Published:Updated:

"அன்னைக்கு என்னை வழிநடத்தினதே சிவபெருமான்தான்னு இப்பவரைக்கும் நம்புறேன்!"- லதா ராவ்

லதா ராவ்

"சட்டை போடாம ஜடா முடியோட காவி கட்டிகிட்டு வந்தவர் என் நெற்றியில் கை வைத்து `உம்' என தலை அசைச்சார். எனக்கு அவர் எங்கே இருந்து, எப்படி வந்தார்னுலாம் தெரியலை!"

"அன்னைக்கு என்னை வழிநடத்தினதே சிவபெருமான்தான்னு இப்பவரைக்கும் நம்புறேன்!"- லதா ராவ்

"சட்டை போடாம ஜடா முடியோட காவி கட்டிகிட்டு வந்தவர் என் நெற்றியில் கை வைத்து `உம்' என தலை அசைச்சார். எனக்கு அவர் எங்கே இருந்து, எப்படி வந்தார்னுலாம் தெரியலை!"

Published:Updated:
லதா ராவ்

"என்னோட திருமணத்திற்கு பிறகு தான் பழைய பாரம்பரியமான கோயில்களுக்கு தேடித்தேடி போக ஆரம்பிச்சேன்.. அந்த வகையில் சக்தி விகடன் இதழ்கள் மூலம் பழைமையான கோயில்கள் பலவற்றை அறிந்து கொண்டேன்!" என்றவாறு நம்மிடையே பேசத் தொடங்கினார், லதா ராவ். சின்னத்திரையில் நமக்கு நன்கு அறிமுகமானவர். இவருடைய கணவர் ராஜ்கமல், தற்போது வெள்ளித்திரை, சின்னத்திரை என வலம் வந்து கொண்டிருக்கிறார். விஐபி பூஜையறை பகுதிக்காக அவரைச் சந்தித்தோம். லதா ராவ் அவருடைய ஆன்மிக அனுபவம் குறித்து நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

லதா ராவ்
லதா ராவ்

என்னோட அம்மா பக்கமும் சரி, கணவர் பக்கமும் சரி சிவபெருமான் தான் எங்களுடைய குல தெய்வம். நான் சிவனை உரிமையோடு அப்பான்னு பேசுவேன். பஞ்சபூதங்கள் என சொல்லுவாங்க அந்த இடங்களுக்கெல்லாம் ஏற்கனவே போய் வழிபாடு செய்திருக்கிறேன். எனக்கு பன்னிரண்டு ஜோதி லிங்கத்தையும் பார்க்கணும்னு ஆசை. ஆன்மிக பயணத்தில் என்னோட மாமனார் என் கூட வருவார். பன்னிரண்டு ஜோதிலிங்கத்தை பார்த்த பிறகு, கைலாஷ் போகணும்னு எண்ணம் வர ஆரம்பிச்சது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கைலாஷ் நினைச்ச உடனே போய்ட்டு வரக் கூடிய இடம் கிடையாது. அங்கே அழைச்சிட்டு போகிறதுக்கென ஒரு குழு இருப்பாங்க. அங்கே இடம் கிடைக்கணும், பருவநிலை சரியா இருக்கணும் அதைவிட அவர் நாம அங்கே வரணும்னு நினைக்கணும்! எப்படியோ நானும், என் மாமனாரும் போகலாம்னு முடிவெடுத்து கிளம்பினோம். 27 பேர் கொண்ட குழுவில் நாங்களும் சேர்ந்து போனோம். சென்னை டு நேபாளம். பிறகு அங்கிருந்து இன்னொரு ஊருன்னு மாறி, மாறி டிராவல் பண்ணிட்டு இருந்தோம்.

லதா ராவ்
லதா ராவ்

ஆக்ஸி மீட்டர் வச்சு ஆக்ஸிஜனும், பல்ஸூம் செக் பண்ணிட்டே இருப்பாங்க. ஆக்ஸிஜன் லெவலில் எனக்கு பிரச்னையே வரலை. Manasarovar போனப்போ என்னோட பல்ஸ் ரேட் 128 ஆகிடுச்சு. எங்ககூட ஒரு நாலு பேர் கொண்ட டீம் வந்தாங்க.. அவங்க பல்ஸ் அதிகமா இருக்குன்னு, உங்களை கீழே அனுப்பிடுறோம்.. அங்கே போய் ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னாங்க. அந்த டீமில் ஒருத்தர்கிட்ட ப்ளீஸ் அடுத்த ஸ்டாப் வரைக்கும் நான் வரேன்.. அங்கே பிரச்னையாகிடுச்சின்னா நான் கீழே போயிடுறேன்னு சொன்னேன். அவரும் சரின்னு அடுத்த இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க. அங்கேயும் பல்ஸ் குறையவே இல்லை. எப்படி நாம திருவண்ணாமலையில் கிரிவலம் போவோமோ அதே மாதிரி கைலாஷ் மலையை சுற்றி பரிகிரமா வரணும்ன்னு சொல்லுவாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

