Published:Updated:

ஆதியும் அந்தமும் - 15 - மறை சொல்லும் மகிமைகள்

ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எல்லாமே பொதுச் சொத்து.

ஆதியும் அந்தமும் - 15 - மறை சொல்லும் மகிமைகள்

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எல்லாமே பொதுச் சொத்து.

Published:Updated:
ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

முன்னோர் நற்கதி அடைய வேண்டும் எனும் நோக்கத்துடன் பகீரதன் செய்த முயற்சியால் ஆகாய கங்கை பூமிக்கு இறங்கிய திருக்கதையைப் படித்தோம்; கபிலரின் கதையையும் அறிந்தோம்.

ஆகாயத்திலிருந்து மழையாகப் பெய்து, அதுவே ஆறாகப் பெருகி, சமுத்திரத்தில் கலந்து, சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி, மேலே சென்று மேகங்களாக உருவெடுத்து, மறுபடியும் மழையாகப் பெய்கிறது. இது ஒரு சுழற்சி முறை. இப்படியான உண்மையை நமக்கு முதலில் உணர்த்திக்காட்டியவர்கள் ரிஷிகள். இந்தத் தத்துவத்தை நமக்கு உணர்த்தவே கபில ரிஷியின் கதை, புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தக் கதையிலிருந்து மற்றொரு தத்துவமும் நமக்குப் புரியவருகிறது. அதாவது எந்த ஒரு சாந்தியாக இருந்தாலும் ஜலத்தைக் கொண்டுதான் செய்ய வேண்டும். தர்ப்பணமா ஜலத்தில்தான் செய்ய வேண்டும். குடிப்பதற்கும் ஜலம்தான். ஜலம்தான் பிராணனைக் கொடுக்கிறது.

தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய சுயநலத்துக்காக அதைத் தேக்கி வைக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அந்தத் தண்ணீர் கெட்டுப் போய்விடும். இன்றைக்கு, தண்ணீர் வியாபாரப் பொருளாகி விட்டது. பொதுவான ஒரு சொத்தை வியாபாரப் பொருளாக மாற்றி விட்டோம். இப்படியெல்லாம் நாம் பல வகை யிலும் தவறு செய்துகொண்டிருக்கிறோம்.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எல்லாமே பொதுச் சொத்து. ஆனால், நாம் என்ன செய்கிறோம்? எல்லாவற்றையும் நாமே அனுபவிக்க வேண்டும் என்று பேராசைப்படுகிறோம். பூமியை சொந்தம் கொண்டாடுகிறோம். ஆகாசத்தையும், சமுத்திரத் தையும்கூட சொந்தம் கொண்டாடுகிறோம்.

மனிதர்களின் இப்படியான செயல்கள் எல்லாமே ரிஷிகளின் சிந்தனைகளுக்கு விரோத மானவை. ஆங்கீரசர் என்று ஒரு ரிஷி. அவர் சொல்கிறார்: ‘கோசதா தபி கோக்ஷீரம் ப்ரஸ்தம் தான்ய சதாத் அபி ப்ராசாதாத் அபி சையாத்தம் சேஷா பர விபூதய:’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘எல்லாமே உனக்குச் சொந்தமில்லை. உனக்கு எது சொந்தம் தெரியுமா? இருப்பதற்கு ஒரு சிறிய இடம் வேண்டும். ஆனால், நூறு அறைகள் கொண்ட பெரிய பங்களா நீ கட்டினால், அது உனக்குத் தேவையில்லாத ஒன்று. நீ படுத்துக்கொள்வதற்கு ஓர் அறைதான் வேண்டும். பாக்கி எதுவுமே உன்னுடையது இல்லை. பிறத்தியாருக்குக் கிடைக்க வேண்டிய இடத்தை நீ பிடித்துக்கொண்டு, அவர்களுக்குக் கிடைக்காமல் போகும்படிச் செய்கிறாய். நீ தவறு செய்கிறாய்.

ஆதியும் அந்தமும்
ஆதியும் அந்தமும்

உனக்கு சாப்பிட வேண்டும். இரண்டு மூட்டை நெல் இருந்தால் ஒரு வருடத்துக்கு உனக்குப் போதுமானதாக இருக்கும். ஆனால், நீ மூட்டை மூட்டையாக அடுக்கிவைத்திருக்கிறாய். பிறத்தியார் அனுபவிக்கவேண்டிய நெல்லை நீ முடக்கிவைத்திருக்கிறாய். உனக்குப் பால் வேண்டும். அதற்கு ஒரு மாடு இருந்தால் போதும். ஆனால், நூற்றுக்கணக்கான மாடுகளை வைத்துக்கொண்டிருக்கிறாய். மற்றவர்களுக்குக் கிடைக்கவேண்டிய பாலைக் கிடைக்காதபடி செய்கிறாய். இவை எல்லாமே தவறுதான்’ என்கிறார்.

பாரத்வாஜர் ஒருபடி மேலாகப் போய், ‘உன்னுடைய தேவையை விட அதிகம் பெற்றிருந்தால் நீ திருடன். உனக்கு தண்டனை கொடுக்க வேண்டும்’ என்கிறார்.

இப்படித்தான் முனிவர்களின் சிந்தனை இருந்தது. லோகத்தில் உற்பத்தியாகக் கூடிய பதார்த்தங்கள் எல்லாம் அனைத்து ஜீவராசிகளுக்கும் சென்று சேர வேண்டுமே தவிர, தனி ஒரு மனிதனுக்கு மட்டுமே சொந்தமாக முடியாது. அதனால்தான் நீ சாப்பிடும்போது உன் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் வீடு தேடி வரும் ஏழைகளுக்கும் கொடு. மேலும் காகத்துக்கும் நாய்க்கும்கூட உணவு கொடு என்று சகல ஜீவராசிகளையும் சேர்த்துச் சொல்லியிருக் கிறார்கள். பிரம்மா முதல் சிறு துளசிச் செடி வரை அனைத்துக்கும் உணவு கொடுத்துவிட்டு நீ சாப்பிட்டால், அப்போது நீயும் ரிஷியாகிவிடுவாய் என்று ரிஷிகள் கூறியிருக்கிறார்கள். ரிஷிகளின் இந்தச் சிந்தனையானது இன்றைய மனிதர்களிடம் வரவில்லை. வரவும் வராது. காரணம், மனிதர்களின் சுயநலம் தான். மனிதர்களுக்கு அத்தகைய உயர்ந்த சிந்தனை வந்துவிட்டால், அவனுக்கு எதிரிகள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்.

கௌதமர் என்று ஒரு மகரிஷி. அவர் சொல்கிறார்:

‘பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா: பரோபகாராய வஹந்தி நத்யா:

பரோபகாரார்த்தம் இதம் சரீரம்’

`மரங்கள் மற்ற ஜீவராசிகளுக்காகத்தான் பழங்களைத் தருகிறதே தவிர, தான் சாப்பிடுவதற்கு அல்ல. அதேபோல் நதியும் மற்ற ஜீவராசிகளுக்காகத்தான் பயன்படுகிறது. அதேபோல் மனிதர்களும் மற்றவர்களின் நலனுக்காக உபகாரம் செய்ய வேண்டும். அதுவே மனித சரீரத்தின் பயன்’ என்கிறார்.

ஆதியும் அந்தமும்
ஆதியும் அந்தமும்

நதியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் எத்தனையோ ஜீவராசிகள் வாழ்கின்றன. அதற்கு அந்த நதி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நர்மதா நதி இருக்கிறதே அது இரண்டு கிலோமீட்டர் அகலமும், நாலைந்து ஆள்கள் உயர ஆழமும் உள்ளது. அதில் முதலை உள்ளிட்ட பல ஜீவராசிகள் வாழ்கின்றன. அவற்றின் வாழ்க்கைக்குத் தேவையான ஆகாரம் அந்த நதியில் கிடைக்கிறது.

நர்மதா நதிக்கு அணை கட்டியதும் எல்லாமே அழிந்துவிட்டன. மனிதர்கள், நதியானது தங்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று சுயநலமாகச் சிந்தித்ததன் காரணமாகத்தான் எண்ணற்ற ஜீவராசிகளை அழித்து, நதியின் குறுக்கே அணை கட்டினார்கள். வெறுமனே எதிர்க்க வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. உண்மை இதுதான். இப்படியான நிலைமை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் ரிஷிகள் நதியை ஜீவநதி என்று குறிப்பிட்டதுடன், அதைத் தடுத்து நிறுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல் மலைகளையும் காடுகளையும்கூட அழிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், நாம் காட்டை அழித்து பிளாட் போட்டு விற்றுக்கொண்டிருக்கிறோம். மலைகளையும் உடைத்துச் சமவெளியாக்கி வீடு கட்டி மார்தட்டிக்கொள்கிறோம். இது எல்லாமே தவறு மட்டுமல்ல, பெரும் பாவமும்கூட. மலையும், காடுகளும் நன்றாக இருந்தால்தான் மழை பெய்யும். செடி கொடிகள் செழித்து வளரும். அனைத்து ஜீவராசிகளும் அதனால் பலன் பெறும்.

- தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism