Published:Updated:

ஶ்ரீ அகோர கணநாத மூலமந்திர ஹோமம்

கணநாத மூலமந்திர ஹோமம்
பிரீமியம் ஸ்டோரி
News
கணநாத மூலமந்திர ஹோமம்

சக்தி விகடனும் ஶ்ரீ நாராயணி நிதி லிமிடெட் நிறுவனமும் இணைந்து வழங்கிய இந்த ஹொமம்

இதழ்ப் பணியில் மட்டுமல்லாமல், இறைப் பணியிலும் சக்தி விகடன் பெரும்பங்காற்றி வருவதை வாசகர்கள் அறிவார்கள்.

அவ்வகையில், கொரோனா பெருந்தொற்று நோயின் பாதிப்பால் உலகமே அல்லலுறும் தற்போதைய சூழலில், இறையருள் கைகூடவும் இன்னல்கள் நீங்கவும் ஶ்ரீஅகோர கணநாத மூலமந்திர ஹோமம் என்னும் அற்புத வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

சக்தி விகடனும் ஶ்ரீ நாராயணி நிதி லிமிடெட் நிறுவனமும் இணைந்து வழங்கிய இந்த ஹொமம், சென்னை - கூடுவாஞ்சேரி, அருள்மிகு மாமரத்து விநாயகர் ஆலயத்தில் (26-5-2020 செவ்வாய்க்கிழமை அன்று), சிறப்புற நடந்தேறியது.

ஶ்ரீ அகோர கணநாத மூலமந்திர ஹோமம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

திருக்கோயில் சார்பில், அறங்காவலர் டி.சீனிவாசன், ஆலயத்தின் தலைமை சிவாசார்யரான முத்துக்குமார சிவாசார்யர் ஆகியோர் ஹோமத்துக்கான ஏற்பாடுகளைச் சிறப்புறச் செய்து வழிகாட்டினார்கள்.

வாசகர்கள் தாங்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்துகொண்டே இணையத்தின் வழியே வீடியோ வடிவில் இந்த ஹோம வைபவத்தில் சங்கல்பித்தும் தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். சக்தி விகடன் முகநூல் பக்கத்திலும் லட்சத் துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹோம வைபவத்தை தரிசித்தனர்.

ஶ்ரீ அகோர கணநாத மூலமந்திர ஹோமம்

கூடுவாஞ்சேரி அருள்மிகு மாமரத்து விநாயகர் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பவர். இவ்வாறு அமர்ந்திருக்கும் விநாயக அம்சத்தை அகோர கணநாத சொருபம் என்பார்கள். இவரை தரிசிப்பதும் வழிபடுவதும் மிகவும் சிறப்பாகும். இவருக்கு விசேஷமாக செய்யப் படும் ஹோமமே இந்த அகோர கணநாத ஹோமம் ஆகும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காஞ்சி மகாமுனிவர் அவர்கள் உத்தரவின்பேரில் வைதீகஶ்ரீ ஶ்ரீரங்கம் எஸ்.வி.ராதாகிருஷ்ண சாஸ்திரிகளால் வெளியிடப்பட்ட விக்னேஸ்வர மஞ்சரி என்ற புத்தகத்தில், இந்த ஹோமம் குறித்த சிறப்புகள் விளக்கப்பட்டுள்ளன.

ஶ்ரீ அகோர கணநாத மூலமந்திர ஹோமம்

26.5.20 அன்று காலை 8.30 மணிக்கு அற்புதமாகத் தொடங்கியது ஹோமம். மஞ்சள் பிள்ளையாரை எழுந்தருளச் செய்து, கணநாதரை ஆவாஹனம் செய்வித்தலோடு தொடங்கிய யாகம் புஷ்பாஞ்சலி, மகா சங்கல்பம், விரிவான ஹோம வழிபாடுகள், ஹோம பூர்ணாகுதி, ஸ்வாமிக்கு மஹா அபிஷேகம், அலங்காரம், சிறப்பு அர்ச்சனை என நிறைவாக நடைபெற்றது.

ஶ்ரீ அகோர கணநாத மூலமந்திர ஹோமம்

``இந்த ஹோமத்தினால் விளையும் நன்மைகள் அளவில்லாதவை. மகாமாரி என்னும் கிருமிகளால் உருவாகும் கடும் தொற்று நோய்கள் அண்டாமல் காக்கவும், அணுகினால் விரைவில் குணமாகவும் இந்த ஹோமம் வழி செய்யும். பீடை, தோஷம், தரித்திரம், பகை ஒழியும். சத்ரு பயம் நீங்கும். வறுமை நீங்கி இல்லத்தில் செல்வ கடாட்சம் உண்டாகும். எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஸித்தியாகும்.'' என்று இந்த ஹோமத்தின் புண்ணிய பலன்கள் குறித்து முத்துக்குமார சிவாசார்யர் விளக்கம் அளிக்க, வாசகர்கள் சிலிர்ப்புடன் நன்றியைப் பகிர்ந்துகொண்டார்கள்.

சக்தி விகடன் சார்பிலும் வாசகர்கள் நன்மைக்காக சிறப்பு வழிபாடுகள் செய்து கொள்ள இனிதே நிறைவுற்றது அகோர கணநாத மூலமந்திர ஹோம வைபவம்.