Published:Updated:

உங்கள் இல்லம் தேடி வருகிறார் பாபா! - சிறப்புக் கட்டுரைப் போட்டி!

சிறப்புக் கட்டுரை போட்டி!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறப்புக் கட்டுரை போட்டி!

சக்தி விகடன் - துவாரகாமாயி ஆத்மஞானியர் மையம் இணைந்து வழங்கும் சிறப்புக் கட்டுரைப் போட்டி!

- வெற்றியாளர்கள் 51 பேருக்கு பாபாவின் அருள் பிரசாதப் பரிசுகள்

* விசேஷ சங்கல்பத்துடன் பூஜிக்கப்பட்ட பாபா விக்கிரகம்

* ஸ்ரீசாயி குரு சரித்திரம்

* ஷீர்டி உதி பிரசாதம்

அன்பார்ந்த வாசகர்களே!

நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...

ஷீர்டி ஸ்ரீசாயிபாபாவின் திருவருளால் உங்கள் வாழ்வில் நிகழ்ந்த மறக்க முடியாத அற்புத அனுபவங்களைக் கட்டுரை வடிவில் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

தேர்வு செய்யப்படும் 51 கட்டுரைகள் சக்தி விகடன் இதழ்தோறும் ஒவ்வொன்றாக வெளியாகும். வெற்றி பெற்ற கட்டுரையாளர்களுக்கு, பாபாவின் அருள் பிரசாதப் பரிசுகளாக... விசேஷ சங்கல்பத்துடன் பூஜிக்கப்பட்ட பாபா விக்கிரகம், ஸ்ரீசாயி குரு சரித்திரம் புத்தகம், ஷீர்டி உதி பிரசாதம் ஆகியவை அனுப்பிவைக்கப்படும்.

வெற்றிப் பெற்றவர்கள் மட்டுமன்றி போட்டியில் கலந்துகொள்ளும் அனைவரின் பெயர் நட்சத்திரத்துடன் அவர்களின் பிரார்த்தனைகள் விசேஷ பூஜையில் சமர்ப்பிக்கப்படும்.

உங்கள் இல்லம் தேடி வருகிறார் பாபா! - சிறப்புக் கட்டுரைப் போட்டி!

கட்டுரைகளை தபால் மற்றும் இ.மெயில் மூலமாக அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும்போது பெயர், நட்சத்திரத்துடன், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் குறிப்பிடுவது மிக அவசியம்.

பரிசுக்குரிய கட்டுரைகளைத் தேர்வு செய்வதில் ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது.

கட்டுரைகள் எங்களுக்கு வந்துசேர வேண்டிய கடைசிதேதி: 23.12.21

அனுப்பவேண்டிய முகவரி

சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002

email: sakthi@vikatan.com