Published:Updated:

ஆதியும் அந்தமும் - 13 - மறை சொல்லும் மகிமைகள்

ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

புராணங்களில் பல கதைகள் சொல்லப்பட்டிருக் கின்றன. அதில் ஒன்றுதான் திருமாலும் பிரம்மனும் அடிமுடி தேடிய திருக்கதை.

ஆதியும் அந்தமும் - 13 - மறை சொல்லும் மகிமைகள்

புராணங்களில் பல கதைகள் சொல்லப்பட்டிருக் கின்றன. அதில் ஒன்றுதான் திருமாலும் பிரம்மனும் அடிமுடி தேடிய திருக்கதை.

Published:Updated:
ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

ளியைக் கண்டவர் - பரம்பொருளைக் கண்டவர் - அந்தப் பராசக்தியைக் கண்டவர் ரிஷி என்று பார்த்தோம். ரிஷிகள் நித்திய வஸ்துவான ஆனந்தத்தில் திளைத்திருப்பவர்கள். அப்படிப்பட்ட ரிஷி பரம்பரைதான், நமக்கு வேதங்களையும் புராணங்களையும் எல்லா விதமான நடைமுறைகளையும் நமக்கு அருளியிருக்கிறது.

புராணங்களில் பல கதைகள் சொல்லப்பட்டிருக் கின்றன. அதில் ஒன்றுதான் திருமாலும் பிரம்மனும் அடிமுடி தேடிய திருக்கதை. அந்தக் கதையில் பிரம்மன், தாழம்பூவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட தகவலைச் சொல்லி நிறுத்தியிருந்தேன்.

திருமுடியைத் தேடிச்சென்ற பிரம்மன் வழியில் தாழம்பூவைக் கண்டார். அது, சிவபெருமானின் திருமுடியிலிருந்து இறங்கி பதினான்காயிரம் சதுர்யுகங்கள் ஆகிவிட்டன என்பதை அறிந்தார். பிரம்மாவுக்கு மலைப்பாக இருந்தது. தன்னால் சிவபெருமானின் தலையைப் பார்க்க முடியாது என்று தீர்மானித்துவிட்ட பிரம்மா, தாழம்பூவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து, சிவபெருமானிடம் வந்த பிரம்மா, தான் அவருடைய தலையை தரிசித்துவிட்டதாகக் கூற, தாழம்பூவும் அவருக்குச் சாட்சி சொன்னது. தாழம்பூ சொன்னதைக் கேட்டு, ``நீ பொய் சொல்கிறாய் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இனி நீ என் பூஜைக்கு அருகதை இல்லை'' என்று தாழம்பூவைச் சபித்துவிட்டார் சிவபெருமான். பிரம்மாவை என்ன செய்தார் தெரியுமோ? அவருடைய தலைகளில் ஒரு தலையை கிள்ளியெறிந்துவிட்டார்.

திருமால், பிரம்மா என்று இரண்டு பெரிய வித்வான்கள். அவர்களாலும் இந்தப் பிரபஞ்சத் தைப் படைத்த அந்தப் பெரிய சக்தியைக் காண முடியவில்லை; ஆதியும் அந்தமும் இல்லாத அந்தப் பெரிய சக்தியை நம்மால் புரிந்துகொள்ள முடியாது என்பதை உணர்த்தவே இப்படி கதையாக நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆதியும் அந்தமும் - 13 - மறை சொல்லும் மகிமைகள்

வேதத்திலுள்ள தத்துவங்களை விளக்குவ தற்காகவே புராணங்கள் ஏற்பட்டன. உயர்ந்ததான வேதங்களில் மறைபொருளாக இருக்கக்கூடியவையும், நமக்கு எட்டாகனியாகத் திகழ்ந்தவையுமான அந்த உயர்ந்த தத்துவங்களை நமக்கு எட்டும் கனியாக அனுக்கிரகம் செய்தவர்கள் ரிஷிகள். அவர்களில் ஒருவர் பராசரர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் ஒருநாள் கங்கை நதியைத் தாண்டிச் செல்லவேண்டியிருந்தது. படகும் இருக்கிறது. படகை ஓட்டுவதற்கு ஒரு பெண்ணும் இருக்கிறாள். பராசரர் அந்தப் படகில் ஏறிக்கொண்டார். படகு கங்கையில் மிதந்துகொண்டிருந்த தருணத்தில் அவருக்கு, ‘இப்போது ஒரு மகான் தோன்ற வேண்டுமே’ என்பதாக ஓர் எண்ணம் தோன்றியது.

ஆனால், பிறப்பதற்கு ஓர் ஆணும் ஒரு பெண் ணும் வேண்டுமே. அந்தச் சூழ்நிலையில் அவர், படகை ஓட்டிக்கொண்டிருந்த `மச்சகந்தி' என்ற அந்தப் பெண்ணை ஒரு நொடி நினைத்துப் பார்த்தார். உடனே ஒரு குழந்தை பிறந்துவிட்டது.

‘ரிஷி கர்ப்பம் ராத்திரி தங்காது’ என்பார்கள். நாமெல்லாம் பத்து மாதங்கள் இருந்துவிட்டு வருவதற்கே கஷ்டப்படுகிறோம். ரிஷிகள் அப்படியில்லை. அவர்களுடைய நோக்கம் சிற்றின்பம் அல்ல. ஒரு மகான் பிறக்க வேண்டும் என்பதற்காகத் தம்முடைய வீர்யத்தை விதைத்தார் பராசரர். இத்தனைக்கும் அவர் அந்த மச்சகந்தியை ஸ்பரிசிக்கவே இல்லை. வெறும் பார்வை மட்டும்தான். மச்சகந்தியும் பருவம் அடையாத சிறு பெண். அந்தச் சிறு பெண்ணிடம் ஒரு மகானைத் தோன்றச் செய்தார் பராசரர்.

அவர் மந்த்ர த்ருஷ்டா. ‘ஒளியைப் பார்த்தவர்’. ஒலியின் மூலமாக அந்த ஒளியைப் பார்த்தவர். வேதத்தின் மூலமாக ஒளியைப் பார்த்தவர். அப்படி பராசரரின் மந்திர சக்தியால் பிறந்த அந்தக் குழந்தைதான் வேத வியாசர். அந்த வேத வியாசர் மச்சகந்தியிடம் என்ன சொன்னார் தெரியுமோ?

`‘அம்மா! நீ நினைக்கும்போது நான் உன்னை வந்து பார்க்கிறேன். நான் போய் வருகிறேன்'’ என்று சொல்லிச் சென்று விட்டார். அவர் அம்மாவிடம் பாலும் குடிக்கவில்லை. அம்மாவுடன் இருக்கவுமில்லை. அம்மாவும் அவரைத் தன்னுடன் இருக்கும்படி சொல்லவில்லை. பராசரர் அந்த மச்சகந்தியை பழைய நிலைக்கே மாற்றிவிட்டார். மச்சகந்திக்கு நடந்த அனைத்தையும் மறக்கும்படிச் செய்து விட்டார்.

ஆதியும் அந்தமும் - 13 - மறை சொல்லும் மகிமைகள்

அந்த வேத வியாசர், எல்லையற்ற வேதங்களை, மனிதகுலம் கடைத்தேற வேண்டும் என்பதற்காக, புராண வடிவில் - 18 புராணங்களாகப் பகுத்துத் தந்திருக்கிறார். இப்படி, 18 வித்யாஸ்தானங்களையும் 18 புராணங்களாக மாற்றிவிட்டார். அவரும்கூட வேதத்தைப் படைக்கவில்லை. ஏற்கெனவே ஒலி வடிவில் இருந்த வேதங்களை, எல்லோருக்கும் அவரவர் தேவைக்கேற்பப் பயன்படும் விதமாகப் பகுத்துக் கொடுத்தார். வேதங்களை மனிதர்களுக்குப் பயன்படும்படிச் செய்த காரணத்தால்தான் அவருக்கு வேத வியாசர் என்ற பெயரே ஏற்பட்டது.

ஒருமுறை, வேத வியாசர் தான் செல்லும் வழியில் மரக்கிளையில் இரண்டு கிளிகள் சரசம் செய்துகொண்டிருப்பதைப் பார்த்தார். அவை அனுபவித்துக்கொண்டிருக்கும் இன்பத்தை ஒரு நொடி நினைத்துப் பார்த்தார். அப்படி நினைத்ததும் ஒரு குழந்தை தோன்றிவிட்டது. அந்தக் குழந்தையின் பெயர் சுகம் - கிளி.

அந்தக் குழந்தை என்ன செய்தது தெரியுமோ? வேதங்களிலிருந்த தத்துவங்கள் அனைத்தின் சாரத்தையும் பிழிந்தெடுத்து பாகவதமாகக் கொடுத்துவிட்டது. அப்பா வேத வியாசர்

ஒலியைச் சொன்னார். பிள்ளை சுகபிரம்மம் ஒளியைச் சொன்னார். அப்பா ஒலியைப் பெரிதாக் கினார். பிள்ளை ஒளியைக் காட்டிக்கொடுத்தார். இருவருமே ரிஷிகள்தானே.

கௌதமர் என்று ஒரு ரிஷி இருந்தார். அவருடைய தர்மபத்தினி அகல்யை. கௌதமர் தினமும் தன்னுடைய அனுஷ்டானங்களைச் செய்துகொண்டே இருப்பார். நாள்தோறும் அதிகாலையில் நான்கு மணிக்கு எழுந்து நதிக்குப் போய் ஸ்நானம் செய்துவிட்டு கடவுளைப் பிரார்த்திப்பார். கடவுளை தியானிப்பதுதான் அவருடைய கடமை. கடவுளை தியானிப் பதைவிட ஆனந்தம் தரக்கூடிய ஒன்று கிடை யாது. பொருள்களை அனுப விப்பதால் ஏற்படக்கூடிய ஆனந்தம் தற்காலிகம்தான்.

மாம்பழத்தை வாயில் போட்டு சுவைத்து முடிக்கும் வரைதான் ஆனந்தம். சுவைத்து முடித்துவிட்டால் ஆனந்தம் போய்விடுகிறது. மற்றொரு மாம்பழத்தை நாடுகிறது. அந்த ஆனந்தத்தை அடைவதற்குக்கூட நமக்கு வாய், பற்கள், நாக்கு, உமிழ்நீர் எல்லாம் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, பழமும் பழுத்து இனிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஆனந்தம் கிடைக்கும். இப்படி இந்தத் தற்காலிக ஆனந்தத்துக்கே பல தேவைகள் இருக்கின்றன. இப்படியான தற்காலிக ஆனந்தமானது மின்னலைப்போல் நொடியில் தோன்றி மறைபவைதான். ரிஷிகள் நித்திய வஸ்துவான ஆனந்தத்தில் திளைத்திருப்பவர்கள். அந்த ஆனந்தத்துக்கு அழிவே கிடையாது.

அந்த ரிஷி பரம்பரையைப் பற்றியும், 18 புராணங்கள் என்ன சொல்கின்றன, 18 வித்யாஸ்தானங்கள் என்ன சொல்கின்றன என்பது பற்றியும் தொடர்ந்து பார்ப்போம்.

- தொடரும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism