Published:Updated:

ஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்

ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

ஆகாசத்தில் ஒலி வடிவில் வியாபித்திருந்த தகவல்களை வேத மந்திரங்களாக வழங்கிய ரிஷிகளின் பரம்பரையைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்கவேண்டியது அவசியம்.

ஆதியும் அந்தமும் - 16 - மறை சொல்லும் மகிமைகள்

ஆகாசத்தில் ஒலி வடிவில் வியாபித்திருந்த தகவல்களை வேத மந்திரங்களாக வழங்கிய ரிஷிகளின் பரம்பரையைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்கவேண்டியது அவசியம்.

Published:Updated:
ஆதியும் அந்தமும்
பிரீமியம் ஸ்டோரி
ஆதியும் அந்தமும்

சுயநலமற்ற ரிஷிகள் கூறிய நல்லுரைகள் அனைத்தும் லோக க்ஷேமத்துக்காகவே. ஆதிகாலத்தில் மனிதர்களின் சிந்தனைக்குத் தேவையான தகவல் களை முதன்முதலில் எடுத்துரைத்தவர்கள் ரிஷி பரம்பரையினரே.

ரிஷி என்ற சப்தத்துக்கு ‘தர்சனாத்’ - கண்ணால் கண்டவர்கள் என்று பொருள். நமக்குத்தான் கடந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என்று இருக்கின்றன. ஆனால், ரிஷிகளுக்கு அப்படி இல்லை. அவர்கள் மூன்று காலங்களையும் கடந்தவர்கள் - உணர்ந்தவர்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம்முடைய சிந்தனைகள் எப்படிப் போகும் தெரியுமோ?

புலன்களால் தெரிந்துகொண்ட விஷயங்கள், மனதுக்கு எட்டக்கூடிய விஷயங்கள், கேட்டும், பார்த்தும், அனுபவித்தும் தெரிந்துகொண்ட விஷயங்கள் போன்றவையே மனித சிந்தனைக்கு வரக்கூடிய தகவல்களாக இருக்கின்றன! மறைந்திருக்கக்கூடிய அரிய பல தகவல்கள் நமக்குத் தெரியவேண்டும் என்றால், ரிஷிகள் மூலமாகத்தான் தெரியவர வேண்டும்.

ஆதியும் அந்தமும்
ஆதியும் அந்தமும்

இதையே இன்னும் எளிமையாகச் சொல்கிறேன். மனிதர்களின் ஐந்து புலன்கள் லோகத்தில் இருக்கக்கூடிய விஷயங்களைப் புரிந்து கொள்கின்றன. அதன் மூலம் ஓர் அறிவு வருகிறது. பலர் சொல்லும் வார்த்தைகளைக் கேட்பதன் மூலம் ஓர் அறிவு வருகிறது. தானாகவே பார்த்தும் தெரிந்தும்கொள்வதன் மூலமாகவும் ஓர் அறிவு வருகிறது. இவையெல்லாம் இல்லாத ஓர் அறிவு இருக்கிறதே, அந்த அறிவு இவை அனைத்தையும் விட மிகவும் சிறப்பானது. ஆனால், அந்த அறிவானது மறைந்திருக்கிறது. அப்படிப்பட்ட மிகவும் விசேஷமானதும் மனிதகுலத்துக்கு நன்மை செய்வதுமான விஷயங்களை உள்ளடக்கிய அந்த அறிவு பற்றிய தகவல்களை எடுத்துக்கூறியவர்கள்தான் ரிஷிகள். அவர்களிட மிருந்து கிடைக்கக்கூடிய தகவல்கள் எல்லாமே நம்மிடமிருந்து வெளிவராத தகவல்கள்தாம்.

சேஷாத்ரிநாத சாஸ்திரிகளின் ஆன்மிக உரை

ஆகாசத்தில் ஒலி வடிவில் வியாபித்திருந்த தகவல்களை வேத மந்திரங்களாக வழங்கிய ரிஷிகளின் பரம்பரையைப் பற்றி நமக்குத் தெரிந்திருக்கவேண்டியது அவசியம்.

‘கச்யப: அத்ரி: பரத்வாஜ: விஸ்வாமித்ர: கௌதம: ஜமதக்னி: வசிஷ்ட: அகஸ்தியஸ்ச’ என்று எட்டு ரிஷிகள் பிரதானம். வேதத்திலேயே இந்த ரிஷிகள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன.இந்த ரிஷி பரம்பரையினர் நமக்கு என்ன உபதேசம் செய்கிறார்கள் தெரியுமோ?

சிறிய வயதில் கல்வி கற்கவேண்டும். இளமைப் பருவம் வந்ததும் எல்லாவிதமான ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு முதுமை வந்துவிட்டால், காட்டுக்குச் சென்று எதிலும் பிடிப்பு இல்லாமல், சாட்சாத் அந்த பகவானிடமே செல்வதற்குத் தேவையான நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதைத்தான் பிரம்மசர்யம், கிருகஸ்தம், வான பிரஸ்தம் என்று பிரித்துள்ளார்கள்.

வானபிரஸ்த நிலையில் மனிதனின் சிந்தனை எப்படி இருக்கவேண்டும் தெரியுமோ?

‘நாம் வந்த காரியம் ஆகிவிட்டது. பஞ்சபூதங்களின் சேர்க்கையினால் ஆன நம்முடைய உடல் இருக்கிறதே, அது சிதிலமாகிவிட்டது. நம்முடைய உடல் தேய்மானத்துக்கு வந்துவிட்டதுடன், சரி செய்ய முடியாததாகவும் ஆகிவிட்டது. எனவே, நாம் அந்த உடலை விட்டுவிடத்தான் வேண்டும்’ என்று நினைத்து உடலை விட்டு விடுகிறான். மறுபடியும் அதே ஆத்மா புது உடலை எடுத்துக்கொண்டு திரும்ப வருகிறது. இப்படி ஒரு தகவல் இருப்பதை ரிஷிகள்தான் நமக்கு உபதேசம் செய்திருக்கிறார்கள்.

சிறு வயதில் அத்யயனம் படிக்க வேண் டும். அதைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. யௌவனம் வந்தால்தான், தேவைகளையும் ஆசைகளையும் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அவற்றைப் பூர்த்தி செய்து கொண்டு திருப்தியான பிறகு, ஆசைகளை விட்டுவிட வேண்டும்.

அந்த ரிஷிகள் நமக்கு ஏன் அப்படி சொல்லிக்கொடுத்தார்கள்? பிறந்த பிறப்பை நாம் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள வேண்டும். அந்தப் பிறப்பு நமக்கு மட்டும் பயனுள்ளதாக இருக்காமல், நமக்குப் பிறகு வரக்கூடிய வாரிசுகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்படியான வழிமுறைகளை அவர் களுக்கும் உபதேசம் செய்து, அவர்களையும் உத்தாரணம் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதைத்தான் ரிஷிகள் நம்மிடம் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், நாம் என்ன செய்கிறோம்?

நம் மனத்தில் காம, குரோத, மத, மாத்சர்யங்களை வளர்த்துக்கொண்டும், நீ சின்னவன், நான் பெரியவன் என்பது போன்ற பேதங்களைக் கற்பித்துக்கொண்டு ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டும் இருக்கிறோம். இதை ரிஷிகள் எதிர்பார்க்கவில்லை. மனிதர்களின் இதுபோன்ற மனப்பான்மை மாறவேண்டும் எனில், ரிஷிகள் கூறிச் சென்றபடி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்துகொண்டால், நமக்கு இதுபோன்ற துவேஷம் ஏற்படாது.

மனிதர்களுக்குத்தான் இப்படிப்பட்ட துவேஷ மனப்பான்மை ஏற்படுகிறதே தவிர, மிருகங்களுக்கோ அல்லது பறவைகளுக்கோ இத்தகைய துவேஷம் ஏற்படுவதில்லை. அவை தங்களுக்குள் ஒற்றுமையாகவே இருக்கின்றன. ஆறாவது அறிவு என்ற ஒன்று இல்லாத சாமான்ய பிராணிகளே... ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று நாம் சொல்கிறோமே, அவ்வண்ணம் கூடி வாழ்கின்றன. காட்டை யும் காப்பாற்றுகின்றன. மனிதர் களும் காட்டை அழிக்காமல் பார்த்துக்கொள்கின்றன. அப்படியிருக்க, மனிதர்களுக் குத் தங்களைக் காப்பாற்றும் நாட்டைத் தாங்களும் காப்பாற்ற வேண்டும் என்ற தத்துவம் புரிவதில்லையே. ‘தர்மோ ரக்ஷிதி ரக்ஷித:’ என்று சொல்லப்பட்டிருப்பதை நாம் நினைத்தும் பார்ப்பதில்லையே.

ஆதியும் அந்தமும்
ஆதியும் அந்தமும்

ரிஷிகள் சொன்னவற்றை நாம் வாழ்க்கையில் கடைப் பிடித்து வாழ்ந்தோம் என்றால், நாம் ஒவ்வொருவரும் ரிஷியாகி விடுவோம். அந்த நிலையில் நமக்கு இந்த லோகத்தில் எந்த பேதமும் தென்படாது. அப்போது நாம் இந்த லோகத்தைப் பார்க்கும் கண்ணோட்டமே வேறு மாதிரியாக இருக்கும்.

‘எல்லோரும் என்னைச் சேர்ந்தவர்கள், எல்லோரும் தேவைப்படுபவர்கள், எல்லோரும் எல்லோருக்கும் சந்தோஷத்தைத் தரக்கூடியவர்கள்’ என்கிற உயர்ந்த எண்ணம் மனத்தில் பளிச்சிடும். எல்லோருக்கும் நல்லது செய்வதுதான் ரிஷி பரம்பரையின் வேலை. அந்த ரிஷிகள் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமோ... எளிய வாழ்க்கை; உயர்ந்த சிந்தனை (Simple living; High thinking) என்று சொல்லத்தக்க வாழ்க்கையை வாழ்ந்தார்கள். அவர்களின் வாழ்க்கை தூய வாழ்க்கையாகவும் அவர்களுடைய சிந்தனை விஸ்தாரமான பரந்த சிந்தனையாகவும் இருந்தன.

ரிஷிகளின் அந்தத் தூய வாழ்க்கையும் உயர்ந்த சிந்தனையும் நமக்கு வரவேண்டும் என்றால், பதினெட்டு வித்யாஸ்தானங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ரிஷிகளின் நல்லுரைகளை நாம் கிரகித்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது, நம்மை அறியாம லேயே தூய வாழ்க்கை அமைவதுடன், உயர்ந்த சிந்தனையும் நமக்கு வரும். அப்போது மனித வாழ்க்கை பூரணத்துவம் பெற்றுவிடும். அப்படி நாம் வாழும் வாழ்க்கை, மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினையாகவும் உபதேசமாகவும் இருக்கும்.

- தொடரும்...