Published:Updated:

ஆதியும் அந்தமும் - 20 - மறை சொல்லும் மகிமைகள்

ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

நாகாஸ்திரத்தைவிட்டால் கருடாஸ்திரத்தை விட வேண்டும்.

ஆதியும் அந்தமும் - 20 - மறை சொல்லும் மகிமைகள்

நாகாஸ்திரத்தைவிட்டால் கருடாஸ்திரத்தை விட வேண்டும்.

Published:Updated:
ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

வேதம் அநாதி. எல்லாவிதமான அறிவும் வேதத்துள் அடக்கம். மொத்தத்தில் அறிவுக் களஞ்சியம் வேதம். வேதம் பாரதத்துக்கானது மட்டுமல்ல. லோகம் முழுமைக்குமானது. ‘இந்த லோகமே ஒரு குடையின் கீழ்’ என்று வேதம் சொல்கிறது. வேதத்தின் கண்ணோட்டம் அவ்வளவு பெரியது. அதேபோல் வேதம் என்பது வாழ்க்கை முறைகளின் தியரி.

தியரி இல்லாத பிராக்டிகல் உபயோகப்படாது. இதற்கு உதாரணமாகவே மகாபாரதத்திலிருந்து துரோணாசார்யரின் கதையைச் சொல்லத் தொடங்கினேன்.

ஏகலைவனின் வில்வித்தையைக் கண்டு திகைத்துப்போன அர்ஜுனன் துரோணரிடம் வந்து, `எங்களுக்குத் தெரியாமல், எனக்கு மேலாக ஒருவனுக்கு வில் வித்தையைக் கற்றுக் கொடுத்திருக்கிறீர்களே...’ என்று குறைப்பட்டுக் கொண்டன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய் அர்ஜுனா’ என்று அவனைத் தேற்றிய துரோணர், ஏகலைவனை வரவழைத்து விசாரித்ததுடன், குருதட்சிணையாக அவனுடைய கட்டை விரலைத் தரும்படி கேட்டார். அவனும் கொடுத்து விட்டான். பிற்பாடு வந்த மற்றவர்கள் இதைப் பார்த்து என்ன சொன்னார்கள் தெரியுமோ?

ஆதியும் அந்தமும்
ஆதியும் அந்தமும்

`துரோணாசார்யர் தன்னுடைய புத்தியைக் காட்டிவிட்டார் பார்த்தீர்களா... தன் சீடனை விட வேறு எவரும் முன்னேறிவிடக் கூடாது என்பதற்காக, கட்டை விரலை காணிக்கையாக வாங்கிக்கொண்டார் பாருங்கள்' என்று ஏளனம் செய்தார்கள்.

ஆனால், துரோணாசார்யர் என்ன நினைத்தார் தெரியுமோ?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘ஏகலைவன் தியரியே இல்லாமல் பிராக்டிகல் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால், யுத்தம் என்று வரும்போது, ஒருவன் இவனைப் பார்த்து அக்னி அஸ்திரத்தை ஏவினால், பதிலுக்கு வருணாஸ்திரத்தை விடவேண்டும். ஆனால், வருணாஸ்திரத்தை விடுவது எப்படி என்பதை தியரி படித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அவனுக்குத் தெரியாது.

நாகாஸ்திரத்தைவிட்டால் கருடாஸ்திரத்தை விட வேண்டும். இதையும் தியரியின் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும். அந்தத் தியரி ஞானம் இவனுக்கு இல்லை. இந்த நுணுக்கங்கள் எல்லா வற்றையும் ஒரு குருவிடமிருந்து அவன் கற்றுக்கொள்ளவில்லை. எனவே இவன் போருக்குச் சென்றால், அக்னி அஸ்திரத்தையோ நாகாஸ்திரத்தையோ எதிர்த்து வருணாஸ்திரமோ, கருடாஸ்திரமோ ஏவி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல், தோற்றுப்போய்விடுவான்.

இவன், தான் கற்றுக்கொண்டபடியே ஒரு சிஷ்ய பரம்பரையை உருவாக்கினால், தியரி பற்றிய ஞானம் இல்லாததால், அந்த சிஷ்ய பரம்பரையே அழிந்து போய்விடும்; தனுர் சாஸ்திரமும் மறைந்துபோகும்.

எனவே, ஏகலைவனை இப்படியே விட்டு விடக் கூடாது என்பதற்காகத்தான் துரோணாசார்யர் அவனுடைய கட்டை விரலைக் குருதட்சிணையாக வாங்கிக்கொண்டாரே தவிர, அர்ஜுனனைவிட அவன் சிறந்த வில்லாளியாகிவிடக் கூடாது என்பதற்காக அல்ல.

