Published:Updated:

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி துணை!

ஸ்ரீ திருப்புளியாழ்வார், ஸ்ரீ வைணபெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீ திருப்புளியாழ்வார், ஸ்ரீ வைணபெருமாள்

அங்கு நல்ல நீர்நிலையோடு, சம்பும் அடர்ந்து வளர்ந்திருந்த இடத்தில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துவதைக் கண்டார்.

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி துணை!

அங்கு நல்ல நீர்நிலையோடு, சம்பும் அடர்ந்து வளர்ந்திருந்த இடத்தில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துவதைக் கண்டார்.

Published:Updated:
ஸ்ரீ திருப்புளியாழ்வார், ஸ்ரீ வைணபெருமாள்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்ரீ திருப்புளியாழ்வார், ஸ்ரீ வைணபெருமாள்

கே.கே.தங்கசாமி

ங்கள் குலதெய்வமாகவும் எப்போதும் துணையிருக்கும் காவல் தெய்வமாகவும் அருளுகிறார் ஐந்து வீட்டு சுவாமி. தென்மாவட்ட நாட்டார் தெய்வங்களில் மிகப்பிரசித்தமான இந்த தெய்வம் மண்ணுலகில் அவதரித்த கதை மெய்சிலிர்க்க வைப்பது. இன்றும் கதைப்பாடலாக எளிய மக்களிடம் உலவி வரும் ஐந்து வீட்டு சுவாமி கதையை முதலில் அறிவோம்.
ஸ்ரீ பெரியசாமி
ஸ்ரீ பெரியசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்செந்தூருக்கு தென்மேற்கே சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது செட்டியாபத்து. இங்குதான் அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை எனும் சிற்றூரைச் சார்ந்தவர் வடுகநாதர். இவருடைய துணைவியார் பொன்னம்மாள். இவர்கள் இருவரும் மதுரை வைகை ஆற்றுக்கு நீராடச் சென்றனர். அங்கு ஒரு பச்சிளங்குழந்தையைக் கண்டனர்.

தங்களின் குறை தீர்க்க கடவுள் தந்த பரிசுதான் இந்தக் குழந்தை என்று இருவரும் மகிழ்ந்தனர். அதன்பிறகு மதுரை மீனாட்சியை வழிபட்டுவிட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். தும்பைச் செடிகளின் அருகே கண்டெடுத்து வந்ததால் ‘தும்பையப்பர்’ என்று குழந்தைக்குப் பெயர் சூட்டினர். இவரை ஐயப்பர் என்றும் அழைத்து வந்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குழந்தைக்கு ஏழு வயதான நிலையில், ஐயப்பரை அழைத்துக் கொண்டு வடுகநாதரும் பொன்னம்மாளும் மீனாட்சியைத் தரிசிக்க மதுரை நகருக்குச் சென்றனர்.

ஸ்ரீ பெரிய பிராட்டி
ஸ்ரீ பெரிய பிராட்டி

விழாக்கூட்டத்தில் ஐயப்பர் காணாது போய்விட்டார். எங்கு தேடியும் குழந்தையைக் காணவில்லை. பெற்றோர்கள் அழுது புலம்பினர். கண்ணீரும் கம்பலையுமாய் ஊர் வந்து சேர்ந்தார்கள். மதுரையில் பெற்றோரைக் காணாத ஐயப்பர் அங்கு மளிகைக் கடை ஒன்றில் பணியாளராக சேர்ந்தார். மதுரை மீனாட்சியம்மை மீது அதீத பக்திகொண்டு வழிபட்டு வந்தார். அவரின் பக்தியைக் கண்ட அன்னை மீனாட்சி அவரை தினமும் கோயிலுக்கு வரச்சொல்லி ஆணையிட்டாள். அன்னையின் வாக்குப்படி ஐயப்பர் தினமும் அன்னையை தரிசித்து மகிழ்ந்தார்.

ஒரு நாள் ஐயப்பர் அன்னையை தரிசிக்க மதுரைக்கு வந்த பெற்றோரைக் கண்டார். அவர்களை ஆனந்த மிகுதியால் ஓடோடிச்சென்று தழுவிக்கொண்டார். தாய் தந்தையோடு சொந்த ஊருக்குப் புறப்பட்ட ஐயப்பரிடம் ஒரு கண்ணாடியையும் எலுமிச்சைக்கனி ஒன்றையும் கையில் கொடுத்த அன்னை மீனாட்சி, “ஐயப்பா! கனி அழுகி என்றைக்கு கண்ணாடியிலே முகம் தெரியாமல் போகிறதோ அன்று என்னிடம் வா. இப்போது ஊருக்கு சென்று வா” என்று விடை கொடுத்து அருளினாள்.

ஸ்ரீ அனந்தம்மாள்
ஸ்ரீ அனந்தம்மாள்

ஊர் வந்துசேர்ந்த ஐயப்பர், தனியிடம் ஒன்றை அமைத்து அங்கே மீனாட்சியை பூஜித்து வந்தார். தினமும் உச்சி வேளையில், அன்னையின் அருளால் அவரின் தலைக்கு மேலாக வேஷ்டித் துண்டு ஒன்று அந்தரத்தில் பறந்தபடி, பந்தல் போட்டது போல் நிழல் கொடுத்துக்கொண்டே இருக்குமாம். இப்படியான பல அருளாடல்களால் மக்களை வியப்பில் ஆழ்த்தி வந்தார் ஐயப்பர்.

ஒருநாள் கனி அழுகி இருப்பதைக் கண்டார், யாரிடமும் எதுவுமே கூறாது அன்னையைக் காண மதுரையை நோக்கிச் சென்றார். அங்கே அன்னை யைக் காணவில்லை. அன்னை யாகம் செய்து கொண்டிருக்கின்றார் என்பதை அறிந்த ஐயப்பர் அங்கேயும் சென்றார். அங்கேயும் அன்னையைக் காணவில்லை. இதனால் மனமுடைந்தார். அங்கே வளர்ந்து எரிந்து கொண்டிருந்த யாகத் தீயினுள் பாய்ந்துவிட்டார். `அம்மா... அம்மா...' என்றழைத்த மகன் தன்னைக் காணாது யாகத் தீயினுள் பாய்ந்து

விட்டான் என்பதை அறிந்த அன்னை யாக சாலைக்கு விரைந்தோடி சென்று ஐயப்பரை மீட்டார். அன்னை, தன் மகன் பக்குவம் பெற்று விட்டது கண்டு மகிழ்ந்து தன் வலதுக்கரம் நீட்ட, நீட்டிய கரத்திலே `மூவாயிரத் திவ்விய பிரபந்தம்’ எனும் ஏட்டுச் சுவடி தோன்றியது. அதை ஐயப்பரின் கையில் கொடுத்தார்.

அன்னையின் அருளால்... தினமும் உச்சி வேளையில், சுவாமியின் தலைக்கு மேலாக வேஷ்டித் துண்டு ஒன்று அந்தரத்தில் பறந்தபடி, பந்தல் போட்டது போல் நிழல் கொடுத்துக் கொண்டே இருக்குமாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு “தென் திசையை நோக்கி செல். எங்கே சம்பு அடர்ந்து வளர்ந்து நீர் நிலையுடன் திகழ, புலியும் மானும் ஒன்றாக நீர் அருந்துகின்றனவோ, அந்த இடமே நீ தங்கியிருக்க ஏற்றதாகும். அங்கிருந்தே நீ புகழ்பெறுவாய். பெரியசாமி என்று அழைக்கப்படும் உன்னை மக்கள் வழிபடுவார்கள்” என்று கூறி வாழ்த்தி விடைகொடுத்தார்.

ஸ்ரீ திருப்புளியாழ்வார்,  ஸ்ரீ வைணபெருமாள்,  ஸ்ரீ ஆஞ்சநேயர்
ஸ்ரீ திருப்புளியாழ்வார், ஸ்ரீ வைணபெருமாள், ஸ்ரீ ஆஞ்சநேயர்

அதன்படியே தென் திசை நோக்கி பயணித்த பெரியசாமி, தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் என்ற ஊரை அடைந்தார். அங்கே சோலையப்பர் என்ற அன்பரின் தொழுநோயை குணப்படுத்தியவர், அவரைத் தன் சீடராக ஏற்றுக்கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தார்.

குருவும் சீடரும் கூடங்குளம், தாமரைக்குளம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களுக்குச் சென்றனர். பின் அங்கிருந்து உவரிக்குச் சென்று ஸ்ரீசுயம்புலிங்க சுவாமியை தரிசித்தனர். ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி பெரியசாமியை வடக்கே செல்லும்படி பணித்தார். அதன்படி சுவாமிகள் குட்டம், படுக்கப்பத்து, உடன்குடி ஆகிய ஊர்களுக்குச் சென்றார். நிறைவாக செட்டியாபத்து கிராமத்துக்கு வந்தார்.

அங்கு நல்ல நீர்நிலையோடு, சம்பும் அடர்ந்து வளர்ந்திருந்த இடத்தில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துவதைக் கண்டார். `அன்னையின் ஆணைப்படி இந்த இடமே நாம் தங்குவதற்குச் சரியான இடம்' என்பதை அறிந்தவர், அங்கேயே தங்கி பல அற்புதங்களை நிகழ்த்தினார். அன்னை யின் ஆணைப்படி பெரிய பிராட்டி சந்நதியை நிறுவினார். இந்தத் தலத்தில் அன்னை உலக அன்னையாகவும், ஆதிபராசக்தியாகவும், உமா தேவியாகவும், பார்வதி தேவியாகவும் போற்றி வணங்கப்படுகிறாள். அன்னை காட்டிய மற்றொரு இடத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார், பெரியசாமி.

பெரியபிராட்டி அம்மனுக்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் சிறப்பாக பூஜை நடத்தி வழிபட்டார். சுவாமிகளின் மகிமையை அறிந்து, சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெருந்திரளாக அமாவாசை, பௌர்ணமி பூஜைகளில் பங்குபெறத் தொடங்கி னார்கள். 250 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயி லின் வளாகத்தில் 6 கோயில்கள் உள்ளன. இவை 5 கட்டடங்களில் அமைந்துள்ளன. எனவே இந்தக் கோயிலை ஐந்து வீட்டு சுவாமி கோயில் என்று அழைக்கிறோம்.

கோயிலில் பெரியசாமி சந்நதி, வைணபெருமாள் சந்நதி, அனந்தம்மாள் சந்நதி, ஆத்தி சாமி சந்நதி, திருப்புளியாழ்வார் சந்நதி, பெரிய பிராட்டி சந்நதி ஆகியவை உள்ளன. பெரியசாமி திருக்கரத்தில் சங்கு சக்கரம் ஏந்தியராய், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வினை, மனநோய் மற்றும் தீராத பிணிகளால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து வழிபட்டு, குறைகள் நீங்கப் பெறுகின்றனர். பிள்ளை வரம் தரும் தலமாகவும் இது திகழ்கிறது. இக்கோயிலில் சக்தி வழிபாடு தொன்றுதொட்டே இருந்து வருவதால், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து வள்ளியூர் செல்லும் வழியில் சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள ஊர் மெய்ஞானபுரம். இந்த ஊரிலிருந்து உடன்குடி செல்லும் வழியில் சுமார் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது செட்டியாபத்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism