Published:Updated:

ஆதியும் அந்தமும் - 10 - மறை சொல்லும் மகிமைகள்

ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமோ? மனிதனைச் சிருஷ்டிக்கவேண்டும்.

ஆதியும் அந்தமும் - 10 - மறை சொல்லும் மகிமைகள்

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமோ? மனிதனைச் சிருஷ்டிக்கவேண்டும்.

Published:Updated:
ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

ந்தப் பிரபஞ்சத்தை பகவான் சிருஷ்டி செய்தபோது, முதலில் எதை உற்பத்தி செய்தார் தெரியுமோ? இயற்கையைத்தான் சிருஷ்டி செய்தார். இயற்கையில் இருக்கக்கூடிய செடி கொடிகள், மிருகங்கள் போன்றவற்றையே முதலில் சிருஷ்டி செய்தார். அதற்குப் பிறகுதான் மனிதர்களைச் சிருஷ்டி செய்தார்.

ஆயுர்வேதம் என்ன சொல்கிறது தெரியுமோ? மனிதனைச் சிருஷ்டிக்கவேண்டும். அப்படி மனிதன் சிருஷ்டிக்கப்பட்ட உடனே பசி, தாகம் என்று சொல்வான். எனவே, மனிதன் பிறப்பதற்கு முன்பாகவே அவனுக்கு எல்லாம் தயார் செய்து வைக்கவேண்டும். அவன் கண்ணைத் திறந்ததும் அவனுடைய ஆகாரம் அவன் கண் முன்பாக வந்து நிற்கவேண்டும். இல்லாவிட்டால், அவனால் உயிர் வாழமுடியாது. ஆகையால்தான் முதலில் இயற்கையில் பயிர் வகைகளைச் சிருஷ்டி செய்தார். உணவைச் சிருஷ்டி செய்த பிறகுதான் உயிரினங்களைச் சிருஷ்டி செய்தார்.

இதிலிருந்து நமக்கு என்ன புரிகிறது?

செடிகொடிகள் எப்போது உற்பத்தியாயின என்பது நமக்குத் தெரியாது. அது முளைத்து வெளியில் வந்த பிறகுதானே நாம் பிறக்கிறோம். எனவே செடிகொடிகளின் ஆதி நமக்குத் தெரியாது. அவற்றின் அந்தமும் நமக்குத் தெரிவதற்குச் சந்தர்ப்பமே இல்லை. நாம் சென்ற பிறகும் அவை இருக்கவே செய்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குழந்தை வைத்தியர்சொல்வதுபோல் திருஷ்டாந்தமாக ஒன்று சொல்கிறேன்.

ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்பே அந்த அம்மாவின் உடலில் தாய்ப்பால் தயாராகிக் கொண்டிருக்கிறது. குழந்தை வெளியில் வருவதற்கு முன்பாகவே தாய்ப்பால் நிறைந்துவிடுகிறது. உணவை ஏற்படுத்தியபிறகுதான் குழந்தையைப் பெறுகிறாள் அந்தப் பெண். குழந்தை வெளியில் வந்ததும் தாயின் மார்பகத்தில்தான் வாயை வைக்கிறது. குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைத்து விடுகிறது. அதுவும் முழுமையான சத்துள்ள உணவு. குழந்தையின் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான அத்தனை சத்துகளும் நிறைந்திருக்கும் உணவு தாய்ப்பால்.

எப்படி குழந்தை பிறப்பதற்கு முன்பே தாய்ப் பால் தயாராகிவிடுகிறதோ அப்படி, பகவான் உயிரினங்களைச் சிருஷ்டி செய்வதற்கு முன்பே உணவைச் சிருஷ்டி செய்துவிடுகிறார்.

செடி கொடிகள், பயிரினங்கள், உயிரினங்கள், மனிதர்கள் என்று எல்லோரும் தோன்றுவதற்கு முன்பாகத் தோன்றியது பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீர். அதற்கு முன்பாக ஒன்றுமே இல்லை. முதலில் பகவான் தண்ணீரைத்தான் சிருஷ்டித்தார். அதில் விதை விதைத்தார். அந்த விதையிலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. அநேக கோடி பிரம்மாண்டங்கள் தோன்றின. இதைப் பற்றியெல்லாம் வேதங்கள் விளக்குகின்றன. வேதங்கள் மட்டுமல்லாமல் புராணங்கள், இதிகாசங்கள் என்று அனைத்துமே பிரபஞ்ச சிருஷ்டியைப் பற்றி விவரிக்கின்றன. பாமரர் களுக்கும் புரியவேண்டுமானால், அவர்களுக்கு எளிய வடிவில் கதைகளின் மூலமாகச் சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்துதான் பின்னாளில் வந்த மகரிஷிகள் வேதத்தின் உண்மைப் பொருளை கதை வடிவில் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் நமக்குத் தந்திருக்கிறார்கள்.

இந்த வேதங்கள், ஆரம்ப காலத்தில் காடுகளில் பர்ணசாலை அமைத்துக்கொண்டு தவமியற்றி வந்த மகரிஷிகளால், அவர்களுடைய சீடர்களுக்கு வாய்மொழியாக உபதேசிக்கப்பட்டன. அதனால்தான் ஔவையார் வேதங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘எழுதாக் கிளவி’ என்று கூறியிருக்கிறார்.

பகவானால் சிருஷ்டி செய்யப்பட்டிருக்கும் அனைத்தையும் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. நேற்று ஒருவர் அமெரிக்காவைக் கண்டுபிடித்திருக்கலாம். அடுத்து ஒருவர் ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்திருக்கலாம். இனி வரும் காலங்களில் புதுப் புது உலகங்கள், புதுப் புது பொருள்கள், கருவிகள், சாதனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கலாம். எனினும், ஏற்கெனவே இருப்பனவற்றைத்தான் அவர்கள் கண்டறிகிறார்களே தவிர, அவர்களாகவே புதிதாக ஒன்றைச் சிருஷ்டி செய்துவிட முடியாது. மேலும் பிரபஞ்ச சிருஷ்டியின் ரகசியம் முழுவதையும் அவர்களால் புரிந்துகொள்ளவும் முடியாது.

மனிதர்களின் மூளைக்கு எட்டாத ரகசியங்கள் எத்தனையோ பிரபஞ்ச சிருஷ்டியில் காணப் படுகின்றன. அத்தனைக்கும் காரணமாக இருப்பது அந்த சிருஷ்டிகர்த்தாவாக இருக்கக்கூடிய மிகப் பெரிய சக்தி. அது இன்னதென்று எவராலும் புரிந்துகொள்ள முடியாது. அதனுடைய உட்கருத்து வேண்டுமானால் மனிதர்களுக்குக் கதையின் வடிவில் புரியலாமே தவிர, சாமான்ய புத்திக்கு அந்தப் பெரிய சக்தி இன்னதென்று புரியாது.

அந்தச் சக்தியை ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், புத்தி வளர்ச்சி வேண்டும்.

சின்ன வயதிலிருந்தே சரீரமும் புத்தியும் ஒன்றுக்கொன்று இணையாக வளர்ந்து வந்தால், நல்ல கல்வியறிவும் வந்துவிட்டது என்று சொன்னால், மூளை நன்றாக விகாசம் அடைந்து விடும். மூளை விகாசமடைந்து விட்டால், லோகம் முழுக்க உள்ள ரகசியங்கள் அனைத்தையும் புரிந்து வாங்கிக்கொள்ளக் கூடிய சக்தி கிடைத்து விடும். அந்தச் சக்தியைப் பெற்றிருந்த பெரிய பெரிய ரிஷிகள்தான் இந்த உண்மைகளை நமக்குச் சொல்லியிருக்கிறார்கள். அந்த சக்தி சாமான்ய மனிதனுக்குக் கிடைத்துவிட்டால், அவனாலும் இந்தப் பிரபஞ்சம், பிரபஞ்சத்தைச் சிருஷ்டி செய்த அந்த மகா சக்தி ஆகிய அனைத்தையும் கண்ணாடியில் பார்ப்பது போல் தெளிவாகக் கண்டறிந்துகொள்ள முடியும்.

ஆதியும் அந்தமும் - 10 - மறை சொல்லும் மகிமைகள்

ஒன்றை நன்றாக கவனித்துப் பாருங்கள். ஆரம்பத்தில் இந்தப் பிரபஞ்சத்தில் தண்ணீர் மட்டும்தான் இருந்தது. அதைத்தான் சிருஷ்டி செய்தார். தண்ணீரைக்கூட `இருந்தது' என்று சொல்லவில்லை; `படைத்தார்' என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. ஆக, இல்லாத ஒன்றை சிருஷ்டி செய்வதற்கு ஒரு சக்தி தேவைப்பட்டது. அந்தச் சக்தி எப்படிப்பட்டது என்பதை நம்மால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பதால், நாம் அதை சக்தி என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. பிற்பாடு வந்தவர்கள் அந்தச் சக்திக்கு ஒரு பெயரைக் கொடுக்கவேண்டும் என்று நினைத்த காரணத்தினால், கடவுள் என்றும் பகவான் என்றும் பெயர் கொடுத்து அழைக்கப்பட்டது.

அந்தக் கடவுளையும் சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் என்றெல்லாம் பெயர் சொல்லி அழைக்கிறோம். இப்படியெல்லாம் அழைத்தாலும் அதன் உண்மை சொரூபத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியாத நிலையில், அந்த சக்தியைப் பரம்பொருள் என்றும் அழைக்கிறோம். அந்த மகத்தான சக்தியை பார்த்தோ, கேட்டோ, அனுபவித்தோ நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

‘யதோவா இமாநி பூதாநி ஜாயந்தே யேந ஜாதாநி ஜீவந்தி யதுர் ப்ரயந்தி அபிசம்விஸந்தி தது விஜ்ஞா சஸ்வ தத் ப்ரம்ஹ’ என்று வேதம் சொல்கிறது. வேதம் சொல்லாத ஒரு சப்ஜெக்ட் இந்த லோகத்தில் எங்குமே இல்லை. எதிர்காலத்திலும், வேதத்தில் சொல்லப்படாத எது ஒன்றும் எவருடைய வாயிலிருந்தும் வெளிவராது. ஏனென்றால், இருக்கக்கூடிய ஒன்றுதான் வெளியில் வரும். இல்லாத ஒன்று எப்படி வெளியில் வரும்!

நான் ஒன்று சொல்கிறேன். நிறைய செடி கொடிகள் வளர்ந்திருக்கின்றன. பூத்துக் குலுங்கி, காய்த்து கனியாகி நிற்கின்றன. கொஞ்சநாளில் அந்தச் செடி கொடிகள் எல்லாம் அழிந்துவிடுகின்றன. அவை இருந்த இடத்தில் சாலை வந்துவிடுகிறது. கட்டடங்களும் தோன்றி விட்டன. எல்லாம் ஆயிற்று. இப்போது, எந்தக் காலத்தில் இந்த இடத்தில் செடிகொடிகள் இருந்தன, எந்தக் காலத்தில் வீடுகள் வந்தன, பின்னர் மறுபடியும் எந்தக் காலத்தில் வீடுகள் மறைந்து அந்த இடத்தில் செடி கொடிகள் வந்தன என்பதையெல்லாம் நாம் எப்படிச் சொல்ல முடியும்?

இப்படியான மாறுதல்களை வைத்து நாம் காலத்தை அளக்கக்கூடாது. அதேபோல், மனிதனின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் கொண்டு நாம் காலத்தை அளப்பதும் சரியல்ல. மனிதனின் மறைவுக்குப் பிறகும் காலம் இருக்கவே செய்யும். அதற்கு ஆதியும் அந்தமும் கிடையாது.

காலத்தின் இயல்பே இப்படி இருக்கும்போது, பகவானை எப்படி நாம் பார்க்க முடியும். அவனுடைய ஆரம்பத்தையோ முடிவையோ எப்படி நாம் பார்க்க முடியும். ஆரம்பமும் முடிவும் இல்லாதவனாக என்றைக்கும் இருப்பவன் அல்லவா கடவுள். என்றைக்கும் இருக்கிறவனுக்குக் காலத்தை எப்படி நிர்ணயிக்க முடியும்?

வேதம், வேதம் சொன்னதான கருத்துகள், அதை எடுத்து விளக்கியிருக்கக் கூடியதான தர்சனங்கள், பாமரர்களுக்கு விளக்கக்கூடியதான கதைகள் ஆகிய அனைத்தும் நம் புத்தியை விஸ்தாரமாக்கி, செழிப்பாக்கும். அந்தப் புத்தியில் ஊடுறுவிச் செல்லக்கூடிய தத்துவம் அறிவுக்கு எட்டியதும், காலம் என்றைக்கும் இருப்பது. அதற்கு அழிவு என்பதே கிடையாது என்ற ஞானம் மனிதனுக்கு வரும்.

ஒன்று சொல்வது உண்டு. கிருதயுகம் இத்தனை வருடங்கள்; திரேதாயுகம் இத்தனை வருடங்கள்; துவாபரயுகம் இத்தனை வருடங்கள்; கலியுகம் இத்தனை வருடங்கள் என்று கணக்கிட்டுச் சொல்வார்கள். இந்த நான்கு யுகங்களும் சுழற்சி முறையில் வந்துகொண்டே இருக்கின்றன. ஆரம்பமும் தெரியாது; முடிவும் தெரியாது.

இப்படியான ஆயிரம் சதுர்யுகங்கள் சேர்ந்தது, பிரம்மாவுக்கு ஒரு பகல் என்றும், அதேபோல் ஆயிரம் சதுர்யுகங்கள் சேர்ந்தது பிரம்மாவுக்கு ஓர் இரவு என்றும் சொல்வார்கள்.

ஆக, பிரம்மாவின் ஒருநாள் என்பது இரண்டாயிரம் சதுர்யுகங்களைக் குறிப்பிடும். அப்படி நூறு வயது இருந்தால் பிரம்மாவின் ஆயுள் என்றும் சொல்கிறார்கள். இதை நினைத்துப் பார்த்தால்... நம்மால் இலக்கம் போட முடியுமா? நிச்சயம் முடியாது!

நம் கண்ணுக்கோ, காதுக்கோ மனதுக்கோ எட்டாத விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன.

- தொடரும்...