிடாமல், எழில்மிகுந்த நின் திருக்கண்களையும் நாங்கள் காணவேண்டும். அவ்வாறு உன் கண் அழகைக் காணாத கண்கள் என்ன கண்கள்...' என்று பாடி மருகுகிறார்கள் ஆய்ச்சியர்.