வேத காலத்தில் ஒலியும் ஒளியும்தான் இருந்தன. வேதங்கள் மட்டுமல்லாமல், மற்ற இதிகாச-புராணங்கள், ஆயுர்வேதம் என்று எல்லாமே வாயால் சொல்லப்பட்டு, காதால் கேட்கப்பட்டு, மறுபடியும் வாயால் சொல்லப்பட்டுதான் வந்தன.

ஒலி என்பதுதான் கடவுளின் சிருஷ்டி. அதற்கு மனிதர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்றபடி எழுத்து வடிவம் கொடுத்தனர். மனிதர்கள் ஒலியைத்தான் உச்சாரணம் செய்கிறார்கள். உச்சாரணம் செய்ததைக் காதால் கேட்டபிறகுதான், அதற்கு வரி வடிவத்தைக் கொடுத்தனர். அப்படி மனிதர்களால் உருவாக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் எல்லாம் சரியாக இருக்காது. ஏன் தெரியுமா? ஒலியை எழுத்தினால் வடிக்கவே முடியாது. ஒலி என்பது வாயால் சொல்லக் காதால் கேட்பதுதான் சரியாக இருக்கும்.

இங்கே ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.

ரத்னாகரன் என்று ஒருவன் இருந்தான். காட்டில் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வந்தான். அவனுடைய குடும்பத்தைக் காப்பாற்று வதற்குப் பணம் வேண்டுமே... காட்டில் ஒன்றுமே கிடைக்காதே. வேறு வழியில்லாமல் கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டான். அந்த வழியாகப் போகக் கூடிய பணக்காரர்களை வழிமறித்து, பொன், பொருள், பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து வந்தான். இப்படியாக அவன் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தான்.

ஒருநாள் அந்த வழியாக நாரதர் வந்தார். அவரிடமும் கொள்ளையடிக்கப் பார்த்தால்... அவரிடம் ஒன்றுமே இல்லை. கையில் ஒரு தம்புரா மட்டும்தான் இருந்தது. அதனால் ஒன்றும் பயனில்லையே... எனவே, நாரதரை விட்டு விட்டான்.

ஒலி வடிவில்தான் நாரதர் சொன்னார். அந்த ஒலியை ரத்னாகரன் கேட்டான். அதை உச்சாடனம் செய்ததன் மூலம் அவனால் ஒளியாகிய பரம்பொருளை தரிசிக்க முடிந்தது!

அவனைத் திருத்த நினைத்த நாரதர் அவனிடம், ‘`இப்படிக் கொள்ளையடிப்பது பாவம் இல்லையா...’’ என்று கேட்டார். ‘`பாவம் என்று யார் சொன்னது... என் குடும்பத்தைக் காப்பாற்றுவது அறம். அந்த அறத்தை ஒட்டித்தான் நான் இப்படிச் செய்கிறேன். எனவே, இதனால் எனக்குப் பாவம் வராது’’ என்றான் ரத்னாகரன்.

அதைக்கேட்ட நாரதர், ‘`நீ குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னது சரிதான். ஆனால், உழைத்துச் சம்பாதிக்காமல், தவறான வழியில் சென்று காப்பாற்றுகிறாயே. அதனால் உனக்குப் பாவம்தான் சேரும்’’ என்றார்.

‘`எனக்கு இங்கு வேறு வழி எதுவும் இல்லையே. இதுதான் என்னால் முடியும். எனவேதான், நான் கொள்ளையடிக்கிறேன். கொள்ளை என்பது என்னுடைய அறம்’’ என்று அறத்துக்குப் புது வியாக்கியானம் கொடுத்தான் ரத்னாகரன்.

அவனை எப்படியும் திருத்த நினைத்த நாரதர், ‘`அப்பா, அவரவர் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்து பொருள் சேர்த்து, தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள் தெரியுமா... அவர்கள் உழைத்துச் சேர்த்த பொன், பொருளை நீ கொள்ளையடிக்கிறாயே... உழைப்பே இல்லாமல் கிடைக்கும் பொன்னும் பொருளும் அறமாகாது. அந்தத் தவற்றால் உன்னைப் பாவம் சேரும். உனக்கு நரகம் கிடைக்கும்’’ என்றார்.

நாரதர் சொன்னதைக் கேட்ட ரத்னாகரன், ‘`எனக்குப் பாவம் வரும் என்று சொன்னால், நான் தவறான வழியில் சேர்த்துக் கொடுக்கும் பொருளைக்கொண்டு சுகமாக வாழும் என் குடும்பத்தினருக்கும் என்னுடைய பாவத்தில் பங்கிருக்கும்தானே’’ என்று கேட்டான்.

‘`நீ தப்பாக நினைக்கிறாய் அப்பா. நீ கொடுக்கும் பணத்தால் கிடைக்கக்கூடிய சுக சௌகரியங்களை அனுபவிப்பதற்குத்தான் அவர்களுக்குப் பாத்தியதை உண்டே தவிர, இதனால் உனக்குக் கிடைக்கக்கூடிய பாவத்தில் அவர்களுக்குப் பங்கு இல்லை. பிற்பாடு அவர்கள் சந்தோஷமாக இருப்பார்கள். நீதான் கஷ்டப்படப் போகிறாய். அவர்கள் தப்பு செய்யவில்லை என்பதால், இறந்த பிறகு அவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள். ஆனால், கொள்ளையடித்துப் பாவத்தைச் சேர்த்துக்கொண்ட நீ, நரகத்தில் அவஸ்தைப்படுவாய்’’ என்றார் நாரதர்.

