Published:Updated:

ஆறு மனமே ஆறு

ஆறு மனமே ஆறு - ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஆறு மனமே ஆறு - ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஆறு மனமே ஆறு - ஶ்ரீ மாதா அமிர்ந்தானந்தமயி

ஆறு மனமே ஆறு

ஆறு மனமே ஆறு - ஶ்ரீ மாதா அமிர்ந்தானந்தமயி

Published:Updated:
ஆறு மனமே ஆறு - ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஆறு மனமே ஆறு - ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

நியூயார்க்கில் ஐ.நா. பொன்விழாவையொட்டி சர்வ சமய மாநாடு நடந்தது. அது, 1995-ம் ஆண்டு என நினைக்கிறேன். அந்த மாநாட்டில் அம்மா பேசினேன். இன்றைய சூழலில் மிகவும் அவசியம் என்பதால், அந்த உரையின் சாராம்சத்தைப் பகிர்கிறேன்.

வளர்ச்சி – முன்னேற்றம் - வெளித் தோற்றம்

நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், உலகம் முழுக்க அமைதி பரவி மனித இனம் நிம்மதியாக வாழும் என்பது உறுதி. வளர்ச்சியும் முன்னேற்றமும் இன்றைய உலகின் சித்தாந்தம் ஆகி விட்டன. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் வளர்ச்சி அடைகின்றனர். ஒரு பகுதி வேளாண்மை யில் வளர்ச்சி காண்கிறது எனில், வேறொரு பகுதி அறிவியலில் வளர்ச்சி அடைகிறது. இப்படியே தொழில், ஆயுத உற்பத்தி, மருத்துவம் என ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு விதத்தில் முன்னேற்றம்... முன்னேற்றம்... என உலகம் முழுவதும் பதிவாகி வருவதைக் காண்கிறோம்.

இது தவறென்று நான் சொல்லவில்லை. இது இயல்பான - யதார்த்தமான உலகின் அடையாளம் என்று எடுத்துக்கொள்ளலாம். முன்னேற்றம் இல்லையென்றால் வளர்ச்சி குறையும்; வாழ்க்கை பொருளற்றதாகிவிடும்தான். இன்றைக்குப் பல நாடுகள், வெளித்தோற்றத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதைக் காண முடிகிறது. ஆனால் அந்த முன்னேற்றம் பூரணத்துவமானதுதானா?

ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஒருவன் தோற்றத்தில் அழகாக இருக்கிறான். ஆனாலும் உள்ளுக்குள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ளான் எனில், அழகால் - பொலிவால் என்ன பயன்? குடும்பத்தில் நல்ல முன்னேற்றம், செல்வச் செழிப்பெல்லாம் இருக்கின்றன. ஆனாலும் உற்றார்-உறவுகளுக்கு இடையே பொராட்டமும் பகையும் இருந்தால் என்னாவது?

இயல்பும் நற்பண்புகளும்

இப்படியான முன்னேற்றத்தால் எவ்வித பயனும் இல்லையே! அப்படித்தான் இன்றைய சூழலும். சுயநலம், பொறாமை, யார் பெரியவர் என்கிற போட்டி... வெற்றி ஒன்றே இலக்கு என்ற நோக்கில், வாழ்வில் ஒற்றுமையின்றி வாழும் சூழலுக்குத் தள்ளப்படுகிறோம்... மக்களே!

வழக்கு ஒன்று நடந்துகொண்டிருந்தது. வாதியானவர் தன் வழக்கறிஞரிடம் ``இந்த வழக்கில் நாம் எப்படியாவது ஜெயிக்க வேண்டும். ஆகவே, தீர்ப்பு நமக்குச் சாதகமாக நீதிபதிக்கு ஒரு நல்ல பரிசை அனுப்பிவைக்கிறேன்’’ என்றார்.

வழக்கறிஞரோ அவரை எச்சரித்தார். ``அந்த நீதிபதி நேர்மையானவர். பரிசு எதுவும் அனுப்பிவைக்கவேண்டாம். அதுவே நமக்குப் பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது’’ என்றார்.

நாள்கள் நகர்ந்தன. வழக்கு நிறைவுற்று வாதிக் குச் சாதகமாகவே தீர்ப்பு வந்தது. அவர் மகிழ்ச் சியுடன் விருந்தளித்தார். அப்போது வழக்கறிஞர், ``நல்லவேளை அந்த நீதிபதிக்கு நீங்கள் பரிசு எதுவும் அனுப்பவில்லை. அதனால் வெற்றி பெற்றீர்கள்’’ என்றார். உடனே வாதி பெரிதாகச் சிரித்துவிட்டுச் சொன்னார்: “நான் பரிசு அனுப்பவில்லை என்று யார் சொன்னது. விலையுயர்ந்த பரிசை அனுப்பிவைத்தேன். ஆனால் ஒரு சிறிய மாற்றம், அந்தப் பரிசை எதிராளியின் பெயரில் அனுப்பிவைத்தேன். ஆகவே நான் வெற்றிபெற்றேன்!”

புரிகிறதா... மனிதனின் குறுக்குப் புத்தி எப்படி வேலை செய்கிறதென்று? அக, இப்படியான இயல்புகளால் நற்குணங்கள் பலியிடப்பட்டு, ஆன்மிக நெறியும், மனிதாபிமானமும், தார்மீகக் கடமைகளும் தொலைந்து, ஒற்றுமை காணாமல் போய்விடுகிறது.

ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி
ஶ்ரீமாதா அமிர்தானந்தமயி

சரியான பாதை...

