Published:Updated:

ஆதியும் அந்தமும் - 22 - மறை சொல்லும் மகிமைகள்

ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

16 வயதில் அவனை ஒரு நண்பனைப் போல் நினைக்க வேண்டும் எனச் சொல்கிறது சாஸ்திரம்

ஆதியும் அந்தமும் - 22 - மறை சொல்லும் மகிமைகள்

16 வயதில் அவனை ஒரு நண்பனைப் போல் நினைக்க வேண்டும் எனச் சொல்கிறது சாஸ்திரம்

Published:Updated:
ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

வித்யை எல்லோருக்கும் மிக அவசியம். அப்படி நாம் அறிந்துகொள்ளும் வித்யை அழியாமல் இருக்கவேண்டுமானால், நாம் அறிந்த வித்யையை மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும். அப்போதுதான் அந்த வித்யை சாஸ்வதமாக இருக்கும். வித்யைக்கு எல்லையே இல்லை.

ராஜவது பஞ்ச வர்ஷாணி

தச வர்ஷாணி தாசவது

ப்ராப்தே து ஷோடசே

வர்ஷே புத்ரம் மித்ரமது ஆசரேத்...

என்று சாஸ்திரம் போதிப்பதாகப் பார்த்தோம். அதாவது ஒரு குழந்தையை அதன் ஐந்து வயதுவரை ராஜாவைப் போல் நடத்த வேண்டும்; பிறகு 15 வயது வரை ஒரு வேலையாளைப் போல் நடத்த வேண்டும்; 16 வயதில் அவனை ஒரு நண்பனைப் போல் நினைக்க வேண்டும் எனச் சொல்கிறது சாஸ்திரம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பள்ளிக்குச் செல்வதற்கு முன்பாகவே அந்தக் குழந்தைக்கு புத்தி விகாசம் ஏற்படுவதற்கான வழியை அந்தக் குழந்தையின் தந்தையே அதன் ஐந்து வயதுக்குள் ஏற்படுத்துகிறார். பிறகு 15 வயது வரை பள்ளிக்கூடம் சென்று படிக்க வேண்டும். அதன் பிறகு அவன் எல்லாம் கற்றுக்கொண்டு விடுகிறான். அப்போது அவன் தன் தந்தைக்கு நண்பனாகிவிடுகிறான்.

பள்ளிக்குச் செல்லும் காலத்தில், சொல்வதையெல்லாம் கேட்டு நடக்க வேண்டும் என்பதால் அந்தக் காலகட்டத்தில் வேலைக்காரனாக நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த 10 வருடத்தில் அவன் கற்கும் கல்வியானது அவன் எந்த தேசத்துக்குச் சென்றாலும் அவனை அங்கிருப்பவர்கள் மதிக்கும்படிச் செய்கிறது.

ஆதியும் அந்தமும்
ஆதியும் அந்தமும்

ஓர் உதாரணம் சொல்கிறேன். நசிகேதஸ் என்று ஒருவன் இருந்தான். அவன் குருகுல வாசம் போய்விட்டு நல்ல புத்திசாலியாகத் திரும்பிவந்தான். அவன் வந்தபோது அவனுடைய அப்பா வாஜசிரவஸ் முனிவர் ஒரு வேள்வி செய்ய நினைத்து, யாகத்துக்கான திரவியங்கள் எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நசிகேதஸ் எல்லாம் படித்துவிட்டு வந்திருக்கிறான் இல்லையா. எனவே அவன் தன் தந்தையைப் பார்த்து கேட்டான்...

`‘யாகமெல்லாம் நடத்துகிறீர்களே. நான் படித்ததிலிருந்து சில விஷயங்களைத் தெரிந்துகொண்டு வந்திருக்கிறேன். கோதானம் செய்ய வேண்டும் என்று சொன்னால், ஒரு கன்று ஈன்று, மறு கன்றை பிரசவிக்கத் தயாராக உள்ள பசுவைத்தான் தானம் கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கறவை நின்று தொத்தலாக இருக்கும் பசுவை தானமாகக் கொடுக்கக் கூடாது’’ என்று தொடங்கி பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டான்.