27 பேர் போனதில் பரிகிரமாவிற்கு இவங்க ஓகேன்னு செலக்ட் ஆனது 12 பேர். நான் ரொம்ப கேட்டதனால தான் என்னையும் செலக்ட் பண்ணாங்க. பன்னிரண்டு பேரில் ஆறு பேர் முடியலைன்னு சொல்லி அன்னைக்கு நைட்டே ரிட்டர்ன் ஆகிட்டாங்க. அந்த ஆறு பேரில் நான் மட்டும்தான் பொண்ணு. அடுத்த நாள் காலையில் பரிகரமா கிளம்பியாச்சு. குதிரையில் போய்ட்டு இருக்கோம். 23,000 அடி உயரத்தில் dolma la pass-ன்னு ஒரு இடம் சொல்லுவாங்க. அங்கே இருந்து கீழே ஒன்பது கிலோமீட்டருக்கு யாரா இருந்தாலும் நடந்து தான் போகணும்.

லதா ராவ்
லதா ராவ்

அங்கே எனக்கு பல்ஸ் செக் பண்ணப்போ என் பல்ஸ் ரேட் 162! என்னோட பல்ஸ் சத்தம் எனக்கே கேட்குது.. என் கூட வந்தவர் பத்து, பத்து அடி நடந்து உட்கார்ந்து, உட்கார்ந்து போகலாம்னு சொல்லி என்னை கூட்டிட்டு போனார். எனக்கு டிராவல் பண்ணும் போது எப்பவும் குட்டி, குட்டியா வீடியோ எடுக்கிறது பிடிக்கும். dolma la pass-ல் சின்ன ஏரி ஒன்று இருக்கு. ஒரு பாட்டிலில் அந்த ஏரியில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துட்டு வந்தேன்.பிறகு, என் கூட வந்தவர்கிட்ட பல்ஸ் அதிகமாகிட்டே இருக்கே என்ன பண்றதுன்னு சொல்லி அப்செட் ஆகி உட்கார்ந்திருந்தேன்.

சட்டை போடாம ஜடா முடியோட காவி கட்டிகிட்டு வந்தவர் என் நெற்றியில் கை வைத்து உம் என தலை அசைச்சார். எனக்கு அவர் எங்கே இருந்து, எப்படி வந்தார்னுலாம் தெரியலை. திடீர்னு வந்து நெற்றியில் கை வச்சு அப்படி சொன்னார். என் கூட வந்த பையன்கிட்ட அவரை ஃபோட்டோ எடுக்கச் சொல்லி சொன்னேன். அவனும் மூன்று தடவை கிளிக் பண்ணினான். ஃபோட்டோ எப்படி வந்திருக்குன்னு பார்க்க அவன்கிட்ட ஃபோனை வாங்கி செக் பண்றேன்.. மூன்று ஃபோட்டோவும் கருப்பா இருந்துச்சு. அதுக்கு முன்னாடி நான் எடுத்த வீடியோ எல்லாம் இருந்துச்சு. அந்த புகைப்படம் மட்டும் இல்லை. அதுக்கு பிறகு, நான் எப்படி அந்த பரிகிரமா முடிச்சேன்னு தெரியலை. நார்மலான பல்ஸ் ரேட்டில் மொத்த பரிகிரமாவும் முடிச்சிட்டு பத்திரமா திரும்பி வந்துட்டேன். என் கூட வந்தவங்க எல்லாரும் உடல்வலி, காய்ச்சல்னு மாத்திரை போட்டாங்க. அதீத முதுகுவலியோட தான் டிராவல் பண்ணினேன். ஆனா, எனக்கு அதுக்கு பிறகு உடம்பில் எந்த வலியும் இல்லை.

லதா ராவ்
லதா ராவ்

அங்கே கோயில் கிடையாது, சாமி கிடையாது, பூஜை கிடையாது.. என்னை கூட்டிட்டு போயிடுப்பா.. நான் அங்கே வந்து உன்னை பார்த்தே ஆகணும்னு அவர்கிட்ட சொல்லிட்டே தான் போயிட்டு இருந்தேன். நான் இன்னைக்கு வரைக்கும் சிவன் அந்த ஜடா முடியுடன் வந்து என்னை வழிநடத்தினார்னு நினைச்சிட்டு இருக்கேன்.

நிறைய பேர் பரிகிரமா பண்ண முடியாம திரும்பிடுவாங்க. சிவனுக்கு முன்னாடி நந்தி எப்படி இருக்குமோ அதே மாதிரி அந்த மலையில் நந்தி இருக்கும். யாரும் வந்து செதுக்கலாம் இல்லை. இயல்பாகவே அவ்வளவு ஆத்மார்த்தமா இருக்கும். அவரை நம்பி அவர்கிட்ட நம்மை ஒப்படைச்சு போனா நிச்சயம் நம்மால் அவரை தரிசித்து வர முடியும்!'.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism