திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

சிந்தனை விருந்து: நீதிநூலும் நியதிகளும்!

சிந்தனைச் சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்தனைச் சிறுகதை

- பாக்கியம் ராமசாமி

நண்பன் நாராயணனுக்குப் புதுப் பிரச்னை, சமீபத்தில் அவன் வீட்டுக்கு வந்திருந்த ஓமலூர் அத்தை. ரொம்பவே ஆசாரம், மடி!

எந்நேரமும், ‘இதைத் தொடாதே, அதைத் தொடாதே...’ என்று ஏகத்துக்கும் அலட்டிக் கொண்டே இருந்தாள். அத்தை எப்போதடா ஊருக்குக் கிளம்புவாள் என்று நாராயணன் குடும்பத்தினர் தவியாய்த் தவித்தனர்.

சில நாட்கள் கழித்து, என் பெரியப்பா பிள்ளைக்குத் தொண்டையில் ஆபரேஷன் நடந்தது. ஐ.சி.யு-வில், டியூப் செருகியபடி பத்து நாள் வாசம்.

சிந்தனைச் சிறுகதை
சிந்தனைச் சிறுகதை

பார்க்கப் போயிருந்தோம். அவ்வளவு சாமானியத்தில் உள்ளே போக முடியவில்லை. ஏகப்பட்ட கெடுபிடி. செருப்புகளைக் கழற்றிவிட்டு, பிளாஸ்டிக் உறைகளை அணியச் சொன்னார்கள். நோயாளியின் அருகில், உடனே உலரும் திரவ சோப்பில் கைகளைக் கழுவிக்கொண்டு, அவர்கள் தந்த துண்டுத் துணியால் வாயையும் மூக்கையும் கட்டிக்கொண்டு, நோயாளியை ஒரேயரு நிமிடம் பார்க்க அனுமதித்து, துரத்திவிட்டார்கள்.

‘அநியாயத்துக்கு இத்தனை கெடுபிடியா?' என்று நான் கேட்டது, அங்கிருந்த நர்ஸின் காதில் விழுந்துவிட்டது. அவள் முறைப்புடன், ‘`நீங்க படிச்சவர்தானே? நோயாளியை இன்ஃபெக்ஷனில் இருந்து காப்பாற்றத்தானே, இத்தனை ஜாக்கிர தையா நடவடிக்கை எடுக்கிறோம்; அதை நீங்க அலட்சியமா, கெடுபிடிங்கறீங்களே!’’ என்றாள்.

என் மண்டையில் ஓங்கி அடித்தாற்போல் இருந்தது. நாராயணனின் அத்தைகூட மடி, ஆசாரம் என்று புலம்புவது, இன்ஃபெக்ஷன் ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தானோ?

காலைக் கழுவிக்கொண்டுதான் கோயிலில் நுழையவேண்டும்; சில கோயில்களில், சட்டையையும் கழற்றச் சொல்லுகிறார்கள். அர்ச்சகர் நீட்டுகிற தட்டைத் தொடுவதற்கு முன், உத்தரணியில் தண்ணீர் தந்து, கையைச் சுத்தப் படுத்திக்கொள்ளச் சொல்கிறார். அபிஷேகப் பாத்திரங்களை அந்த அர்ச்சகர் தொட்டுத் தூக்கும் முன் தண்ணீர் தெளிக்கிறார்.

இவை வேஷம் அல்ல; துவேஷமும் அல்ல; மூடப் பழக்க வழக்கமும் கிடையாது. ஆண்டவன் பெயரால் ஏற்பட்ட ஆரோக்கியக் குறிப்புகள்!

‘ஆசாரக் கோவை’ என்கிற நீதி நூலில், மனிதர் கடைப்பிடிக்க வேண்டிய ஆசாரங்கள் (ஒழுக்கங்கள்) ஏராளமாகக் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று...

தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண்பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல் - ஈர்ஐந்தும்
ஐயுறாது ஆடுக நீர்!


தெய்வத்தை வழிபடும்போதும், தீய கனவைக் கண்டபோதும், தூய்மை குன்றிய காலத்தும், வாந்தி எடுத்தபோதும், முடி வெட்டிக்கொண்டபோதும், உண்ணும்போதும், பொழுதேற உறங்கியவிடத்தும், புணர்ச்சிக் காலத்திலும், குணங்கெட்ட மக்கள் தீண்டியபோதும், மலசலம் கழித்த காலத்தும்... இந்தப் பத்து நேரங்களிலும் கண்டிப்பாக நீராட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.