Published:Updated:

அகத்திய முனிவரின் ஜன்ம நட்சத்திர குருபூஜை - கோலாகலமாய் நடந்தது !

நட்சத்திர குருபூஜை
News
நட்சத்திர குருபூஜை

அகத்திய முனிவரின் ஜன்ம நட்சத்திர குருபூஜை - கோலாகலமாய் நடந்தது!

கும்பகோணம் அருகே கருவளர்ச்சேரியில்  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனாகிய,  ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு  ஈசான மூலையில்  எழுந்தருளியுள்ள, அகத்தியர் - லோபாமுத்திரை சந்நிதியில் நேற்று ( 23.12.2021) மார்கழி ஆயில்யம் நட்சத்திரத்தை முன்னிட்டு, அகத்திய முனிவர் ஜன்மநட்சத்திர குருபூஜை சிறப்பாக  நடைபெற்றது.

நட்சத்திர குருபூஜை
நட்சத்திர குருபூஜை

சித்தர்கள், முனிவர்கள் வரிசையில் தலையாயவரும், தமிழுக்கும் தமிழகத்திற்கும் உரியவருமான அகத்தியப்பெருமான், பொதிகைமுனி, கும்பமுனி, தமிழ் முனிவன் என்கின்ற பல்வேறு திருநாமங்களால் போற்றப்படுகிறார்.

அகத்தியர் தொடர்புடைய சிவத்தலங்கள் மற்றும் நதிக்கரை திருத்தலங்கள் தமிழகத்தில் ஏராளமாக உண்டு. அதிலும் குறிப்பாக சோழ மண்டலப் பகுதிகளிலும், பொதிகைப் பகுதிகளிலும் நிரம்ப காணலாம்.

உலக சமத்துவத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அகத்தியர்.

அகத்தியர் வழிபாட்டினால் குரு பக்தி, வைராக்கிய பக்தி, தெளிந்த சிவஞானம், தியாக குணம், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு, தமிழ் இலக்கியம், நன்நூலறிவு, வைத்தியம், துணிவு,கற்றடங்குதல் மற்றும் மனிதநேய பரோபகாரம் போன்றவை சித்திக்கும் என்பதால் பக்தர்களால் அகத்திய மகரிஷி பரவலாகக் கொண்டாடப்படுகிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அகத்தியரின் ஜன்ம நட்சத்திர குருபூஜையை முன்னிட்டு மார்கழி மாத ஆயில்யம் நட்சத்திரத்தில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.அவ்வகையில் கருவளர்சேரி கிராமத்தில் அகத்தியரால் வழிபாடு செய்யப்பட்ட அருள்மிகு அகஸ்தீஸ்வரர் சிவாலயத்தில்  தம்பதி சமேதராக எழுந்தருளியுள்ள, அகத்தியர் லோபமுத்திரை சந்ததியில், சிறப்பு வழிபாடு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

நட்சத்திர குருபூஜை
நட்சத்திர குருபூஜை

குழந்தை பாக்கியம் வேண்டி, வெளியூர்களில் இருந்து பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும்  அகத்தியர் அடியார்கள் வந்திருந்தனர்.

அன்றிரவு வழிபாட்டில் கும்பகோணம், ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர், தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் கலந்துகொண்டு தரிசித்தார்.

இத்திருக்கோயிலில் தற்போது கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.. வருகிற தை மாதம் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.