‘`நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது'' - ரத்னாகாரன் தனது கருத்தில் விடாப்பிடியாக இருந்தான்.

நாரதரோ, ‘`நான் சொல்வதை நீ நம்பவில்லை போலிருக்கிறது. வேண்டுமானால் ஒன்று செய். நான் இங்கேயே இருக்கிறேன். நீ வீட்டுக்குப் போய் உன் மனைவியிடம் கேட்டு வந்து சொல்’’ என்றார்.

ரத்னாகரனும் வீட்டுக்குச் சென்று மனைவி யிடம், ‘`நான் செய்யும் எல்லாவற்றிலும் உனக்குப் பங்கு இருக்கிறதுதானே’’ என்று கேட்டான்.

‘`அதிலென்ன சந்தேகம், இருக்கிறதுதான்’’.

‘`நான் சம்பாதித்துக்கொடுக்கக்கூடிய சொத்து களில் உனக்கும் பங்கு உண்டுதானே?’’

‘`உண்டு. நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும். எப்போது என் கையைப் பிடித்து உங்கள் மனைவியாக்கிக்கொண்டீர்களோ அப்போதே என்னைக் காப்பாற்றவேண்டியது உங்களுடைய கடமையாகிவிட்டது’’ என்றாள் மனைவி.

‘`அப்படியானால், நான் செய்யக்கூடிய பாவத் திலும் உனக்குப் பங்கு உண்டல்லவா?’’

‘`அதெப்படி வரும். தப்பு நீயல்லவா செய்தாய். அந்தப் பாவம் உனக்குத்தான் வரும். எனக்கு வராது’’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள்.

உடனே நாரதரிடம் திரும்பி வந்த ரத்னாகரன், ‘`ஐயா, நீங்கள் சொன்னது சரிதான். என் மனைவி, என்னுடைய பாவத்தில் தனக்குப் பங்கில்லை என்று சொல்லிவிட்டாள். எனக்கு என்ன செய்வ தென்றே புரியவில்லை. இத்தனை நாளாக நான் இப்படி என்னைப் பாவத்தில் ஈடுபடுத்திக் கொண்டுவிட்டேன். இதற்கு ஒரு விடிவு காலம் உண்டா'' என்று கேட்டான்.

‘`கவலைப்படாதே. நீ தவம் செய்’’ என்றார் நாரதர்.

அவனுக்குத் தவம் என்றால் என்னவென்று புரியவில்லை. விளக்கம் கேட்டான். நாரதரும் அவனுக்கு ஒரு மந்திரத்தை உபதேசித்தார். மந்திரம் அவன் வாயில் நுழையவில்லை. எனவே நாரதர் அங்கிருந்த மரங்களைக் காட்டி, `என்ன என்று' கேட்டதற்கு ரத்னாகரன், `மரம்' என்று சொன்னான்.

‘`நீ மரம் என்று வாயை மூடிக்கொள்ளாதே. ‘மரா’ என்று சொல்’’ என்றார் நாரதர்.

ரத்னாகரனும் அப்படியே, ‘மரா, மரா’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். அதுவே ‘ராம’ என்னும் தாரக மந்திரமாகிவிட்டது. ரத்னாகரன் வால்மீகி முனிவராகி, ராமாயணம் என்ற ஒப்பற்ற இதிகாசத்தையும் நமக்குக் கொடுத்துவிட்டார்.

இந்தக் கதையில் என்ன தெரிகிறது?

எழுத்து வடிவில் ஒன்றும் வரவில்லையப்பா. ஒலி வடிவில்தான் நாரதர் சொன்னார். அந்த ஒலியை அவன் கேட்டான். அந்த ஒலியை உச்சாடனம் செய்ததன் மூலம் அவனால் ஒளியாகிற பரம்பொருளை தரிசிக்க முடிந்தது.

`ரிஷி' என்ற சொல்லுக்கு சம்ஸ்கிருதத்தில், ‘கடவுளை தரிசித்தவர்’ என்று பொருள். ‘தர்சனாத் ரிஷி’ என்று சொல்வார்கள். தரிசனம் என்றால் கண்ணாடியில் தெரிவதுபோல் தெரிவது என்று பொருள். ஒளியைக் கண்டவர் - பரம்பொருளைக் கண்டவர் - ரிஷி.

அவ்வகையில், பராசரர் என்று ஒரு ரிஷி. அவர் ஒருநாள் கங்கை நதியைத் தாண்டிச் செல்லவேண்டி இருந்தது. படகும் இருக்கிறது. படகை ஓட்டுவதற்கு ஒரு பெண்ணும் இருக்கிறாள். பராசரர் அந்தப் படகில் ஏறிக்கொண்டார். படகு கங்கையில் மிதந்துகொண்டிருந்த தருணத்தில் அவருக்கு, ‘இப்போது ஒரு மகான் தோன்ற வேண்டுமே’ என்பதாக ஓர் எண்ணம் தோன்றியது.

என்ன நடந்தது தெரியுமா?

- தொடரும்