குடும்பங்களில் மட்டுமல்ல ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு நிலைமை இப்படித்தான்.

உள்நாட்டுக் குழப்பங்கள், ஜாதி, மதப் போராட்டங்கள், எல்லைத் தகராறுகள், தீவிரவாத, பிரிவினைவாத பிரச்னைகள்... இவை அனைத்தும் மக்களின் ஒற்றுமையை நிலைகுலையச் செய்கின்றன!

ஒற்றுமையுடன் நிம்மதியாக வாழத்தான் மக்களுக்கு ஆசை. ஆனால், ஒருசிலரின் சொந்த விருப்புவெறுப்பு காரணமாக உலகமே ஒற்றுமை இழந்து பல பிரிவுகளாகி இருக்கிறது என்றால் மிகையல்ல.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள்... பசுவுக்கோ, குதிரைக்கோ தான் ஓர் இந்தியப் பசு, அமெரிக்கக் குதிரை என்றெல்லாம் அடையாளம் தெரியாது. அவ்வளவு ஏன்... தானொரு பசு, குதிரை என்ற அறிவுகூட அவற்றுக்கு இருக்காது. மனிதன் மட்டுமே தான் வாழும் பகுதியை வைத்துத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வாய்ப் பைக் கொண்டவன். அதுவே பல போராட் டங்களுக்கு வழிவகுக்கிறது என்பதே நிஜம்.

ஒட்டுமொத்தத்தில், மனித இனம் சரியான பாதையைவிட்டு விலகிச் செல்கிறது. ஆகவே உண்மையான வளர்ச்சி முன்னேற்றம் இன்ன மும் ஏற்படவில்லை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். அதென்ன சரியான பாதை?

இடியையும் மின்னலையும் கண்டு பயந்து வியந்த மனிதன் அதுபற்றி ஆராய்ந்தான். பிரபஞ்சத்தின் ரகசியங்களைக் கண்டுபிடிக்க முயன்றான். அணு ரகசியத்தை அறிந்தான், விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தினான்.

இப்படி இன்னும்பல கனவுகளை நனவாக் கினான். ஆனால் அவற்றில் பலவும் உலகில் அழிவையும் குழப்பங்களையும் உண்டாக்கின. ஆக, இத்தகையை கண்டுபிடிப்புகளால் என்ன பயன்?

மனிதானால் ஒன்றை மட்டும் அறிய முடியவில்லை. ஆம், தனக்குள் பதுங்கியிருக்கும் ஆத்ம சக்தியை, அதனுள் உறையும் பிரபஞ்ச சக்தியை அவனால் கண்டறிய முடியவில்லை. அந்த சக்தியை அடையாளம் கண்டு கொள் வதால் மட்டும் என்ன பயன் கிடைத்து விடப் போகிறது என்று நீங்கள் கேட்கலாம்.

மனதை உள்முகமாக்குவதால் மட்டுமே ஆத்ம சக்தியை உணர முடியும்; மனம் ஒருமுகப்படும்; அகங்காரம், பொறாமை போன்றவை முற்றிலும் அகலும்.

அப்போது அனைவரும் ஒற்றுமையாக வாழும் வழியை அடையாளம் காணலாம். அதுவே சரியான பாதை!

- மலரும்...

அம்மாவின் பதில்கள்!

? வாழ்க்கையின் இலக்கு என்ன?

பிறந்து, வளர்ந்து, படித்து, நன்றாகச் சம்பாதித்து, மணம் முடித்து, ஓய்வு காலத்துக்குப் பிறகு இறைவனடி சேர்வது மட்டுமே வாழ்க்கை இல்லை.

புழு-பூச்சியும் கூட பிறந்து, வளர்ந்து, இனவிருத்தி செய்து மடிகின்றன.

நாம் நம்மில் எளியவர்களுக்கு - ஏழைகளுக்கு உதவுவதை லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

வாரத்தில் ஒருசில மணி நேரம், வருமானத்தில் ஒரு சிறு துளியை அவர்களுக்காக ஒதுக்கிச் சேவை செய்யவேண்டும். அப்படி வாழ்ந்தால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும். அம்மாவின் பதில்கள்!

? கடவுளின் விக்கிரகங்களை வணங்குவதைவிட அந்தச் சிலையை வடித்தவனை வணங்குவது அல்லவா உத்தமம்?

அது சரி... தேசியக் கொடியை உயரமான கம்பத்தில் ஏற்றிவைத்து சல்யூட் அடிக்கிறோம். அந்த சல்யூட், கொடியைத் தைத்தவனுக்கா, கொடி மரத்துக்கா அல்லது கொடிக்கா? நமது வணக்கம் கொடிக்குத்தானே?! அதுபோலவே இதுவும். இறைவனின் சிலையை வணங்குவது, அகிலத்தையே படைத்த இறைவனை வணங்குவதாகிறது. அந்த இறைசக்தியே சிற்பியின் படைப்பிற்கு ஆதாரமாகிறது.

இப்படித்தான் நாம் பார்க்கவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இறைவனிடம் பிரார்த்தனை செய்வதால் மட்டுமே மனத் தூய்மையும் பக்குவமும் ஸித்திக்கிறது. இதுவே விக்கிரக வழிபாட் டின் தாத்பர்யம். உலகம் என்பது மனிதனை ஓர் எல்லைக்குள் கட்டிப்போட்டுவிடும். கடவுளை உருவகப்படுத்தும் விக்கிரங்கள், மனிதனை எல்லைகள் கடந்த பரவச நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதில் ஐயம் ஏதுமில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism