Published:Updated:

ஆறு மனமே ஆறு - 32 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன், ஓவியம்: மாருதி

ஆறு மனமே ஆறு - 32 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

தொகுப்பு: எம்.எஸ்.நாகராஜன், ஓவியம்: மாருதி

Published:Updated:
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

அகில உலக சர்வமத பேரவையில் 1993-ம் ஆண்டு அம்மா உறையாற்றினேன். அதன் சாரத்தை உங்களுக்குச் சுருக்கமாகச் சொன்னால்தான் தர்மத்தின் மரபு, சனாதன தர்மம் நமக்கு உணர்த்தும் தத்துவங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்திய பாரம்பரியத்தின் ரிஷிகளும், தபஸ்விகளும், துறவிகளும் எவ்விதத்திலும் தங்களுடைய தனிப்பட்ட உரிமையைக் கொண்டாடியதில்லை என்று பார்த்தோம். அவர்களுக்கு சனாதனத்தை எழுத்து வடிவில் வடிப்பதில் சிரமம் இருக்கத்தான் செய்தது.

பரப்பிரம்ம அனுபவத்தை முழுமையாக சித்திரிக்க முடியாது என்பதில் அவர்கள் தீர்மானமாக இருந்தார்கள். ஏனென்றால் அது வெறும் ஏட்டுக் கல்வியல்ல; ஓர் அனுபவம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.நாமும் நிச்சயமாக உணரவேண்டும் மக்களே.

ரிஷிகள் - தபஸ்விகளின் பிரார்த்தனை எப்படியானதாக இருந்தது என்பதை நாம் அறிய வேண்டும். `பரம்பொருளே! நான் சொல்வதும் நினைப்பதும் மனதில் ஆழமாகப் பதியும்படி அருள்வாயாக. மெய்ப்பொருளை வார்த்தையால் முழுமையாக வடிக்க முடியாது என்றாலும், தத்துவத்தை முடிந்த வரையிலும் வார்த்தைகளில் விளக்கும் திறமையையும் பக்குவத்தையும் அளிக்கவேண்டும்” என்பதே ஈசனிடம் அவர்களுடைய வேண்டுகோளாக இருந்தது.

ஆறு மனமே ஆறு - 32 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

சனாதன தர்மம் சொல்வதென்ன?

எவ்வளவு காலம் நாம் இந்தப் புவியில் வாழப் போகிறோம்? இங்கு எதுவும் சாஸ்வதம் இல்லை; யாரும் இங்கு நிரந்தரமாக தங்கிவிடப் போவதில்லை. கடவுள் கொடுத்துள்ள அனைத்தையும், அவர் கொடுத்தபடியே வைத்து வாழ்வதுதான் புத்திசாலித்தனம். மண், ஆகாயம் அனைத்துமே நாம் காணக் கூடியவையாக இருந்தாலும், அவற்றின் பின்னணியில் இருந்து சகலத்தையும் இயக்குவது என்றென்றும் அழியாத பரம்பொருளே. இதில் சர்வ மதத் தலைவர்களுக்கு இடையே எவ்வித கருத்துவேறுபாடும் இருந்ததில்லை.

அன்பையும் அமைதியையும் அடித்தளமாகக் கொண்ட நிலையான நல்வாழ்க்கையை உருவாக்குவதே ஆன்மிகத் தலைவர்களின் தலைசிறந்த பணியும், கடமையும், பொறுப்பும் ஆகும். அந்தத் தத்துவத்தை நிலைநிறுத்துவதில், நமது சனாதனமும் மிக முக்கியமான பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

மக்களே! நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? ரிஷிகள், தபஸ்விகளின் சங்கல்பம் பூர்த்தியாக நீங்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் காட்டிய நல்வழியைப் பின்பற்ற வேண்டும். மெய்பொருளை அடையும் வழியையும் பற்றிக்கொள்ள வேண்டும்.

சனாதன தர்மத்தில் குரு என்பவரின் பங்கு மிகவும் அற்புதமானது. குருவின்றி, அவரின் திருவருள் இன்றி எதையும் கற்றுக்கொள்ள முடியாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆறு மனமே ஆறு - 32 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

குரு என்பவர் யார்?

குரு என்பவர் யார், எங்கிருக்கிறார், அவரை எப்படித் தேடுவது. குருவை நாமே தேர்ந்தெடுக்க வேண்டுமா, குரு நம்மைத் தேடி வருவாரா, அவரின் திருவருள் இருந்தால்தான் நமக்கு தீக்ஷை கிட்டுமா, மேல் நிலை அடைய நமக்குத் தெரிந்தவை மட்டுமே போதாதா; குருவின் அருளுரைகள் தேவையா...

இப்படியெல்லாம் நம் மனதில் பல கேள்வி கள் ஓடிக்கொண்டிருக்கும்.

`குரு' என்றதுமே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது... `மாதா, பிதா, குரு, தெய்வம்' என்பதே. இந்த சொற்றொடர் காலம் காலமாக நாம் போற்றி வரும் ஒன்று. சாமான்யர்கள் சொல்லும் தத்துவம். ஆனால் இதையெல்லாம் மீறிய சில விஷயங்களால் மட்டுமே குருவை நாம் அடையாளம் காண முடியும்.

பெற்றவர்களுக்கு அடுத்தபடியாக, இறை அனுபவத்தின் பாதையில் செல்வதில் குருவின் பங்கு மகத்தானது. இதுவே சனாதன தர்மத்தின் ஆணி வேர் ஆகும்.

ஈஸ்வரோ குருராத்மேதி மூர்த்தி பேத விபாகினே

வ்யோமவத் வ்யாப்த தேஹாய தக்ஷிணாமூர்த்தியே நம:

இப்படித்தான் நமது தர்மம் சொல்கிறது.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரமாத்மா வான தக்ஷிணாமூர்த்தியையே நாம் ஆதிகுரு எனப் போற்றி வணங்குகிறோம்! அவரையே குருவுக்கெல்லாம் குருவாக நம்மில் பலர் ஏற்றுக்கொண்டுள்ளோம். அப்படிப் பார்க்கும் போது குரு, ஆத்மா, இறைவன் இவற்றில் ஒன்றுக்கு ஒன்று வேறுபாடு ஏதும் இல்லை. அதாவது நம் ஆத்மா, குரு தத்துவம், இறைவன் அனைத்துமே ஒன்றுதான்.

ஆறு மனமே ஆறு - 32 - ஸ்ரீமாதா அமிர்தானந்தமயி

நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? ஆத்மா - இறைவன் இரண்டும் வெவ்வேறல்ல; ஒன்றேயாகும். இதையே அத்வைதம் எனப் போற்றுகிறோம். அத்வைதம் என்பது சனாதனத் தின் முக்கியமான கோட்பாடு.

குரு என்பவரை வெறும் சதையும் எலும்பும் கொண்ட உருவமாக மட்டுமே பார்க்க வேண்டாம். குரு என்பவர் ஆகாயம் போல் பரந்துவிரிந்து கிடக்கும் சக்தி படைத்தவர்!

நமக்கு ஏன் ஆன்மிகக் குரு ஒருவர் தேவைப் படுகிறார்?, நம்மிடையே உள்ள லட்சக்கணக் கான புத்தகங்களில், ஒருசிலவற்றை மட்டும் படித்தாலே போதுமே; தேவையானவை புரிந்து விடாதா? நாமே நமக்கென்று ஓர் ஆன்மிகப் பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாதா?, ஏன் குருவைத் தேடி போக வேண்டும் என்ற கேள்விகள் நமக்குள் எழலாம்.

ஒன்றை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்... மருத்துவராக வேண்டும் எனில், மருத்துவக் கல்லூரிக்குச் சென்று, அந்தத் துறையில் வல்லுநர்களான பேராசிரியர்களிடம் கல்வி அறிவை பெறவேண்டும். மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று வெளியே வந்து விட்டால் மட்டுமே ஒருவர் மருத்துவர் ஆகிவிட முடியாது.

படிப்பு முடிந்ததும், மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மருத்துவர்களிடம் குறிப்பிட்ட காலம் வரையிலும் தொழில் முறை பயிற்சி பெற வேண்டும் என்பது விதி. அதாவது, ஏட்டுக்கல்வி மட்டுமே போதாது.

அதுபோலவே ஆன்மிக மார்க்கத்திலும் குருவின் வழிகாட்டல் அவசியம் தேவை!

-மலரும்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தேவியை தரிசித்த பின்...

தேவி சக்தி அளித்த முதல் தரிசன அனுபவம் சுதாமணியை சிலிர்க்க வைத்தது. அம்பிகை யுடன் ஐக்கியமாகிவிட வேண்டும் என்ற ஆவல் வெறியாக மாறியது.

யாரிடம் உதவி கேட்பது?

மனதில் கிருஷ்ணர் தோன்றினார். அவரிடம், ``கிருஷ்ணா! நான் மீண்டும் தேவியைக் காண வேண்டும். என்னை அவளிடம் அழைத்துச் செல்'' என்று புலம்பினாள்.

தொடர்ந்து, தன்னை ஸ்ரீகிருஷ்ணர் தம் திருக்கரங்களில் சுமந்து அம்பிகையிடம் அழைத்துச்செல்வதாக உணர்ந்தார்.

சமுத்திரங்களையும் விநோத ஜந்துகள் வாழும் மலைகளையும் குகைகளையும் கடந்து நீண்டதூரம் பயணிப்பது போல் உணர்ந்தார்.பல வண்ணங்களில் மிகப் பெரிய பாம்புகளைக் கண்டார். ஆனால், அம்பிகை மட்டும் புலப்பட வில்லை. அந்த அகிலாண்டேஸ்வரியை தரிசிக்கத் துடித்தார் சுதாமணி.

“அம்மாவைக் காண வேண்டும்... அம்மா எங்கே...'' என்றபடியே சுயநினைவை இழந்தார். அத்துடன் அந்தக் காட்சியும் உணர்வும் மறைந்தன!

நாட்கள் நகர்ந்தன. ஆனால், அம்பிகையின் அழகிய அற்புதமான முதல் தரிசனம் மட்டும் சுதாமணியின் மனதைவிட்டு அகலவில்லை.மீண்டும் மீண்டும் அந்த தேவியின் அழகு தரிசனத்தைக் காண மனம் துடித்தது. இதுவரை `கிருஷ்ணா... கிருஷ்ணா...' என்று கிருஷ்ண பாவத்தில் - நாராயண தியானத்தில் மூழ்கியிருந்த சுதாமணியின் மனம், இப்போது நாராயணீயை நோக்கி மெள்ள நகர்ந்தது. கிருஷ்ண பாவ தரிசன தருணங்கள் தவிர, மற்ற நேரங்களில் அம்பிகை தியானத்தில் ஈடுபடத் தொடங்கினாள்.

தியான தருணங்களில் வெளியுலக நினைவுகள் முற்றிலும் நீங்கிவிடும். உடலின் அத்தியாவசிய தேவைகள்கூட நினைவை விட்டு நீங்கிவிடும். பல மாதங்கள் வெறும் துளசி இதழ்களும் நீரும் மட்டுமே சுதாமணிக்கு ஆகாரங்களாக இருந்தன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism