
பரிக்கல்பட்டு கிராமத்தில் சிவ பிரதிஷ்டை!
`திருக்கோயில் இல்லாத திருஇல் ஊரும்’ என்பார் அப்பர் ஸ்வாமிகள். அதாவது திருக்கோயில் இல்லாத ஊர் செல்வம் இல்லாத ஊர் என்கிறார். இதையே இன்னும் எளிமையாக `கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண் டாம்' என்றார்கள் பெரியோர்கள்.

கூட்டு வழிபாடுதான் நமது தர்மத்தின் ஆணிவேர். இந்தக் கூட்டு வழிபாடு நடைபெற கோயில் அவசியமாகிறது. ஏதோதோ காரணங்களால் கோயில்கள் இல்லாமல் போய் விட்ட ஊர்களில், ஒரு சிவாலயமாவது எழுப்பவேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இளைஞர்கள் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது.
சிவாலயம் இல்லாத ஊரில் சிவாலயம் அமைப்போம் என்ற அடிப்படையில் கடந்த 17.10.2021 அன்று விழுப்புரம் - மயிலம் அருகே பரிக்கல்பட்டு என்ற கிராமத்தில் சிவலிங்கம், அம்பிகை, நந்தியெம்பெருமான், பலி பீடத்தை அமைத்துத் தந்தார்கள் இந்தக் குழுவினர்.
கிராம மக்கள் ஒத்துழைப்புடன் மாபெரும் விழாவாக இந்த ஆலயப் பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. மஹாஹோமம், தேவ பிரச்னம் தொடங்கி அபிஷேக ஆராதனைகளும் அன்னம் பாலிப்பும் நடைபெற்றன. பிரச்னத்தில் சுவாமி காமேஸ்வரர் என்றும், அம்பிகை காமாட்சி என்றும் தல புராணத்தோடு வெளிப்பட்டார்கள்.
25 சிவனடியார்கள் கொண்ட அந்த கிராமத் தில் இதுவரை சிவாலயமே இல்லை என்றும் அவர்கள் வழிபட வெகு தூரம் சென்று வந்தார் கள் என்றும் விவரம் அறிய முடிந்தது. `எங்கள் ஊருக்குக் கருணைபுரிய சுவாமி எழுந்தருளி விட்டார்' என அவர்கள் கண்ணீர் மல்கக் கூறிய காட்சி நெகிழ்ச்சியானது.
இந்த அற்புதமான திருப்பணியை தொடர்ந்து மேற்கொள்ளவிருக்கும் குழுவிடம் பேசினோம். `எந்த ஊரில் சிவாலயம் எழுப்ப வேண்டும் என்று எங்களைத் தொடர்பு கொண்டாலும் அதைச் செய்து தர சித்தமாக இருக்கிறோம். இது ஈசனை ஆராதிக்கும் எங்களின் எளிய பணி. ஊராரே ஆலயத்துக் கான இடத்தை அளித்தால் மட்டும் போதுமானது. முதல்முதலாக இந்த ஊரில் இந்த ஆலயப் பிரதிஷ்டை பணியை பெருமான் அருளால் செய்து முடித்துவிட் டோம். இன்னும் நான்கு ஊர்களில் கேட்டு இருக்கிறார்கள். அங்கேயும் நல்ல முறையில் சுவாமி எழுந்தருளுவார் என்று நம்புகிறோம்' என்கிறார்கள் பணிவுடன்.
தர்மங்கள் சிதையாமல் பல்கிப் பெருகிட, இதுபோன்ற திருப்பணிகள் அவசியம். ஆலயத்தைச் சீரமைப்பது மட்டுமல்ல, ஆலயமே இல்லாத ஊரில் ஆலயம் அமைப் பதும் சிறந்த இறைப்பணியே. இளைஞர்களின் இந்த இறை சேவையைப் பாராட்டுவதோடு, நாமும் அவர்களுக்குத் தோள் கொடுப்போம்; இறையருள் பெறுவோம்.
தொடர்புக்கு :
கபீர்தாஸ் (99433 18065)
Bank Details : V JALATHA BAI
A/C - 6295226960 INDIAN BANK,
ADAMBAKKAM BRANCH (00A134)
IFSC CODE - IDIB000A134