ஆதியும் அந்தமும்
ஆதியும் அந்தமும்

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று சொல்ல வரும் வேதம், மற்றவர் களுடைய சுதந்திரத்தைப் பறிக்காமல் வாழ வேண்டும் என்றும் சொல்கிறது. மற்றவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் தன்னுடைய சுதந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்கிறது.

இன்னும்கூட ஒன்று சொல்லும். லோகத்தில் கிடைக்கக்கூடிய அத்தனை செடி கொ டிகள், மரங்கள், உணவு வகைகள், தங்கம், வெள்ளி போன்றவை எல்லாம் பொதுவுடைமை. பூமியிலிருந்து உற்பத்தியா னவை. பூமி யாருக்கும் சொந்தமில்லை என்கிறபோது, பூமியில் கிடைக்கக்கூடிய அனைத்தும் எப்படி தனி மனிதருக்குச் சொந்தமாகும்?

நாம்தான், ‘நமக்கே எல்லாம்’ என்று சுய நலத்தின் காரணமாக மற்றவர்களுக்குக் கிடைக்கவிடாமல் செய் கிறோம். அது நம்முடைய தப்பு.

வேதம் ஸ்வாமியைச் சொல்கிறதே என்று சிலர் கேட்கலாம். ஏன் அப்படிச் சொல்கிறது? நமக்கு மேலாக ஒருவன் இருக்கிறான் என்ற நினைப்பு மனிதர்களுக்கு வர வேண்டும். அப்போதுதான் மனிதன் தப்பு பண்ணாமல் இருப்பான்.

அதேபோல் ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் தெரியுமோ? பெரிய மீன் சிறிய மீனைச் சாப்பிட்டுவிடும். அதேபோல் வலிமையற்று இருப்பவனை வலிமைபெற்றவன் அழிக்கத் தொடங்கி விட்டான். அப்போது பலவீனமானவர்கள் ஒன்றுசேர்ந்து தங்களுக்குப் பலசாலியான ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தனர்.

இப்படித்தான் காலம் போகப் போக ராஜா என்ற ஒருத்தனே ஏற்பட்டான். மற்றபடி அதிகாரத்தில் வரவில்லை. காலப்போக்கில் இது எப்படியெல்லாமோ மாறி, கடைசியில் எல்லாமே ராஜாவின் சொத்துகள்தான் என்று ஆகிவிட்டது. ராஜாவுக்கு என்று தனியாக சொத்து எதுவுமே இல்லை. பலவீனமானவர்களைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவன் ராஜா. அது ஒரு பதவி. அவ்வளவுதான். அவனுக்கு உரிமையானது என்று சொன்னால், உட்கார ஒரு சிம்மாசனமும், மேலாக ஒரு குடையும்தான்.

ஒருவன் ராஜாவாக இருக்கும்போது, அவனுக்கு யாரெல்லாம் என்னென்ன வெகுமதிகள் கொடுத்தார்களோ அந்த வெகுமதிகள் எல்லாம் அவனுடையது இல்லை. அவன் ராஜாவாக இருப்பதால் தான் வெகுமதிகள் கொடுத்தனர். அப்படி அவனுக்கு வரக்கூடிய அனைத்து வெகுமதி களையும் அவன் தானே வைத்துக்கொள்ளக் கூடாது. எல்லாவற்றையும் கொடையாகக் கொடுத்துவிட வேண்டும்.

ராஜா எப்போதும் பணக்காரனாக இருக்கமாட்டான். என்றைக்குமே அவன் ஒன்றும் இல்லாத ஏழைதான். இப்படி கொடை கொடுப்பதற்கென்றே அந்தக் காலத்தில் ஒரு யாகத்தைச் சொல்வார்கள். அதுதான் ராஜசூய யாகம். அப்படி ராஜசூய யாகம் செய்து, தனக்கு வெகுமதியாக வந்த அனைத்தையும் கொடையாகக் கொடுத்துவிட வேண்டும். அதனால்தான் மகாபாரதத்தில் யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்தார்.

ஆக, ராஜா என்று தனியாக ஒரு பெரிய பணக்கார வர்க்கமே உருவாகவில்லை. ராஜாவாக இருப்பவன் இதை உணர்ந்து கொண்டால் அவனுக்கு அகங்காரம் ஏற்படாது. தப்பு செய்ய மாட்டான்.

பகவான் ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணம் ஏற்பட்டால், `நாம் தப்பு செய்தால் நம்மைக் கேட்பதற்கு இறைவன் இருக்கிறான்' என்ற அச்சம் நமக்கு ஏற்படும். தப்பு செய்ய பயப்படுவோம். அகங்காரம் மறைந்து அடக்கம் ஏற்படும். இப்படி ராஜா எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இந்தச் சட்டத்திட்டங்கள் ஏற்பட்டன.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism