Published:Updated:

“7 நாள்கள் 7 கோயில்கள் தரிசனம்... பிறவிப்பயனை அடைந்த மகிழ்ச்சி” - பக்தியில் நெகிழும் நடிகை ஜீவிதா

நடிகை ஜீவிதா

பதினைந்து நாள்களுக்கு முன்னாடி ஒரு படத்துடைய ஷூட்டிங்கிற்காக வெளியூர் போயிருந்தேன். அங்கேதான் என் வாழ்வில் முக்கியமான ஆன்மிகப் பயணம் ஆரம்பிக்கப் போகுதுன்னுலாம் எனக்குத் தெரியல.

“7 நாள்கள் 7 கோயில்கள் தரிசனம்... பிறவிப்பயனை அடைந்த மகிழ்ச்சி” - பக்தியில் நெகிழும் நடிகை ஜீவிதா

பதினைந்து நாள்களுக்கு முன்னாடி ஒரு படத்துடைய ஷூட்டிங்கிற்காக வெளியூர் போயிருந்தேன். அங்கேதான் என் வாழ்வில் முக்கியமான ஆன்மிகப் பயணம் ஆரம்பிக்கப் போகுதுன்னுலாம் எனக்குத் தெரியல.

Published:Updated:
நடிகை ஜீவிதா

“நமக்கு மேல ஒரு சக்தி இருக்குங்கிறதை நான் நம்புறேன்.. யாரையும் நம்பாமல் நம்மைப் படைத்த கடவுள் நம்மை காப்பார், வழிநடத்துவார்னு அவரை மட்டும்தான் இன்னைக்கு வரைக்கும் நம்பிட்டு இருக்கேன்!” என்றவாறு ஆன்மிகம் குறித்து நம்மிடையே பேச ஆரம்பித்தார், நடிகை ஜீவிதா. சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பார்த்துப் பழக்கப்பட்ட முகம் இவருடையது. அவருடைய ஆன்மிக நம்பிக்கைகள் குறித்து அவருக்கே உரித்தான புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

ராஜ அலங்காரத்தில் பழநி முருகன் தரிசனம்

எனக்கு எல்லா தெய்வங்களும் பிடிக்கும். சமீபத்தில் முருகனை ரொம்பப் பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. பதினைந்து நாள்களுக்கு முன்னாடி ஒரு படத்துடைய ஷூட்டிங்கிற்காக வெளியூர் போயிருந்தேன். அங்கேதான் என் வாழ்வில் முக்கியமான ஆன்மிகப் பயணம் ஆரம்பிக்கப் போகுதுன்னுலாம் எனக்குத் தெரியல. ஷூட்டிங் ஒட்டன்சத்திரம் என்பதால் பழநி முருகனை வழிபட்டுட்டுப் போகலாம்னு தோணுச்சு. ஷூட் முடிச்சிட்டு என்கூட காரில் ரவி ராபர்ட் சார் வந்தாரு. அவர்கிட்ட ‘சார் பழனியில் முருகன் கோயில் ரொம்ப பிரபலம். அங்க போய் சாமியை பார்த்துட்டு வரலாமா’ன்னு கேட்டேன். அவரும் ‘சரிம்மா போகலாம்’னு சொல்லிட்டார்.

நடிகை ஜீவிதா
நடிகை ஜீவிதா

பாஸ்கர் என்பவர் மூலமா பழனி முருகனை வழிபட எனக்கு வாய்ப்பு கிடைச்சது. கோவிலுக்குள் ரொம்ப லேட்டாத்தான் போனோம். ரோப் காரில் போகலாம்னு கேட்டா டைம் குளோஸ் பண்ணிட்டோம்னு சொன்னாங்க.. சரின்னு டிரெயின் விசாரிச்சா அதுவும் நேரம் முடிஞ்சிடுச்சுன்னு சொல்லிட்டாங்க. நடைபாதையும் மூடிட்டாங்க. சரி படிக்கட்டில் போவோம்னு பதினைந்து நிமிடத்தில் படிக்கட்டு ஏறி முருகனை பார்க்கப் போனேன். எனக்காக பூஜை வெயிட் பண்ண மாதிரி இருந்துச்சு. ராஜ அலங்காரத்தில் முருகனைப் பார்த்து ரசிச்சேன். ரசிச்சு முடிச்ச அடுத்த நொடி அலங்காரத்தை கலைச்சிட்டாங்க. அன்னையிலிருந்துதான் என்னுடன் முருகன் இருக்கார்னு ஃபீல் பண்ண ஆரம்பிச்சேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்தப் படத்துடைய ஷூட்டிங் முடிச்சிட்டு நானும், கார் டிரைவரும் மட்டும் ஊருக்குக் கிளம்பினோம். அங்க ஸ்டார்ட் பண்ணின கார் நேரா எங்க வீட்டுல தான் நின்னுச்சு. என்னை வீட்ல விட்டுட்டு டிரைவர் காரை எடுக்கிறார். கார் ஸ்டார்ட் ஆகவே இல்லை. அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமைங்கிறதனால மெக்கானிக் யாரும் வரல. ரொம்பத் தாமதமாகத்தான் அவர் அங்கிருந்து கிளம்பினார். இதுவே வழியில் ரிப்பேர் ஆகியிருந்தா நான் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன். ஏன்னா, வரும் பாதையெல்லாமே ஹைவேஸ். அங்க மெக்கானிக்கை எங்க போய்த் தேடியிருக்க முடியும்.. அப்போதெல்லாம் முருகனே என் வழித்துணையாய் வந்ததாகத்தான் தோணுச்சு.

நடிகை ஜீவிதா குடும்பத்தினருடன்
நடிகை ஜீவிதா குடும்பத்தினருடன்

மறுநாள் திங்கள்கிழமை தத்தகிரி முருகன் கோயிலுக்குப் போகலாம்னு அம்மா சொன்னாங்க. திருச்செந்தூரில் இருக்கும் வடக்கு பார்த்த முருகனுக்கு பிறகு அந்தக் கோயிலில்தான் முருகன் அப்படியிருக்கிறதாக சொல்வாங்க. அதோடு அந்தக் கோயிலில் முருகன் காலணியுடன் காட்சியளிப்பார் என்பது கூடுதல் சிறப்பு! அங்கே ஒரு சித்தர் ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அவரைப் பார்க்கும்போது அவர் நேராக இருக்கிற மாதிரியான உணர்வு இருந்துச்சு.

மனக்குறையைப் போக்கிய ஆத்தூர் முருகன்

அடுத்து செவ்வாய்கிழமை சேலம் ஆத்தூரில் இருக்கிற முருகனை வழிபடலாம்னு திடீர்னு முடிவு பண்ணி குடும்பத்தோட போனோம். அப்பா, அம்மா, தங்கச்சி, குட்டி பசங்கன்னு எல்லாரும் குடும்பத்துடன் போயிருந்தோம். என் தம்பி மட்டும் அன்னைக்கு வரலை. 6.30 மணிக்கு மேல 140 அடி மேலே போய் நம்மளுடைய கைகளால் முருகனுக்கு அபிஷேகம் பண்ணலாம்னு சொன்னாங்க.

என் அம்மா, அப்பாவுக்கு 60 வது கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு எனக்கு ரொம்ப ஆசை. ஆனா, குடும்ப சூழல் அதெல்லாம் பண்ண முடியல. அபிஷேகம் பண்ண போகிற எல்லாருடைய கழுத்திலும் மாலை போட்டு விட்டாங்க. அபிஷேகம் பண்றதுக்காக காத்திருந்தப்ப என் அம்மா, அப்பாவை மாலையோடு பார்த்த மொமன்ட் அவங்களுக்கு 60 ம் கல்யாணம் நடக்கிற மாதிரி உணர்ந்தேன். கண்கொள்ளா காட்சியா அது எனக்கு இருந்துச்சு. எல்லாரும் மேலே போய் அபிஷேகம் பண்ணினோம். அப்ப என் கண்ணுக்கு முருகனுடைய காதில் பல்லி நிற்கிறது தெரிஞ்சது. அதை எல்லார்கிட்டேயும் சொன்னேன். உடனே அங்கிருந்தவங்க முன்னோர்களும், குலதெய்வமும் உங்களுக்கு ஆசிர்வாதம் கொடுத்திருக்காங்க. அதனாலதான் உங்க கண்ணுக்கு அந்த பல்லி தெரிஞ்சிருக்குன்னு சொன்னாங்க. அதெல்லாம் ரொம்ப மனநிறைவையும், முருகன் என்னுடன் இருக்கிறார் என்கிற உணர்வையும் அழுத்தமா சொல்லுச்சு.

நடிகை ஜீவிதா குடும்பத்தினருடன்
நடிகை ஜீவிதா குடும்பத்தினருடன்

புதன்கிழமை சேலத்தில் உள்ள மாயம்மா கோவிலுக்கு போனோம். அடுத்த நாள் சாய்பாபா கோயிலுக்கு அம்மா கூட்டிட்டு போனாங்க. வெள்ளிக்கிழமை காளியம்மன் கோயிலுக்கும், சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோயிலுக்கும் போனோம். என் வாழ்க்கையில் இப்படித் தொடர்ந்து ஒரு வாரம் நான் ஆன்மிக பயணம் எல்லாம் போனதே கிடையாது. நாம திட்டமிட்டாலும் உடல் சார்ந்த பிரச்னைகளால அது தள்ளிப்போய்டும். ஆனா, இந்த முறை அப்படி இல்லாம மனநிறைவாகத் தொடர்ந்து ஆன்மிகப் பயணம் போனதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். ஒவ்வொரு கோயிலிலும் எனக்கு நடந்த, நான் உணர்ந்த அற்புதங்களை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. இந்த ஜன்மத்துடைய பிறவிப் பலனை அடைஞ்சிட்டேன் என்கிற ஃபீல் எனக்கு வந்திருக்கு. நான் ரொம்ப கஷ்டப்படுறேன்தான். ஆனாலும், ஏதோ ஒரு வகையில் எனக்குக் கடவுள் உதவியா இருக்கிறார். எனக்கு ஆதரவா, பக்கபலமா என்னுடன் அவர் இருக்கும்போது அதைவிட வேற என்ன வேணும்!' என நெகிழ்ந்தார்.