Published:Updated:

திருமண வரம் அருளும் ஐப்பசி பூரத் திருக்கல்யாணம்... சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் கோலாகல ஏற்பாடு!

இந்தத் திருக்கல்யாண வைபவம், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் பெருமையை உடையது. இதில் கலந்துகொள்ளும் திருமண வரம் வேண்டும் இளம் வயதினருக்கு, விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம்.

ஐப்பசி பூரத் திருக்கல்யாண உற்சவம்
ஐப்பசி பூரத் திருக்கல்யாண உற்சவம்

ஐப்பசி மாதம், சிவபெருமான் அம்பிகை வழிபாட்டுக்கு உகந்தது. ஐப்பசி மாதம் பல்வேறு ஆலயங்களில் திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெறும். குறிப்பாக அம்மனுக்கு உகந்தது ஐப்பசி பூர நட்சத்திர தினம். அன்று, அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

Thirukalyana Utsavam
Thirukalyana Utsavam

சென்னை தங்க சாலையில் அமைந்துள்ளது, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். சென்னை பஞ்சபூதத் தலங்களில் ப்ருத்வி தலமாகப் போற்றப்படுவது இந்த ஆலயம். முன்னொரு காலத்தில் பக்தர் ஒருவர், ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் காஞ்சிபுரம் சென்று ஏகாம்பர நாதரை வழிபடுவது வழக்கம். ஒரு நாள், அவரால் பிரதோஷத்தன்று காஞ்சிபுரம் செல்ல இயலவில்லை. அவர் முதலாளியும் காஞ்சிபுரம் செல்வதைத் தடுத்தார்.

இதனால் மனம் உடைந்த பக்தர், அன்று வருத்தத்தோடு துயில்கொண்டபோது அவர் கனவில் தோன்றிய ஏகாம்பரநாதர், 'இங்கேயே ஓர் ஆலயத்தை எழுப்பு. அதில் நான் அருள்பாலிப்பேன்' என்று கூறினார். அவ்வாறே அந்த பக்தரும் ஆலயம் எழுப்ப, அந்த ஆலயம் இன்றும் சிறப்போடு இயங்கிவருகிறது.

Thirukalyana Utsavam
Thirukalyana Utsavam

சென்னை சௌகார்பேட்டை தங்கசாலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில், ஈசன் ஏகாம்பரநாதராக அருள்பாலிக்கிறார். அன்னை காமாட்சி அம்மனாக அருள்புரிகிறாள். இந்தத் தலம் நவகிரக பரிகாரத்தலமாகவும் திருமணத் தடை நீக்கும் தலமாகவும் திகழ்கிறது. இந்தத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் லிங்க சத்தி அம்மன் என்னும் போக சத்தி அம்மனை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.

இல்லறம் செழிக்க அருளும் காந்திமதி அம்மன் திருக்கல்யாண உற்சவம்! - நெல்லையில் கோலாகலம்

இந்த அம்மனுக்கு, ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் பூர நட்சத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறும். போக சக்தி அம்மனுக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறும் அபூர்வத் தலங்களுள் இதுவும் ஒன்று. இந்த ஆண்டு, ஐப்பசி மாதம் 7-ம் தேதி (24.10.19) அன்று வியாழக்கிழமை, ஏகாதசி திதியுடன் கூடிய பூரம் நட்சத்திர தினத்தில் அமிர்த சித்த யோகத்துடன் கூடிய முகூர்த்தமாகிய மாலை7.00 மணிக்கு மேல்

Thirukalyana Utsavam
Thirukalyana Utsavam

8.30 மணிக்குள் ஏகாம்பரேஸ்வரர் உடனுறை லிங்கசத்தி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற இருக்கிறது. இந்தத் திருக்கல்யாண வைபவம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் பெருமையை உடையது. இதில் கலந்துகொள்ளும் திருமண வரம் வேண்டும் இளம் வயதினருக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதிகம்.