Published:Updated:

அம்பாள் மகிமை!

முப்பெருந்தேவியர்
பிரீமியம் ஸ்டோரி
முப்பெருந்தேவியர்

நவராத்திரி - தேவியர் வாகனம் -அம்பாள் தகவல்கள்

அம்பாள் மகிமை!

நவராத்திரி - தேவியர் வாகனம் -அம்பாள் தகவல்கள்

Published:Updated:
முப்பெருந்தேவியர்
பிரீமியம் ஸ்டோரி
முப்பெருந்தேவியர்

முப்பெருந்தேவியரின் வாகனங்களும் தத்துவம் உணர்த்தும். துர்காதேவி, சிம்மவாஹினி. தீமைகளை எதிர்கொள்ளும் போதும் அவற்றை எதிர்த்துப் போராடும் போதும், சிங்கம் போன்ற வீரமும் கம்பீரமும் தேவை.

அம்பாள் மகிமை!

காலட்சுமி, ஆந்தை மீது ஆரோகணித்து வருபவள். இருளிலும் துல்லியமான பார்வையைக் கொண்டு விழித்திருக்கும் ஆந்தையே, திருமகளின் வாகனம். எப்போதும் விழிப்பு உணர்வுடனும் துல்லியமான கண்ணோட்டத்துடனும் இருப்பவர்க்கே செல்வம் கைகூடும்.சரஸ்வதிதேவி அன்னவாஹினி. ஹம்ஸம் என்கிற அன்னப் பறவைக்கு, சற்றே வேறுபட்ட இயல்பு உண்டு.

நம்முடைய பண்டைய இலக்கியங்கள், `பாலும் நீரும் பிரித்து உண்ணும் அன்னப் பறவை’ என்கின்றன. நன்மையும் தீமையும் கலந்திருக்கும் உலகில், தீமைகளை நீக்கிவிட்டு, நன்மைகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளும் அறிவே, ஞானத்தைத் தரும். அத்தகைய ஞானமே, அமைதியையும் ஆனந்தத் தையும் கொடுக்கும். அமைதியும் ஆனந்தமுமான நிலையே, லலிதாம்பிகையான ஆதிபராசக்தி அருளும் நிலை!

- ராஜூ, சென்னை-44

தெய்வ வடிவம் தருவாள்!

க்தன் ஒருவன், அம்பிகையின் திருமுன்னர் சென்றான். அவளைப் பார்த்த பரவசத்தில் அவனுக்கு வாய் குழறியது.

`அம்மா, நான் உன் அடிமை’ என்று கூற நினைத்தான். அதற்காக அவளை அழைத்தான். ஆனால், வாய் குழறலிலும் தடுமாற்றத்திலும், எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கே நிறுத்தாமல், தட்டித் தட்டிப் பேசிவிட்டான். விளைவு?

அவன் குழறிக் குழறிப் பேசியதை, அம்பாள் வேறுவிதமாகக் காதில் வாங்கிக்கொண்டாள். குழந்தை கேட்கிறானே என்று அவன் கேட்டதை அப்படியே கொடுத்துவிட்டாள்.

`பவானி, த்வம் தாசே மயீ’ - இது அவன் சொல்ல நினைத்தது. இதன் பொருள்... `பவானியே, நான் உனது அடிமை’ என்பது. பதற்றத்தில், அவன் சொன்னது... ‘பவானித்வம் தாசே மயீ’ - அதாவது, பவானி என்று விளித்து நிறுத்தி, அடுத்துத் தொடராமல், அவசரத்தில் பவானித்வம் என்று சேர்த்துவிட்டான்.

பவானி என்பது அம்பாளின் திருநாமம்; பவானித்வம் என்பது அவளாக இருக்கும் தன்மை! பவானித்வம் என்பது அவள் காதில் விழுந்ததும் என்ன ஏது என்று யோசிக்கவில்லை.

`ஓஹோ, அம்பிகையாக இருக்கும் தன்மையைக் கேட்கிறான் போலும்’ என்று உடனடியாக அந்தத் தன்மையை அவனுக்குக் கொடுத்துவிட்டாளாம். இதனை ஆதிசங்கரர் பாடுகிறார். இதையே தான் அபிராமிபட்டரும், `தெய்வ வடிவம் தரும்’ என்று போற்றுகிறார்.

- சி.அனு, சென்னை-44

அம்பாள் மகிமை!

கிரக தோஷங்கள் நீங்கும்!

ஜகத் கர்த்ரீம் ஜகத்தாத்ரீம்

ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி:

ஸம்ஸ்துதாம் பத்ராம்

வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்

கருத்து: ஜகத்தை உருவாக்குபவளும், ஜகத்தை ரட்சிப்பவளும், உலகை கடைசியில் சம்ஹரிப்பவளும், மகரிஷிகளால் ஸ்தோத்திரம் செய்யப்பட்டவளும், பக்தர்களுக்கு மங்களத்தை அளிப்பவளும், மோக்ஷத்தைக் கொடுப்பவளுமாகிய தாயே... உன்னை வணங்குகிறேன்.நவராத்திரி வழிபாட்டின்போது, தேவி அஷ்டகத்தின் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி அம்பாளை வழிபடுங்கள். இதனால் கிரக தோஷங்களும், சுமங்கலி கோபம், பசுவின் சாபம் போன்றவையும் விலகும். சகல நலன்களும் கைகூடும்.

நவராத்திரியில் தேவாரமும் திருவாசகமும்!

செம்மொழியான தமிழ் மொழியில், திருமுறையாம் தேவாரத்தில், அம்பாளைப் போற்றுகிற பதிகங்கள் பல உண்டு. சம்பந்தர் பெருமான் பாடிப் பரவிய, `இடரினும் தளரினும் எனதுறு நோய்’ எனத் தொடங்கும் பாடலை, நவராத்திரி பூஜையில் ஆத்மார்த்தமாகப் பாடுங்கள். பொன்னையும் பொருளையும் அள்ளித் தருவாள் அன்னை!

`திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்’ என்பது சத்திய வாக்கு. `வளைந்தது வில்லு விளைந்தது பூசல்’ எனத் தொடங்கும் பாடலைப் பாடி, அம்பிகைக்கு உரிய பூக்களைச் சாத்தி, நைவேத்தியங்கள் படைத்துப் பிரார்த்திக்க, எதிரிகள் நம்மிடம் சரணடைவார்கள்.

அதேபோல், `சடையா யெனுமால் சரண் நீ யெனுமால்’ எனும் பதிகத்தைப் பாடி, சுமங்கலிப் பெண்களுக்கு, மஞ்சள் சரடு, ஜாக்கெட் பிட், குங்குமம் ஆகியவற்றை வழங்க, தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்.

`பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்’ எனும் பதிகத்தைப் பாடி, அம்பிகையை ஆராதனை செய்தால், உங்கள் குழந்தைகள், கல்வி மற்றும் கலைகளில் ஞானம் பெற்று, சிறந்து விளங்குவார்கள்!`கண் காட்டும் நுதலானும்’ எனும் பதிகம் பாடி, அம்பிகையை வணங்கி, அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்கு ஆடை வழங்கினால், பிள்ளை வரம் கிடைக்கப் பெறுவர்.

- அங்கையற்கண்ணி, நாமக்கல்