மேலும் தொடர்ந்தவன், `‘உங்களுக்கு இங்கே கிடைத்திருக்கக்கூடிய எல்லாவற்றையும் தானம்தானே கொடுக்க வேண்டும். எதுவுமே உங்களுக்குச் சொந்தமில்லையே. அப்படி இருக்கும்போது என்னை யாருக்கு தானம் கொடுக்கப் போகிறீர்கள்?’’ என்று கேட்டான்.

வேள்வியை நிறைவேற்றுவதற்கான வேலைகளில் இருந்த அவன் தகப்பனார், நசிகேதஸின் தொந்தரவு தாங்க முடியாமல் கோபத்துடன், `‘உன்னை யமனுக்குக் கொடுக்கப் போகிறேன்’’ என்று சொல்லிவிட்டார்.

உண்மையில் அவருக்கு அந்த நினைப்பு இல்லை. ஒரு வேகத்தில் அப்படிச் சொல்லிவிட்டார்!

கோபத்தில் வந்த வார்த்தையே என்று தெரிந்தும், தந்தையின் வார்த்தையைக் காப்பாற்ற எமனது இருப்பிடம் நோக்கிப் பயணமானான் நசிகேதஸ். அவன் அங்கு சென்றபோது யமன் அங்கு இல்லை. அங்கே உணவின்றி மூன்று நாள்களைக் கழித்தான்.

ஆதியும் அந்தமும்
ஆதியும் அந்தமும்

நான்காவது நாள் வந்த எமனிடம் தான் வந்த காரணத்தை விளக்கினான் நசிகேதஸ்.

‘‘மூன்று நாள்கள் உணவின்றி எனது வீட்டில் தங்கிய அதிதியான உன்னை உபசரிக்காமல் போனது எனது தவறு. அதற்குப் பரிகாரமாக வரங்களை உனக்கு அளிக்கிறேன்’’ என்று வாக்குறுதி அளித்தார் யமன்.

இளைஞன் விழித்துக்கொண்டான். அவன் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. ‘இந்த சந்தர்ப்பத்தைப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்!’ என்று எண்ணி எமனை வேண்டினான்.

‘‘முதல் வரம் சொல்கிறேன். என் அப்பா கோபமாக இருக்கிறார். அவருக்குக் கோபம் தணிய வேண்டும்; அப்பாவைச் சந்திக்கும்போது அவர் கோபமில்லாமல் என்னை வரவேற்க வேண்டும். இரண்டாவது வரம் இதுதான்: அக்னி வித்யை, அதாவது ஆன்மிகத்தை, ஆத்ம ஞானத்தை அளிக்க வேண்டும்’’ என்றான்.

இது கேட்டுத் திடுக்கிட்ட யமன், ‘‘ஆத்ம ஞானம் உனக்கு எதற்கு? நீ இளைஞன். உனக்கு வீடு, வாசல், தேர், குதிரைகள், பணிப் பெண்கள், அப்ஸர ஸ்த்ரீகள் ஆகியவற்றை அளிக்கிறேன். இதைத் தவிர, நீ விரும்பும் நுகர்பொருள்கள் அனைத்தையும் அளித்து விடுகிறேன். குடும்ப வாழ்க்கையின் சுவையை அனுபவித்து, இன்புற்று இருக்கலாம்!’’ என்று ஆசை காட்டினான். அவன் விடவில்லை.

எமனின் ஆசை வார்த்தையில் அவன் மனம் மாறவில்லை. ‘‘நீ தருவதாகச் சொன்னதெல்லாம் உன்னிடமே இருக்கட்டும். எனக்கு ஆத்ம வித்யைதான் வேண்டும்!’’ என்று பிடிவாதம் பிடித்து, அதை அடைந்து, ஆத்ம லாபம் பெற்றான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism